என் மலர்
நீங்கள் தேடியது "rescue operation"
- 27 தீயணைப்பு வாகனங்கள் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.
- சேரியில் சீரற்ற மின் கம்பிகள் மற்றும் பல எல்பிஜி சிலிண்டர்கள் காணப்பட்டன
டெல்லியின் ரோகிணி செக்டார் -17 இல் அமைந்துள்ள குடிசைப் பகுதியில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், இரண்டு சிறு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
டெல்லி தீயணைப்பு சேவை (DFS) அதிகாரிகளின் கூற்றுப்படி, தீ மிக வேகமாகப் பரவியதால் 800க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின.
தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு காலை 11:55 மணிக்கு தகவல் கிடைத்தது. 27 தீயணைப்பு வாகனங்கள் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. தீயை முழுமையாக அணைக்கும் பணி இன்னும் நடந்து வருகிறது.
இரண்டரை வயது மற்றும் மூன்று வயதுடைய இரண்டு குழந்தைகளின் உடல்கள் தீயில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி அமித் கோயல் தெரிவித்தார்.
குடிசைப் பகுதியின் முன்புறத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் உயரமான சுவர்கள் இருந்ததால், தீயணைப்பு வாகனங்கள் உள்ளே நுழைவதில் தாமதம் ஏற்பட்டதால், தீயை அணைப்பது கடினமாக இருந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையின்படி, சேரியில் சீரற்ற மின் கம்பிகள் மற்றும் பல எல்பிஜி சிலிண்டர்கள் காணப்பட்டன, இதன் காரணமாக தீ வேகமாக பரவியிருக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தரைமட்டமான கட்டிட இடிபாடுகளில் 15-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டுள்ளனர்.
- கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்தக் கட்டிடம் தரைமட்டமான நிலையில், உள்ளே இருந்த 15-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர், கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 12 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளில் மொத்தம் நான்கு குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மீட்புப் பணிகளை பார்வையிட்டார். மேலும் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
- மும்பை வழியாக பயணித்த சீன கப்பலிலிருந்து உதவி கோரி இந்த மையத்திற்கு ஒரு செய்தி வந்தது
- அன்றிரவு முழுவதும் வானிலை சாதகமாக இல்லை
இந்திய கடல்சார்ந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கை காத்தல் மற்றும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டது இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard). இந்திய கடல் எல்லை பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் செயலாற்ற அதிகாரம் உள்ள இந்த அமைப்பு 1977ல் தொடங்கப்பட்டது.
இப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவது மும்பையிலுள்ள கடற்சார் மீட்பு நடவடிக்கை ஒன்றிணைப்பு மையம் (Mumbai Rescue Coordination Centre).
அரபிக்கடலில் மும்பை வழியாக பயணித்த எம்வி டாங் ஃபேங் கான் டான் நம்பர் 2 (MV Dong Fang Kan Tan No 2) எனும் சீன ஆராய்ச்சி கப்பலிலிருந்து இவர்களுக்கு ஒரு செய்தி வந்தது. அந்த கப்பல் சீனாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணிக்கும் போது இன் வெய்க்யாங் (Yin Weigyang) எனும் ஒரு மாலுமிக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலியுடன் கூடிய மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் அவருக்கு உடனடி மருத்துவ உதவி வேண்டி, அக்கப்பலிலிருந்து உதவி கோரப்பட்டது.
அந்த சீன கப்பல், அரபிக்கடல் பகுதியில் 200 கிலோ மீட்டர் தள்ளி நிறுத்தப்பட்டிருந்தது. முழு இருளில் இருந்த அன்றிரவு முழுவதும் வானிலையும் சாதகமாக இல்லை.
இருப்பினும் அந்த பயணியை காக்க இந்திய கடலோர காவல்படை தீவிரம் காட்டியது. இதனைத்தொடர்ந்து, மும்பையிலுள்ள மீட்பு நடவடிக்கை ஒன்றிணைப்பு மையத்தை சேர்ந்த நிபுணர்கள், நேரத்தை வீணாக்காமல் அவரை காப்பாற்ற வான்வழியாக விரைந்தனர்.
ஸிஜி ஏஎல்ஹெச் எம்கே-3 (CG ALH MK-III)எனும் ஹெலிகாப்டரில் கப்பலுக்கு விரைந்து சென்று அவரை கப்பலிலிருந்து தூக்கி அவசரகால மருத்துவ உதவிகளை செய்தனர். அவர் அபாய கட்டத்தை தாண்டியதும் அவரை மீண்டும் அந்த கப்பலின் மருத்துவ நிர்வாக முகவரிடம் ஒப்படைத்தனர்.
இந்த பேருதவிக்கு சீனா தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
"நாங்கள் காக்கிறோம்" (We Protect) எனும் குறிக்கோளுடன் செயலாற்றும் இந்திய கடலோர காவல்படை இந்த நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. சவாலான வானிலையில் கடும் இருள் சூழ்ந்த இரவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்த வீடியோவுடன் வெளியிட்டிருக்கும் செய்தியில் இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
சீனாவுடன் எல்லைப் பிரச்னைகள் இருந்து வந்தாலும் ஆபத்தான நேரங்களில் உதவி செய்யும் நண்பனாக வாழும் இந்தியர்களின் பண்பை இது பறைசாற்றுவதாக வைரலாகும் வீடியோவை காண்பவர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.
In a daring operation, @IndiaCoastGuard #ALH MK-III evacuates a #Chinese national from MV Dong Fang Kan Tan No 2 around 200 Km mid-sea amidst challenging night conditions & extreme weather. Patient was reported chest pain &cardiac arrest symptoms.#SAR #ArabianSea#MaritimeSafety pic.twitter.com/THG0nBZjhi
— Indian Coast Guard (@IndiaCoastGuard) August 17, 2023
- முத்தியால்பேட்டை பி.ஆர்.என். கார்டன் பகுதியில் 54 குடும்பத்தினர் மீட்கப்பட்டு உள்ளனர்.
- புயலால் விழுந்த 75 மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை மாநகரில் வெள்ளத்தில் சிக்கிய 1000 பேரை பேரிடர் மீட்பு படையினருடன் சேர்ந்து போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர்.
விருகம்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சாலிகிராமம் தசரதபுரத்தில் வீட்டிலேயே குழந்தை பெற்ற தாயையும், குழந்தையையும் போலீசார் மீட்டனர். முத்தியால்பேட்டை பி.ஆர்.என். கார்டன் பகுதியில் 54 குடும்பத்தினர் மீட்கப்பட்டு உள்ளனர்.
மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் 25 பேர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள். கோட்டூர்புரம் பகுதியில் 25 பேரும், நீலாங்கரை பகுதியில் 6 பேரும் வீடுகளில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 30 பேர், கோட்டூர்புரம் பகுதியில் 15 பேர் என சென்னை மாநகர் முழுவதும் சுமார் 1000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். புயலால் விழுந்த 75 மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
கணேசபுரம், செம்பியம், வில்லிவாக்கம், துரைசாமி சுரங்கப்பாதைகள், ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை, சி.பி.சாலை சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப் பாதை, திருவொற்றியூர் மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, லயோலா சுரங்கப் பாதை உள்ளிட்ட 10 சுரங் கப்பாதைகள் மூடப்பட்டன.
சென்னையில் போலீஸ் ஏட்டு ருக்மாங்கதன் உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.
- அதிகாரிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார்கள்.
- டிராக்டர்களில் சென்று உணவு உள்ளிட்ட பொருட்களை போலீசாரும் மீட்பு படையினரும் வழங்கி வருகிறார்கள்.
நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் 4 மாவட்ட மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட மக்களை வெள்ள பாதிப்பு பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீ வைகுண்டம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களை சூழ்ந்து உள்ள வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில் அங்கு வசிக்கும் பொதுமக்கள் 5-வது நாளாக தவித்து வருகிறார்கள்.
இப்படி வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பதற்கும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் போலீஸ் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் 3500-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தென் மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் தலைமையில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 4 போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்ட போலீசாருடன் பக்கத்து மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி உள்ள பல கிராமங்களில் வெள்ளம் முழுமையாக வடியாத நிலையில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரத்தில் மக்களை சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
அதுபோன்ற கிராமங்களுக்கு டிராக்டர்களில் சென்று உணவு உள்ளிட்ட பொருட்களை போலீசாரும் மீட்பு படையினரும் வழங்கி வருகிறார்கள்.
- டெல்லியில் 40 அடி போர்வெல் குழியில் குழந்தை ஒன்று விழுந்தது.
- குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.
புதுடெல்லி:
மூடப்படாத போர்வெல் குழிகளில் குழந்தைகள் தவறி விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் விகாஸ்புரி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட கேசாபூர் மண்ட என்ற பகுதியில் நீர்வளத் துறைக்குச் சொந்தமான ஒரு போர்வெல் குழி உள்ளது. இந்தக் குழியில் குழந்தை ஒன்று தவறி விழுந்துள்ளது.
தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் படையினர் அங்கு முகாமிட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#WATCH | Delhi: Rescue operation underway at the site where a child fell into a 40-foot-deep borewell inside the Delhi Jal Board plant near Keshopur Mandi. pic.twitter.com/0iG2PjbyFB
— ANI (@ANI) March 10, 2024
- இந்த சம்பவம் குறித்து, டெல்லி அமைச்சர் அதிஷி, தலைமைச் செயலாளர் நரேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெல்லியில் விகாஸ்புரி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கேசாபூர் மண்ட என்ற பகுதியில் நீர்வளத் துறைக்குச் சொந்தமான ஒரு ஆழ்துளைக் கிணறு ஒன்று உள்ளது. இந்தக் குழியில் குழந்தை ஒன்று தவறி விழுந்ததாக செய்திகள் வெளியானது.
தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் படையினர் அங்கு முகாமிட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நபர் இன்று பிற்பகல் 3 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார். அப்பொழுது குழியில் விழுந்தது குழந்தை இல்லை, 30 வயது மதிப்புடைய நபர் என்று தெரிய வந்துள்ளது.
அந்த நபர் எப்படி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார் என்றும், இறந்த நபரை அடையாளம் காணும் முயற்சிகளும் நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, டெல்லி அமைச்சர் அதிஷி, தலைமைச் செயலாளர் நரேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார்களால் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் உடனடியாக சீல் வைக்கப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
- பெய்லி பாலம் அமைப்பதற்காக, டெல்லி, பெங்களூருவில் இருந்து ராணுவத்தின் பொறியியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர்.
- இந்த பாலம் 24 டன் வரை எடையை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டது.
வயநாட்டில் சூரல்மலை, முண்டகை கிராமங்களை இணைக்கும் வகையில், சூரல்மலையில் உள்ள ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. மேலும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும், கொட்டும் மழைக்கு மத்தியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி ஆற்றை கடந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சூழல்மலை-முண்டகை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மீட்பு பணியை துரிதப்படுத்தும் வகையில் ஆற்றின் குறுக்கே பெய்லி பாலம் அமைப்பதற்காக, டெல்லி, பெங்களூருவில் இருந்து ராணுவத்தின் பொறியியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர்.
பெய்லி பாலத்திற்கு தேவையான உபகரணங்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ராணுவ வாகனங்கள் மூலம் சூரல்மலை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இரவு, பகலாக மழையை பொருட்படுத்தாமல் ஆற்றுக்குள் இறங்கி தற்காலிக இரும்பு பாலத்தை அமைக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.
ராணுவத்தின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. நேற்று மாலை 5.50 மணிக்கு தற்காலிக பெய்லி பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து பெய்லி பாலத்தில் முதல் வாகனமாக ராணுவ மேஜர் ஜெனரல் மேத்யூஸ் தனது வாகனத்தில் சென்றார். தொடர்ந்து ராணுவ வாகனம், பொக்லைன் எந்திரங்கள் பாலத்தில் சென்றன.
20 மணி நேரத்திற்குள் தற்காலிக பாலத்தை ராணுவத்தினர் வெற்றிகரமாக அமைத்து உள்ளனர். இதன் நீளம் 190 அடியாகும். இந்த பாலம் 24 டன் வரை எடையை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டது. இதன் மூலம் சூரல்மலை-முண்டகை இடையே மீட்பு பணிக்காக வாகனங்கள் சென்று வருகின்றன.
- உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 3 பேரை கடலோர காவல்படையினர் கண்டுபிடித்தனர்.
- வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் 3 பேர் அருகே நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடி வந்த 3 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முண்டகையில் இருந்து 6 கி.மீ., தொலைவில் வெள்ளரிமலை பகுதியில் சூஜிப்பாறை நீர்வீழ்த்தி உள்ளது.
இங்குள்ள பாறைகளின் மேல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 3 பேரை கடலோர காவல்படையினர் கண்டுபிடித்தனர்.
வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் 3 பேர் அருகே நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அதனால், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 3 பேரையும் மீட்பதற்கான வாய்ப்பு குறித்து இந்திய ராணுவத்தினர் திட்டமிட்டு வருகின்றனர்.
மேலும், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 3 பேரில் ஒருவரின் காலில் காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரும் கடந்த 5 நாட்களாக தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வந்துள்ளனர்.
- ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது பெண் குழந்தை தவறி விழுந்தது.
- இதையடுத்து, அந்தக் குழந்தையை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.
ஜெயப்பூர்:
ராஜஸ்தானின் டவுசா மாவட்டம் பாண்டூகி என்ற இடத்தில் நேற்று மாலை 6 மணியளவில் 35 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது பெண் குழந்தை தவறி விழுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மேலாண் மீட்புப்படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இதுதொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், சுமார் 15 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளது. குழந்தை விழுந்த இடத்தின் பக்கத்து நிலத்தில் ஜே.பி.சி. இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது என தெரிவித்தனர்.
- எக்ஸ்பிரஸ் ரெயில் சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- ரஷியாவுக்கும், கிரீமியாவுக்கும் இடையில் கெர்ச் ஜலசந்தியில் (Kerch Strait) உள்ளது
- இந்த விபத்தில் 1 ஊழியர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருங்கடலில் 29 ஊழியர்கள் சென்ற 2 ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் புயலில் சிக்கி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் இருந்து எண்ணெய் கசிந்து வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) ரஷ்யாவுக்கும், கிரீமியாவுக்கும் இடைப்பட்ட கெர்ச் ஜலசந்தியில் (Kerch Strait) ஏற்பட்ட கடுமையான புயலின் போது 15 ஊழியர்களுடன் ஆயிரக்கணக்கான டன் எரிபொருள் எண்ணெய்யை ஏற்றிச் சென்ற ரஷ்ய எண்ணெய் கப்பல் [வோல்கோனெப்ட் 212] இரண்டாக பிளந்து அதில் இருந்த எண்ணெய் கடலில் கசியத் தொடங்கி உள்ளது. இந்த விபத்தில் 1 ஊழியர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
14 ஊழியர்களுடன் சென்ற இரண்டாவது டேங்கர் கப்பலும் [வோல்கோனெப்ட் 239] புயலால் சேதம் அடைந்து அதே பகுதியில் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இழுவைப் படகுகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்களை உள்ளடக்கிய குழு மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாக ரஷிய ஊடகம் தெரிவித்துள்ளது.