search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "residential"

    • திருவாடானை அருகே சமத்துவபுரத்தில் தொடக்கப்பள்ளி, குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    திருவாடானை

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சமத் துவபுரம் பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு முறையாக கழிவுநீர் மற்றும் வடிகால் கால்வாய் வசதிகள் அமைக்காததால் தற்போது பெய்து வரும் தொடர் மழை யின் காரணமாக வீடுகளுக் குள்ளும் வீடுகளை சுற்றியும் மழைநீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் குடியிருக்க முடியாமல் அப்பகுதி மக் கள் பரிதவித்து வருகின்ற னர். மேலும் அங்குள்ள குழந்தைள் மற்றும் பெரிய வர்கள் ஏராளமானோர் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்ற னர். மேலும் அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழைநீர் புகுந்துள்ளதால் மாணவர் கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் கண்துடைப் பிற்கு மட்டுமே வந்து பார் வையிட்டு செல்வதாகவும் எந்த நடவடிக்கையும் எடுப் பதில்லை என வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களை காக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • குப்பைக்கு தீ மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
    • இதனை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ளது இடையர்பாளையம் கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகிறார்கள்.

    சிக்கதாசம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட இந்த கிராமத்தில் குப்பைகளை முறையாக சேகரிக்காமல் குவியல் போன்று குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் இந்த குப்பைகளுக்கு நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் சிலர் தீ வைத்து சென்றுள்ளனர். தீ அந்த பகுதி முழுவதும் பற்றி எரிந்து, அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    இடையர்பாளையம் பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக மாறி மக்கள் மூச்சு விடவே சிரமப்பட்டனர்.

    இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே அப்பகுதி மக்கள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து திடீரென போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    மக்களின் போராட்டம் பற்றி அறிந்ததும், போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    அதிகாரிகள் காலையில் அந்த பகுதியில் உள்ள அனைத்து குப்பைகளையும் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • குப்பைகள் மட்டுமின்றி இறந்து போன விலங்குகளையும் கொண்டு வந்து சிலர் வீசுகின்றனர்.
    • சாய் குரு கார்டன் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    பல்லடம் : 

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சாய் குரு கார்டன் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள ஓடையில் குப்பைகள் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகள் மட்டுமின்றி இறந்து போன விலங்குகளையும் கொண்டு வந்து சிலர் வீசுகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் வசிக்கவே இயலாத சூழ்நிலை நிலவுவதாக பலமுறை புகார் அளித்தும் குப்பைகள் அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • மழைக்காலத்திலும் தண்ணீர் தேங்கி, பொதுமக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு வருகின்றது.
    • நடவடிக்கை எடுக்காததால் அந்த வார்டு பொதுமக்கள் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி, 14-வது வார்டுக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் முறையான வடிகால் அமைக்கப்படாத காரணத்தினால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் தண்ணீர் தேங்கி, பொதுமக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு வருகின்றது.

    இது சம்பந்தமாக முதல் மன்ற கூட்டத்திலேயே எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 14-வது வார்டு உறுப்பினர்ஜகபர் அலி கோரிக்கை வைத்து, பேரூராட்சி மன்றத்தின் 27-வது தீர்மானமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மழைக்காலம் நெருங்குவதை கருத்தில் கொண்டு இரண்டு மாதங்களுக்கு முன்னரே 14-வது வார்டு பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

    இருந்தாலும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அந்த வார்டு பொதுமக்கள் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர், பேரூராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களிடமிருந்து மனுவை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கப்படாவிட்டால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது.
    • இந்த நிலையில் பி. நல்லாகவுண்டம்பட்டி ஊராட்சியில் உள்ள பழைய காலனி பகுதியில் கடந்த 20 நாட்களாக குடியிருப்புகளில் ஊற்றெடுத்து தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த 3 நாட்களாக மழை இல்லாததால் ஒரு சில இடங்களில் தண்ணீர் வடிந்து வருகிறது.

    இந்த நிலையில் பி. நல்லாகவுண்டம்பட்டி ஊராட்சியில் உள்ள பழைய காலனி பகுதியில் கடந்த 20 நாட்களாக குடியிருப்புகளில் ஊற்றெடுத்து தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் இங்கிருந்து தண்ணீர் செல்லும் வாய்க்கால்களை அருகே உள்ளவர்கள் அடைத்து உள்ளதால் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

    எனவே உடனடியாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடியிருப்பு சுற்றியுள்ள பகுதியில் உள்ள மழை நீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்க்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.
    • ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகள் வீடுகளை ஒதுக்கீடு பெற பயனாளி பங்களிப்பு தொகையாக ரூ.73 ஆயிரத்தை செலுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட வல்லம் அய்யனார் கோவில் திட்டப்பகுதியில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளை ஒதுக்கீடு பெறுவதற்கு நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்க்கும் குறைவாக இருத்தல் வேண்டும். மேலும், சொந்த நிலம் மற்றும் வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் குடும்ப தலைவர் மற்றும் தலைவி ஆகியோரின் ஆதார் அடையாள அட்டை, உணவுப் பங்கீடு அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களின் நகல்களை இணைத்து தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அய்யனார் கோவில் திட்டப் பகுதியிலுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை, அலுவலக வேலை நாட்களில் நாளை வரை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அணுகி பயன்பெறலாம். தகுதியான பயனாளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கப்பட உள்ளன. ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகள் வீடுகளை ஒதுக்கீடு பெற பயனாளி பங்களிப்பு தொகையாக ரூ.73 ஆயிரத்தை செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8667350694, 8667756031 மற்றும் 8523962235 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கொடைக்கானலில் நகரப்பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பெர்ன்ஹில் ரோடு பகுதியில் ஒரு குடியிருப்புக்குள் நுழைந்த காட்டெருமை அங்குள்ள புற்களை மேய்ந்ததோடு மலர்ச்செடிகளையும் மிதித்து நாசம் செய்தது. இந்த ஒரு காட்டெருமை மட்டும் அடிக்கடி இந்த பகுதியில் நுழைந்து பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    கொடைக்கானல் வனத்துறையினர் இதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.கொடைக்கானல் வனப்பகுதியில் புல்வெளியை உருவாக்கி வனவிலங்குகள் காட்டைவிட்டு வெளியேறாமல் செய்வதில் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததே இதற்கு காரணம் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    ×