search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "retired judges"

    பிரபலங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் டுவிட்டர் மூலம் நடத்திவரும் #MeToo புகார் தொடர்பாக விசாரிக்க 4 ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படும் என மத்திய மந்திரி மேனகா காந்தி தெரிவித்துள்ளார். #committeeof #retiredjudges #publichearings #MeToocases #ManekaGandhi
    புதுடெல்லி:

    அமெரிக்காவில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களின் முகத்திரையை கிழிப்பதற்காக பாதிக்கப்பட்ட பிரபலங்கள் #MeToo (நானும் பாதிக்கப்பட்டேன்) என்னும் பெயரில் டுவிட்டர் மூலம் பிரசார இயக்கத்தை தொடங்கினர்.
     
    அதேவேளையில், இந்திய திரையுலகிலும் இந்த #MeToo இயக்கம் வேரூன்ற ஆரம்பித்தது. பாலிவுட் நாயகி தனுஸ்ரீ தத்தா, பாடகி சின்மயி உள்ளிட்டோர் பரபரப்பு புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

    அவ்வகையில், முன்னர் பிரபல பத்திரிகையாளராக இருந்து, பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். 



    இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைதியாக இருப்பது ஏன்? எம்.ஜே.அக்பர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இதே கோரிக்கையை மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியும் வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், பிரபலங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் டுவிட்டர் மூலம் நடத்திவரும் #MeToo பிரசாரம் தொடர்பாக பொது விசாரணை செய்ய 4 ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படும் என மத்திய மகளிர் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்துள்ளார். 

    பாதிக்கப்பட்ட பெண்கள் கூறி வரும் குற்றச்சாட்டுகளை நான் நம்புகிறேன். அவர்களின் வலியும் வேதனையும் எனக்கு புரிகிறது. இந்த குழுவில் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்துறை வல்லுனர்களும் இடம்பெறுவார்கள்.  #MeToo பிரசார இயக்கம் தொடர்பான புகார்களை இந்த குழுவினர் விசாரிப்பார்கள் என மேனகா காந்தி குறிப்பிட்டுள்ளார். #committeeof #retiredjudges #publichearings #MeToocases #ManekaGandhi
    ×