search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Retired Teachers"

    • ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் சேவை தேவைப்படுகிறது.
    • மண்டல வாரியாக நடைபெறும் கலந்தாய்வு தேர்வில் பங்கேற்கலாம்.

    புதுச்சேரி:

    புதுவை பள்ளி கல்வித் துறை இயக்குனர் பிரிய தர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை பள்ளி கல்வி நேரடி துறை, 2023-24ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை நடத்துவதற்கு அல்லது மண்டல நேரடி ஆள்சேர்ப்பு மூலம் பணியி டங்கள் நிரப்பப்ப படும் வரை இதில் எது முந் தையதோ அதுவரை அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் சேவை தேவைப்படுகிறது.

    இந்த பணிக்கு விண்ணப்பிப் போர் 1.7.2023 தேதியின்படி 65 வயதை கடந்திருக்கக் கூடாது. சமீபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நியமனத்தின்போது, அவர்களுக்கு மாதத்திற்கு ரூ. 22 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். அவர்கள் அந்தந்த பிராந்தியத்தில் உள்ள பள்ளிகளில் பணியில் ஈடுப டுத்தப்படுவார்கள். ஆர்வ முள்ளவர்கள் மண்டல வாரியாக நடைபெறும் கலந்தாய்வு தேர்வில் பங்கேற்கலாம்.

    நேர்காணல் நடைபெறும் தேதி முறையே மண்டல அலுவலகங்கள் மூலம் தெரிவிக்கப்படும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அசல் ஆர்டர்கள். சான்றிதழ்க ளுடன், ஓய்வூதிய ஆணை, வயது மற்றும் தகுதி சான்றி தழ்க சான்றொப்ப மிடப்பட்ட நகல்களை கொண்டு வர வேண்டும். நேர்காணல் கலந்துகொள்ள பயணப்படி இல்லை. காரணங்கள் எதுவும் கூறாமல் தேர்வு செயல்முறையை ஒத்தி வைக்க அல்லது ரத்து செய்ய கல்வித்துறைக்கு உரிமை உள்ளது.

    புதுவையில் வாழ்க்கை அறிவியல் - 16, உடல் அறிவியல் - 23, சமூக அறிவியல் - 41 என 80 ஆசிரியர்கள், காரைக்காலில் கணிதம் - 10, வாழ்க்கை அறிவியல் - 13, உடல் அறிவியல் - 14. சமூக அறிவியல் - 24, பிரெஞ்சு - 1 என 62 ஆசிரியர்கள், மாகியில் கணிதம் -4, வாழ்க்கை அறிவியல்-2, சமூக அறிவியல்-5, பிரெஞ்சு - 1 என 12 ஆசிரியர்கள் என மொத்தம் 154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்க ளுக்கு தகு தியு ள்ளவர்கள் விண்ணப் பிக்கலாம். புதுவையில் பள்ளி கல்வி இயக்குநரகம், பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டுகல்விவளாகம், அண்ணா நகர் புதுச்சேரி - 60.5005 என்ற முகவரியி லும், காரைக்காலில்துணை இயக் குனர் (மேல்நிலை கல்வி). தலத்தெரு, காரைக்கால் என்ற முகவரி யிலும், மாகியில் மண்டல அலுவலர் அலுவலகத்திலும் நேர்க் காணல் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கடந்த செப்டம்பர் 25ந் தேதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேர்காணல் மூலம் 77 விரிவுரையாளர் பணியிடங் களை ஓய்வு பெற்ற ஆசிரி யர்களை கொண்டு நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. இதற்கு இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜன நாயக வாலி பர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் நேர்காணல் ரத்து செய்யப்பட்டது.

    தற்போது 154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்ப மீண்டும் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது பி.எட் முடித்து ஆசிரியர் தகுதி தேர் வில்தேர்ச்சி பெற்ற பட்டதா ரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • திண்டுக்கல் மாவட்ட ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் ஒன்றிய அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மருத்துவகாப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களையவேண்டும். 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கவேண்டும்.

    3 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்கவேண்டும். குடும்ப நலநிதியை வழங்கவேண்டும்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அமல்ராஜ், ஜெயசீலன், நிர்வாகிகள் ஜேம்ஸ்கஸ்பார்ராஜ், ராஜாராம், கேசவன், பிரபாகரன், பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×