search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Retteri"

    • ரெட்டேரியின் கொள்ளளவை அதிகரிக்க நீர் வளத்துறை திட்டமிட்டு உள்ளது.
    • கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில் ஏரியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    சென்னை மக்களின் குடிநீர் தேவை பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை போன்ற ஏரிகள் மூலம் பூர்த்தி செய்யப் படுகிறது.

    சென்னையில் அதிகரித்து வரும் தண்ணீர் தேவையை சமாளிக்கும் வகையில் நீர்நிலை தேக்கத்தை அதிகப்படுத்த நீர்வளத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரெட்டேரியின் கொள்ளளவை அதிகரிக்க நீர் வளத்துறை திட்டமிட்டு உள்ளது.

    ரெட்டேரியில் தூர்வாரி வண்டல் மண்ணை அகற்றி நீர்தேக்க அளவை 32 மில்லியன் கன அடியில் இருந்து 45.13 மில்லியன் கன அடியாக அதிகரிக்கும் பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை டெண்டர் கோர முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.43.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து நீர்வளத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ரெட்டேரியில் இருந்து சுமார் 7 லட்சம் கன மீட்டர் வண்டல் மண் அகற்றப்பட உள்ளது. ஏரிக்கரையில் உள்ள வண்டல் மண்ணை அகற்றிய பிறகு அங்கு பறவைகள் வந்து செல்ல 3 தீவுகளை உருவாக்க திட்டமிட்டு உள்ளோம்.

    சென்னையில் அதிகரிக்கும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நீர்தேக்கங்களை அதிகரிக்க சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அதன்படி ரெட்டேரி, பெரும்பாக்கம், முடிச்சூர், செம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், அயனம்பாக்கம், கொளத்தூர், போரூர் மற்றும் புழல் ஆகிய பகுதிகளில் உள்ள 10 ஏரிகளை ரூ.100 கோடி புணரமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இன்னும் சில நாட்களில் டெண்டர் பணிகள் முடி வடைந்து இந்த மாத இறு திக்குள் பணிகள் தொடங் கப்பட உள்ளது. 18 மாதங்க ளுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளோம். ஏரிக்கரை பகுதி யில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது.

    இப்பகுதிகளில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில் ஏரியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பூண்டி, புழல் செம்பரம் பாக்கம், சோழவரம், தேர்வாய் கண்டிகை ஏரிகளில் மொத்தம் 13.213 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்க முடியும். சென்னை யின் குடிநீர் மற்றும் தொழில் துறை தேவைகளை பூர்த்தி செய்ய ஆண்டுக்கு 22 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் இது அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் 32 டி.எம்.சி. ஆக அதிகரிக்கும் என்று அரசு கணித்துள்ளது குறிப் பிடத்தக்கது.

    ரெட்டேரியில் இன்று காலை கார் தீப்பிடித்து எரிந்து என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாதவரம்:

    சென்னை வடபழனி குமரன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, சாப்ட்வேர் என்ஜினீயர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    இவர் தனது காரில் ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று இரவு சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை ரெட்டேரி மேம்பாலம் அருகே கார் வந்தது. அப்போது அங்கு வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்வதற்காக தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தன.

    காரில் வேகமாக வந்த தட்சிணாமூர்த்தி தடுப்புகள் இருப்பதை அருகில் வந்த போதுதான் கவனித்தார். இதனால் காரை திருப்பிய போது தடுப்பு மீது மோதி தாறுமாறாக ஓடி பிளாட் பாரத்தில் ஏறி நின்றது.

    மோதிய வேகத்தில் கார் என்ஜினில் தீப்பிடித்து பரவியது. இதனால் தட்சிணாமூர்த்தி வெளியே வர முடியவில்லை. கார் தீப்பிடித்து எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தட்சிணாமூர்த்தியை மீட்க முயற்சித்தனர்.

    ஆனால் கார் கதவுகளை திறக்க முடியவில்லை. அதற்குள் தீ கார் முழுவதும் பரவி தட்சிணாமூர்த்தி கருகி அலறினார். இது குறித்து செம்பியம் தீயணைப்பு நிலையத்துக்குக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பிடித்த தீயை அணைத்தனர். கார் கதவை திறந்து பார்த்த போது தட்சிணாமூர்த்தி கருகி பிணமாக கிடந்தார்.

    அவரது உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தட்சிணாமூர்த்தி பலியான தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து திருமங்கலம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

    ×