search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RIPKalaignar"

    ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். #RIPKalaignar #கலைஞர் #DMK
    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து முதலில் கோபாலபுரம் இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன்பின் சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

    பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தினர்.

    காலை 6.45 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், காமராஜர் மற்றும் சபாநாயகர் தனபால் அஞ்சலி செலுத்தினார்கள். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ‘சூரியன் முழுமையாக அஸ்தமித்தது’ என்று இரங்கல் தெரிவித்துள்ளார். #RIPKalaignar
    திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.

    இவருக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்பட முன்னணி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், கருணாநிதி மறைவுக்கு தமிழில் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளது.

    ஹர்பஜன் சிங் டுவிட்டரில் ‘‘சூரியன் முழுமையாக அஸ்தமித்தது. தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது. ஒப்பாரும் மிக்காரும் இல்லா @kalaignar89 தலைவா உங்களுடைய இழப்பு காலத்தால் ஈடு செய்ய முடியாதது. இனி எப்படி கேட்பேன் அந்த காந்த குரலை #Kalaignar ஐயா. முத்தமிழின் மூத்த மகனுக்கு என் வீர வணக்கங்கள் #RIPKalaignar #கலைஞர்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து துணை ஜனாதிபதி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIPKalaignar
    திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை 6.10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

    கருணாநிதி மறைவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தனர். அவர்களைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா, டெல்லி முதல்வர் கெஜரிவால் இரங்கல் தெரிவித்தனர்.

    மேலும், பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பாஜனதா தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர்.
    ×