என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rituraj Singh"
- சில தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார் ரித்துராஜ் சிங்.
- சில நாட்களுக்கு முன்பு கணையத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் துணிவு. இந்த படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்க, அவருடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் மஞ்சு வாரியர், பாவனி, அமீர் ஆகியோர் நடித்திருந்தனர். முக்கிய வில்லனாக, மலையாள நடிகர் ஜான் கொக்கன் நடித்திருந்தார். இந்த படத்தில் மக்கள் பணத்தை திருடிய பணக்கார வில்லன்களுள் ஒருவராக நடித்திருந்தவர் தான் ரித்துராஜ் சிங்.
இப்படத்தில் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வங்கியில் பதுக்கி வைத்திருக்கும் பணக்கார வில்லன்களாக 3 பேர் நடித்திருப்பர். இதில், படத்தின் ஆரம்ப காட்சியில் கடத்தப்பட்டு, கடைசியில் உள்ளாடையுடன் உட்கார வைக்கப்படும் வில்லனும் ஒருவர். இந்த கதாப்பாத்திரத்தில் ரித்துராஜ் சிங் நடித்திருந்தார். பாலிவுட் நடிகரான இவர், இன்னும் சில தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார்.
இந்நிலையில், நேற்று மிகவும் சோர்ந்து காணப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரித்துராஜ் சிங் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 59.
சில நாட்களுக்கு முன்பு கணையத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் சமீபத்தில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அவரது நண்பர் கூறியுள்ளார்.
இந்தியில் பிரபலமாக இருக்கும் 'அனுபமா' என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ரித்துராஜ். இவரது கதாப்பாத்திரத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ள செய்தி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.