என் மலர்
நீங்கள் தேடியது "Road block"
- பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் வரை தார் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
- பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டியபோது குடிநீர் பைப் லைன்கள் உடைந்துவிட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் வரை தார் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தார் சாலை விரிவாக்க பணியை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரர் செய்து வருகிறார். இந்நிலையில் தார் சாலையின் ஓரத்தில் நெடுகிலும் குழி தோண்டப்பட்டு வருகிறது. இதற்காக, பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டியபோது குடிநீர் பைப் லைன்கள் உடைந்துவிட்டது. இதனால் இருக்கூர் பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வது தடைப்பட்டது. இதனால் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இருக்கூர் ஊராட்சி, காலனி பகுதியில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வராததால் போர் தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். தற்போது மழை பெய்ததால், போர் தண்ணீரும் சேருகலந்த நீராக வருவதால், அதை குடிக்க முடியாமலும், சமையல் செய்ய முடியாமலும் அவ திக்குள்ளாகி வருகின்றனர். இது சம்பந்தமாக இருக்கூர் ஊராட்சிமன்றத் தலைவி ஜானகியிடம் காலனி மக்கள் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதை கண்டித்து இருக்கூர் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஜேடர்பாளையத்தில் இருந்து பரமத்தி செல்லும் தார் சாலையின் குறுக்கே அமர்ந்து இன்று காலை சுமார் 8 மணி அளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரமத்தியிலிருந்து ஜேடர்பா ளையம் செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்களும், லாரிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களும், ஜேடர்பாளையத்தில் இருந்து பரமத்தி செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.
தகவல் அறிந்து பரமத்தி வேலூர் போலீஸ் டி.எஸ்.பி கலையரசன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்த தகவல் கபிலர்மலை வட்டார் வளர்ச்சி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் வெளியூரில் இருந்து வருவதால் உடனடியாக வர முடியவில்லை. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திடம் பேசி விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்தனர்.
சாலை மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மிகவும் காலதாமதமாக சென்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- வேன் தஞ்சை அருகே புனல்குளம் பகுதியில் வந்த போது திடீரென முன்பக்க டயர் வெடித்து.
- காயம் அடைந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை இனாத்துக்கன்பட்டி யை சேர்ந்தவர் அஞ்சம்மாள் (வயது 70 ). இவர் அதே பகுதியை சேர்ந்த வேம்பரசி, ரங்கநாதன், ராஜா, மகாலட்சுமி உள்பட சிலருடன் ஒரு வேனில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் துக்க வீட்டுக்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து அதே வேனில் தஞ்சைக்கு புறப்பட்டனர். அந்த வேன் தஞ்சை அருகே புனல்குளம் பகுதியில் வந்த போது திடீரென முன்பக்க டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கம்பியில் மோதியது. இதில் அஞ்சம்மாள் உள்பட 9 பேர் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரமத்தி வேலூர் -மோகனூர் சாலையில் உள்ள காமாட்சி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- ஆக்கிரமிப்பை அகற்றி ரேஷன் கடை கட்டுவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் -மோகனூர் சாலையில் உள்ள காமாட்சி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ரேஷன் கடைக்கு 2 கிலோ மீட்டர் வரை செல்ல வேண்டியுள்ளது. வயதானவர்கள் ரேஷன் கடைக்கு செல்ல மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நிலம் ஒதுக்கீடு
இதனால் காமாட்சி நகர் பகுதியிலேயே ரேஷன் கடை கட்டுவதற்காக அரசு புறம்போக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த இடத்தில் ரேஷன் கடை கட்டித்தரக் கோரி இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தொடர்ந்து சம்பந்தப்பட்ட வருவாய் துறையினரிடம் மனு அளித்தும், இதுவரை அப்பகுதியில் ரேஷன் கடை கட்டுவதற்க எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆக்கிரமிப்பு
இந்த நிலையில் ரேஷன் கடைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டுவதற்கான முயற்சி மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து. அப்பகுதி மக்கள், வருவாய் துறையினரிடம் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை மீட்டு, உடனடியாக ரேஷன் கடை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதையும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிறயை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மேலும் ஆக்கிரமிப்பை அகற்றி ரேஷன் கடை கட்டுவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால், சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- திருச்சி- புதுக்கோட்டை சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து
திருச்சி:
திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர வடிகால் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்ட போது சில இடங்களில் குடிநீர் குழாய் உடைந்ததால், சுப்ரமணியபுரம் முதல் ஏர்போர்ட் வரையில் குடிநீர் வரவில்லை. இதனால் திருச்சி மாநகராட்சி 47 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் சுப்பிரமணியம்புரம் மெயின்ரோட்டில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,மாநகராட்சி அதிகாரிகளுக்கும்-நெடுஞ்சாலை துறையினருக்கும் உரிய புரிதல் இல்லாமலேயே உள்ளதால் அடிக்கடி சாலை ஓரத்தில் பள்ளம் தோன்றுகிறேன் என்று குடிநீர் குழாய்களை நெடுஞ்சாலை துறையினர் உடைத்து விடுகின்றனர். இதனால் எங்கள் பகுதியில் கடந்த 6 மாத காலமாகவே டேங்கர் லாரி மூலமாக தண்ணீர் சப்ளை செய்யும் நிலை உள்ளது. நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.இதனை அறிந்த காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- திருமங்கலம் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதை எதிர்த்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- சிந்துபட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி கிரா மத்தில் 1914 -ம் ஆண்டு முதல் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால் அருகில் உள்ள தும்மக்குண்டு, காங்கே யநத்தம், நக்கலகோட்டை, பன்னீர்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
தற்போது தமிழக அரசு பத்திரப்பதிவு அலுவ லகங்களை தாலுகா வாரியாக பிரிக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. தாலுகா வாரியாக பத்திர பதிவு அலுவலகம் பிரிக்கப்படும் சூழ்நிலையில் சிந்து பட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து வந்த திருமங்கலம் தாலுகாவுக்கு காங்கேயநத்தம், நக்க லக்கோட்டை, பன்னீர் குண்டு, பொக்கம்பட்டி, தங்களாசேரி, சென்ன ம்பட்டி உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துக்கள் திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், இதுவரை செயல்பட்டு வந்த சிந்துபட்டி சார்பதிவாளர் அலுவலகம் செல்ல ம்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனால் சிந்துபட்டி, உடையாம்பட்டி, கட்ட தேவன்பட்டி, தும்மக்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் பத்திர பதிவு செய்வதற்கு செல்ல ம்பட்டிக்கு செல்ல வேண்டும்.
இந்த நடைமுறைக்கு மேற்கண்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். செல்லம்பட்டிக்கு இட மாற்றம் செய்வதால் பொது மக்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும், சிந்துபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்து கடந்த வாரம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிந்துபட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிந்துபட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- சிதம்பரம் அருகே மணல் லாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
- இதுவரை 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடலூர்:
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த விரிவாக்க பணிகளுக்காக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் வட்டம், மாமங்கலம் ஊராட்சி ஆண்டிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள புத்தேரியில் எடுக்கப்படும் செம்மண் மணல் கற்களை லாரியில் ஏற்றி செல்கிறார்கள். தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மாமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய சாலை வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த லாரிகள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுவரை 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், அவ்வழியே செல்லும் பள்ளி, கல்லூரி பேருந்துகளும், மோட்டார் சைக்கிளில் செல்லும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனர்.
இது தொடர்பாக பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டும் இதன் மீது நடவடிக்கை ஏதும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மா.மங்கலம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சோழத்தரம் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அங்கு காரில் வந்த ஒப்பந்தராரரின் பணியாட்கள் பொது மக்கள் மீது காரை ஏற்றுவது போல வந்தனர். இதனால் ஆவேசமடைந்த பொது மக்கள் போலீசார் மற்றும் ஒப்பந்ததாரரின் பணியாட்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சேத்தியாத்போதோப்பு டி.எஸ்.பி. ரூபன்குமார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இச்சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.
- நாமக்கல் வனசரக அலுவலர் பெருமாள் தலைமையில் கண்காணிப்பு காமிரா மற்றும் டிரோன் காமிரா மூலமும், கூண்டு அமைத்தும் 40- க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சிறுத்தை புலியை பிடிக்க உரிய நட வடிக்கை எடுக்க கோரி சுண்டப்பனை பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் ஈடுபட முயன்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம், சூர்யாம்பாளையம், வெள்ளாளபாளையம் மற்றும் சுண்டப்பனை பகுதிகளில் சிறுத்தைப்புலி தாக்கி பசுகன்று, நாய், ஆடுகள் ஆகியவற்றை கொன்று போட்டது.
அதனை தொடர்ந்து நாமக்கல் வன சரக அலுவலர் பெருமாள் தலைமையில் கண்காணிப்பு காமிரா மற்றும் டிரோன் காமிரா மூலமும், கூண்டு அமைத்தும் 40- க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அந்தியூரில் இருந்து 6 சிறப்பு பயிற்சி பெற்ற வனக்காவலர்கள் வரவ ழைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு, சிறுத்தை புலியை பிடிக்க உரிய நட வடிக்கை எடுக்க கோரி சுண்டப்பனை பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறுத்தைப் புலியை விரைவில் பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு இரவு பரபரப்பு ஏற்பட்டது.
- போலீசாரை கண்டித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலவேடு அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முனுசாமி மற்றும் துரை ஆகியோர் கடந்த வாரம் மாலை நேரத்தில் பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
வந்தவாசி அடுத்த கீழ்சீசமங்கலம் கிராம கூட்டுச்சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே பைக்கில் வந்த நபர் ஒருவர் மாணவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த 2 மாணவர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முனுசாமி என்ற மாணவன் ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாற்றப்பட்டார்.
பின்னர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தும் இதுவரை கீழ்க்கொ டுங்காலூர் போலீசார் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் இன்று காலை போலீசாரை கண்டித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலவேடு அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கீழ்க்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிறகு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- புலிக்கார தெரு களரம்பட்டி பிரதான சாலை ஆகிய இடங்களில் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
- 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை களரம்பட்டி பிரதான சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 57-வது வார்டுக்கு உட்பட்ட வீரவாஞ்சி புலிக்கார தெரு களரம்பட்டி பிரதான சாலை ஆகிய இடங்களில் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
சாலை மறியல்
சாக்கடை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தே.மு.தி.க. வார்டு செயலாளர் சங்கர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை களரம்பட்டி பிரதான சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சாலை வசதி சாக்கடை வசதி செய்து தராத 57-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சீனிவாசனை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்து வந்த கிச்சிபாளையம் காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் காவல்துறையினர் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கவுன்சிலர் வரும் வரை மறியலை கைவிட மாட்டோம் என பொதுமக்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தி.மு.க. கவுன்சிலர் சீனிவாசன் மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.
சாலை மற்றும் சாக்கடை வசதி செய்து தருவதாக உறுதியளித்ததன் அடிப்படையில் தற்காலிக–மாக மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில்
½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்
- இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியில் சோழகம் பட்டி கிராமத்தில் புதிதாக பள்ளி கட்டிடம் சுமார் 29 லட்சம் மதிப்பில் கட்டுவதற்காக குறிப்பிட்ட அளவுகளில் அடையாளம் செய்யப்பட்டு கம்பிகள் அடிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பள்ளி கட்டுவதற்கான அடையாளம் செய்யப்பட்ட கம்பிகளையும், ஏனைய பொருட்களையும் கந்தர்வகோட்டை தி.மு.க. நிர்வாகி ஒருவர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியை சேர்ந்த சோழகம்பட்டி, மெய்குடி பட்டி கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கந்தர்வகோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சோழகம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியல் செய்தனர். சோலகம் பட்டி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை உதவி ஆய்வாளர் சரவணன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- டாஸ்மாக் கடையை அகற்றகோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- பெண்கள் உள்பட 300 பேர் பங்கேற்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கேசம்பட்டி ஊராட்சிக் குட்பட்ட சாணிப்பட்டியில் மேலூர்-நத்தம் சாலையின் பிரதான பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இங்கு வருவோர் மது குடித்து விட்டு போதையில் சாலையில் விழுந்து கிடப்ப தும், சிலர் தகராறில் ஈடுபடு வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
எனவே சாணிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர் பாக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
சாலை மறியல்
இதை கண்டித்தும், டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை சாணிப்பட்டி, கேசம்பட்டி, அருக்கம்பட்டி, கடுமிட்டான் பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை முன்பு மேலூர்-நத்தம் சாலையில் திரண்டனர்.அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறி யலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேலவளவு போலீ சார் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் நடந்தும் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வரவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் ஊரில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். கிராமத்தை சேர்ந்த ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். அதுவரை எங்கள் போராட் டம் தொடரும் என்றனர்.
- அக்கராயப்பாளையத்தில் பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இங்கு குடிநீர் வழங்கப்படாமல் இருந்தது.
- அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கச்சிராயப்பா ளையத்திலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகேயுள்ள அக்கராயப்பாளையத்தில் பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இங்கு குடிநீர் வழங்கப்படாமல் இருந்து வருவதாகவும், இந்த நிலையில் குடிநீர் வழங்காத அருகில் உள்ள வடக்கனந்தல் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கச்சிராயப்பா ளையத்திலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
. இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் கச்சி ராயபாளையம் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்குவதாக உறுதியளித்தார் பின்னர் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.