என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "road damage"
- கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
- பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், பெலகாவி உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இதன் காரணமாக ஏற்கனவே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன.
பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும் உள்ளன. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
மேலும் கரையோர கிராமங்களையும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை தீயணைப்பு படை வீரர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் படகு, பரிசல், ரப்பர் படகு உள்ளிட்டவைகளில் சென்று மீட்டு வருகிறார்கள்.
விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்களை மூழ்கடித்ததால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இதுஒருபுறம் இருக்க சார்மடி, சிராடி காட் உள்பட மாநிலத்தில் உள்ள பல மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதாலும், மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாலும் மலைப்பாதை வழியாக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உத்தர கன்னடாவில் ஏற்கனவே கனமழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழையால் உத்தரகன்னடா மாவட்டத்தில் 92 வீடுகள் இடிந்துள்ள நிலையில் நேற்று கார்வார் தாலுகா சென்டியா கிராமத்தில் 4 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த 4 வீடுகளையும் சுற்றி 3 அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் தேங்கி நின்றது.
உத்தரகன்னடா மாவட்டத்தில் இன்னும் 439 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு அரசு முகாம்களில் தங்க வைத்து இருப்பதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
இதேபோல் பெலகாவி மாவட்டத்திலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பெலகாவி மாவட்டத்தில் ஓடும் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் விளைநிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்களை மூழ்கடித்ததால் பல ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகின. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்படுவதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
- மண்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது.
இதில் 6 வார்டு பகுதியில் உருளைக்கிழங்கு, பூண்டு, பெரிய வெங்காயம், சாக்கு உள்ளிட்ட மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதன்மூலம் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்து உருளைக்கி ழங்கு, பூண்டு, பெரிய வெங்காயம் சாக்கு உ ள்ளிட்டவை ஏற்றுமதி, இறக்குமதி மேற்கொள்ள ப்படுகிறது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டுப்பாளையம் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பகுதிகளில் பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு வருகிறது.
இதில் மேட்டு ப்பாளையம் உருளைக்கி ழங்கு மண்டி பகுதிகளில் பாக்குகார சாலை செல்லும் வழியில் உள்ள கிழங்கு மண்டி சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனை பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இச்சாலை வழியாக அனைத்து மகளிர் காவல் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மகாஜன பள்ளி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மக்கள் சென்று வரும் வழியாக உள்ளது. மேலும் நெல்லித்துறை சாலை வழியாக தினசரி நிலகீரி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய வாகனங்களில் எடுத்து செல்கின்றனர். இதுபோன்ற நேரங்களில் இச்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்களும், வியாபா ரிகளும் பெரும் அலைச்சலுக்கு உள்ளாகி வருகின்றன. எனவே இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டியின் உபதலைவர் எம்.என்.கோபால், செயலாளர் பி.ரங்கசாமி ஆகியோர் கூறியதாவது:-
மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டி பகுதியில் தினசரி கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. இத ன்மூலம் ஆயிரக்க ணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உள்ளது.
இப்பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் உருளைக்கிழங்கு மண்டி பகுதிகளில் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கியாஸ் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டிய குழி 6மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது
- ஒரு வேலையை சரியாக முடித்துவிட்டு அடுத்த வேலையை தொடங்க வேண்டும்.
வீரபாண்டி :
திருப்பூர் சுண்டமேட்டிலிருந்து முருகாம்பாளையம் வழியாக காதுகேளாதோர் பள்ளி வரை சாலையின் இடதுபுறமாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டது. தோண்டிய குழி சரிவர மூடப்படாத நிலையில் சாலையின் வலது புறமாக கியாஸ் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டிய குழி 6மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் பணி முடியவில்லை. சாலையின் ஒரு பக்கம் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டிய குழி சரியாக மூடப்படவில்லை. சாலையின் இருபக்கமும் குழி தோண்டியதால் வாகன ஓட்டிகள் தினந்தோறும் உயிரை கையில் பிடித்துகொண்டு செல்கின்றார்கள். மேலும் இரவு நேரத்தில் தினந்தோறும் விபத்து ஏற்படுகின்றன. எனவே ஒரு வேலையை சரியாக முடித்துவிட்டு அடுத்த வேலையை தொடங்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை:
சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வானகரம் முதல் வாலாஜா வரை நான்கு வழிச்சாலையாக உள்ளது.
இதை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய கடந்த 2013-ம் ஆண்டு தனியார் நிறுவனத்துடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்தம் செய்தது. ஆனால் இந்த பணிகள் தொடங்கப்படாமல் கிடப் பில் உள்ளது.
சாலை விரிவாக்கத்தை காரணம் காட்டி இந்த சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் கட்ட ணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் சாலையை மேம்படுத்தும் பணிகள் மேற் கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடி, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளன.
இதன் காரணமாக இந்த சாலைகளில் அடிக்கடி விபத்துக்களும், உயிரிழப்பு களும் ஏற்படுகின்றன. இதுபற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் அந்த பகுதி மக்கள் அடிக்கடி புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர், பொதுமக்கள், வியாபாரிகள் ஒன்று சேர்ந்து கடந்த ஜனவரி மாதம் சாலையை சீரமைக்க முயற்சி எடுத்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் சாலை சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினார்கள்.
அத்துடன் சாலையை சீரமைக்க முயன்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அதிகாரிகளும் பொதுமக்களை சமரசம் செய்தனர். வானகரம், வேலப்பன் சாவடி உள்ளிட்ட சந்திப்புகளில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்து தருவதாக உறுதி அளித்தனர்.
ஆனால் 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே பொய் வாக்குறுதி கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனிடம் தமிழ் நாடு லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் யுவராஜ் மற்றும் வரதராஜன் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
வானகரம் முதல் வாலாஜா வரை உள்ள 93 கிலோ மீட்டர் சாலையில் ஸ்ரீபெரும்புதூர், ராணிப்பேட்டை ஆகிய 2 சுங்கச்சாவடிகளில் ஒரு நாள் ரூ.60 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் வானகரம் சந்திப்பு, வேலப்பன்சாவடி சந்திப்பு, பூந்தமல்லி, பாரி வாக்கம் சந்திப்பு உள்ளிட்ட மூன்று சந்திப்புகளில் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து மோசமாக உள்ளது.
இதனால் இந்த பகுதியில் தினந்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 24-ந்தேதி லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மதுரவாயல் குடியிருப்பு நல சங்கம் சார்பில் நாங்களே ஜல்லி மணல் கொட்டி சாலையை சீரமைக்க முயன்ற போது எங்கள் மீது திருவேற்காடு போலீசார் கிரிமினல் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
அப்போது ரூ.10 லட்சம் செலவில் மூன்று சந்திப்பு களிலும் உள்ள சாலையை மூன்று மாதங்களில் சீரமைத்து தருவதாக தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் நாராயணா மற்றும் அதிகாரிகள் எங்களிடம் வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் இன்று வரை சாலையை சீரமைக்க வில்லை.
இதேபோல் 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வானகரம் காஞ்சீபுரம் சாலை 730 கோடி ரூபாய்க்கும் காஞ்சீபுரம் முதல் ராணிப்பேட்டை சாலை 780கோடி ரூபாய்க்கும் விரிவாக்கம் செய்ய ஓப்பந்தம் போடப்பட்டு இதுவரை எந்தவித பணிகளும் நடைபெற வில்லை.
இதன் காரணமாக விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. எனவே வாக்குறுதி தவறி தங்களது கடமையை செய்ய தவறிய தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய லாரி உரிமையாளர்கள் சங் கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் ஏற்கனவே திருவேற்காடு மற்றும் பூந்தமல்லி போலீசிலும் இதேபோல் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் இருந்து 18 கி.மீ தூரத்தில் பள்ளங்கி- கோம்பை கிராமம் அமைந்துள்ளது. கொடைக்கானலில் இருந்து பள்ளங்கி வரை மட்டுமே அரசு பேருந்து செல்கின்றது. பள்ளங்கி முதல் கோம்பை சுமார் 8 கி.மீ. தூரத்திற்கு அரசு பேருந்தோ தனியார் பேருந்தோ இயங்குவதில்லை. இதற்கு முக்கிய காரணம் பள்ளங்கி முதல் கோம்பை வரை 15 வருடங்களுக்கு முன் போடப்பட்ட சாலை தற்போது வரை முறையான பராமரிப்பு வேலைகள் செய்யாததே காரணமாகும்.
மேலும் கோம்பை பகுதியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் வாகன வசதி இல்லாததால் தங்களது உறவினர்கள் வீட்டிலோ அல்லது தங்கும் வசதி கொண்ட பள்ளிக்கூடங்களில் சேர்ந்தே படிக்கின்றனர்.
மேலும் மருத்துவ அவசர உதவிக்கு 108 ஆம்புலன் சின் உதவியை நாடினால் தங்களது பகுதிக்கு செல்லும் சாலை சரியாக இல்லாதால் வரமுடியாது என்றும், சில சமயங்களில் அனுப்பி வைக்கின்றோம் என்றும் கூறுகின்றனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதில்லை.
இதனால் விபத்துகளில் சிக்கி முதலுதவி குறித்த நேரத்தில் கிடைக்காமல் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை மிக அதிகம். மகப்பேறு காலங்களில் இவர்களது பாடு திண்டாட்டம். சாலைவசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, கல்வி வசதி என எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லாததால் இந்த கிராமத்திற்கு பெண் கொடுப்பதற்கு பெண் வீட்டார் தயங்கும் சூழல் உருவாகியுள்ளது . கடந்த வாரம் கனகு என்பவர் காய்கறி மூடையை தலைச்சுமையாக கொண்டு செல்லும்போது கரடு முரடான சாலையில் தவறி விழுந்து அதிக காயம் ஏற்பட்டதாலும், அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வரமறுத்த தாலும் தாமதமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
எனவே தொடர் விபத்துகளை சந்திக்கும் இதனை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே குமாரப்பாளையத்தில் இருந்து ஏரிக்கரை செல்லும் சாலையான மயிலம் பாதையில் சொட்டு நீலம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை மற்றும் 2 இரும்பு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சலைகளில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்களும், தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள். இருசக்கர வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் ஏரிக்கரை சாலையை அப்பகுதி விவசாயிகளும் பயன்படுத்துவதால் மழைக்காலங்களில் விவசாயத்துக்கு தேவையான இடுபொருட்களை கொண்டு செல்ல முடியாமல் தவிப்புக்குள்ளாகும் நிலை வழக்கமாகி வருகிறது.
எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை செப்பணிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே வெள்ளோடு, யாகப்பன் பட்டி, கல்லுப்பட்டி, நரசிங்கபுரம் மற்றும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளை இணைக்க கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கிராம சாலை அமைக்கப்பட்டது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள் விளை பொருட்களை கொண்டு வர இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். மேலும் கிராம பகுதி மாணவ-மாணவிகளும் இந்த சாலை வழியாகத்தான் திண்டுக்கல் மற்றும் வெளியூர்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.
சாலை சீரமைப்பு பணி நடைபெறாததால் பல வருடங்களாகவே சேதமடைந்து காணப்படுகிறது.
தற்போது சாலையின் பெரும் பகுதியில் ஆபத்தான குழிகள் ஏற்பட்டு பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கூடலூர்:
தேனி அருகே கூடலூர் மந்தைவாய்க்கால் பாலத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் பெருமாள் கோவில் புலம் உள்ளது. மானாவாரி நிலங்களில் எள், நிலக்கடடலை, தட்டைப்பயறு, அவரை, மொச்சை, கம்பு, சோளப் பயிர்களையும், தோட்டங்களில் வாழை, தென்னை, திராட்சை, வெங்காயம், மா உள்ளிட்ட பணப்பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.
இவர்கள் தினசரி இருசக்கர வாகனங்கள் மற்றும் மினி ஆட்டோக்களில் கூலி ஆட்களை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். விவசாயிகள் விளைவித்த பொருட்களை மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டர் வண்டிகளில் ஏற்றி சந்தைகளுக்கு கொண்டு செல்கின்றனர்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தார் சாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து சாலையில் பராமரிப்பு பணிகள் செய்யாததால் சாலைகள் தற்போது சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்து வருகிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு வழங்கினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, பெருமாள் கோவில் புலம் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்