என் மலர்
நீங்கள் தேடியது "road works"
- உத்திரங்குடி, மேலஉத்தி–ரங்குடி, குமாரமங்கலம், கீழ பாலையூர் சாலைப் பணிகளை தொடங்க வேண்டும்.
- நிதி ஆதாரத்திற்கு தகுந்தாற்போல் அனைத்து பணிகளும் படிப்படியாக செயல்படுத்தப்படும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் உமாப்பிரியா தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி வரவேற்றார். தீர்மானங்களை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரவீன்குமார் படித்தார். கூட்டத்தில்
நாகூரான்(அதிமுக): உத்திரங்குடி, மேலஉத்தி–ரங்குடி, குமாரமங்கலம், கீழ பாலையூர் சாலைப் பணிகளை தொடங்க வேண்டும். அபிவித்தீஸ்வரம் மயாண கொட்டகையை சீரமைக்க வேண்டும்.
சத்தியேந்திரன்(திமுக): எண்கண் சுப்ரமணியசுவாமி கோயிலுக்கு புதிய திருமணமண்டபம் கட்ட ரூ.3 கோடி, கோயில் திருப்பணிகள் புனரமைக்க ரூ.1 கோடி வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
ஏசுராஜ்( அதிமுக): பெரும்புகழூர் ஊராட்சி வெட்டாற்றில் ரூ 8 லட்சம் மதிப்பில் படித்துறை கட்டியதற்கு நன்றி. அதுபோல் எங்கள் வார்டின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். வாசு(திமுக): காட்டூர் ஊராட்சியில் 3 சாலைகள், சமுதாயகூடம் பழுது நீக்கம் செய்ததற்கு நன்றி.
மீரா(அதிமுக): மேலராதாநல்லூர் குழு கட்டிடம் மோசமாக உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும்.
துணைத் தலைவர் பாலச்சந்திரன்: கொரடாச்சேரி ஒன்றியத்தில் தேவைப்படும் அனைத்து பணிகளையும் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படிப்படியாக அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ஒன்றியக்குழு தலைவர் உமாபிரியா பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கொரடாச்சேரி ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளிலும் ரூ.12 கோடி மதிப்பில் 28 சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.
நிதி ஆதாரத்திற்கு தகுந்தாற்போல் அனைத்து பணிகளும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றார். கூட்டத்தில் பொறியாளர்கள் ரவீந்திரன், சசிரேகா, வட்டார வளர்ச்சி தணிக்கை அலுவலர் முரளி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் சுப்புலெட்சுமி நன்றி கூறினார்.
- தா.பழூர் அருகே ரூ.48.81 லட்சத்தில் சாலை பணிகள் தொடங்கப்பட்டது
- இதற்கான பூமி பூஜையில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தலைமையேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார்.
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் கோடங்குடி கிராமத்தில் இருந்து சோழமாதேவி செல்லும் மண் சாலையை விவசாய பயன்பாடுகளுக்காக மெட்டல் சாலையாக தரம் உயர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் 2022-23, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22, 2022-23 திட்டங்களின் கீழ் ரூ.48 லட்சத்து 81 ஆயிரம் திட்ட மதிப்பில் சாலை பணிகள் நடைபெற உள்ளன.
இதற்கான பூமி பூஜையில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தலைமையேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தலிங்கம் (வட்டார ஊராட்சி), விஸ்வநாதன் (கிராம ஊராட்சிகள்), உதவி பொறியாளர் சுமதி, இளநிலை பொறியாளர் சரோஜினி, கோடங்குடி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா நடராஜன், துணைத் தலைவர் சுமதி மதியழகன், ஊராட்சி செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மையத்தடுப்புகளில் மின் விளக்கு அமைக்க வேண்டும் என்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தமிழ் வளா்ச்சி பிரிவு மாவட்ட தலைவா் ஸ்ரீனிவாசன், ஊடகப்பிரிவு மாவட்ட துணைத்தலைவா் சந்துரு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அவினாசி:
அவிநாசி நகர பாஜக. செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரத் தலைவா் தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். தமிழ் வளா்ச்சி பிரிவு மாவட்ட தலைவா் ஸ்ரீனிவாசன், ஊடகப்பிரிவு மாவட்ட துணைத்தலைவா் சந்துரு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர பொதுசெயலாளா் மோகன் வரவேற்றாா். கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் லியாகத்அலி பேசினாா்.
இதில் அவிநாசியில் போக்குவரத்து நெருக்கடி, தொடா் விபத்துகளை தடுக்க உடனடியாக அவிநாசி-சேவூா் சாலை சந்திப்பில் இருந்து பட்டறை பேருந்து நிறுத்தம் வரை சாலையை அகலப்படுத்தி மையத்தடுப்பு அமைக்க வேண்டும். இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படும் கோவை பிரதான சாலை அவிநாசி அரசுக் கல்லூரி முதல்-முத்துச்செட்டிபாளையம் பிரிவு வரை மையத்தடுப்புகளில் மின் விளக்கு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகரப் பொருளாளா் ரமேஷ்குமாா் நன்றி கூறினாா்.
- மேயர் ஜெகன் பெரியசாமி பூங்காவிற்கு வந்திருந்த குழந்தைகளை பார்த்து பேசி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
- புதிய தார் சாலை பணிகள் குறித்து மேயர் ஜெகன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி சிவந்தகுளம் பள்ளி அருகில் உள்ள உணர்வு பூங்கா, குழந்தைகளின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
இந்நிலையில் அங்கு மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பூங்காவிற்கு வந்திருந்த குழந்தைகளை பார்த்து அவர்களுடன் பேசி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியின் போது பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாமன்ற உறுப்பினர் பாப்பாத்திஅம்மாள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி போல்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை அமைக்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன் ஜாஸ்பர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவிந்திரன், சமூக ஆர்வலர் ஐசக் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- வீரவாஞ்சிநகர் 3-வது வடக்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சிக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேவர் பிளாக் சாலையை திறந்து வைத்து பார்வையிட்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சி பகுதியில் வீரவாஞ்சிநகர் 3-வது வடக்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப் பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேவர் பிளாக் சாலையை திறந்து வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து, கோவில்பட்டி அருகே வடக்கு திட்டக்குளம் ஊராட்சியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3.50 லட்சம் மதிப்பில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பழனிசாமி, கவுன்சிலர் கவியரசன், ஆவின் தலைவர் தாமோதரன், மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் செல்வக் குமார், இனாம் மணியாச்சி ஊராட்சி வார்டு உறுப்பி னர் ரேவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மணிராஜ் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- கூந்தங்குளம் பகுதியில் பாலம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முருகன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிராஜ்(வயது 35). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
மூலைக்கரைப்பட்டி அருகே கூந்தங்குளம் பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு இடத்தில் பாலம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் மணிராஜ் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். அப்போது அந்த பள்ளத்தில் எதிர்பாராத விதமாக தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மணிராஜ், அங்கிருந்து எழுந்திருக்க முடியாமல் மயங்கி விழுந்து இறந்தார். இன்று காலை அந்த வழியாக சென்ற வர்கள் அவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக மூலக்கரைப்பட்டி போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மணிராஜ் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றிலும் எவ்விதமான தடுப்புகளோ, எச்சரிக்கை பலகைகளோ அல்லது ஒளிரும் ஸ்டிக்கர்களோ வைக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
- ‘மாலைமலர்’ செய்தி எதிரொலியாக கீழக்கரை இஸ்லாமியா பள்ளி செல்லும் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
- மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு செல்லும் வழியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை சேதம் அடைந்த தால் புதிய சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு சாலை அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டது. ஒப்பந்ததாரர் அலட்சியம் காரணமாக பணி தொடங்க வில்லை.
குறுகலான சாலையின் ஒரு பக்கம் உடைக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள். மறு பக்கம் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து கடந்த 6-ந்தேதி 'மாலைமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின்பேரில் தற்போது சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இருப்பினும் குறைந்த எண்ணிக்கையில் தொழிலா ளர்கள் வேலை செய்வதால் பணி தாமதமாக நடந்து வருகிறது. நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சாலை பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வினோத் சாலையில் ரெபிலெக்டர் பெயிண்ட் அடிக்கும் வேலைச் செய்து வருகிறார்.
- 3 பேரையும் ஆபசமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் சிவபுராணி மேலத்தெருவைச்சேர்ந்தவர் வினோத்(வயது26). இவர், காரைக்கால் மானம்பாடியைச்சேர்ந்த ராஜேஷ்கண்ணா என்பவரிடம், சாலையில், ரெபிலெக்டர் பெயிண்ட் அடிக்கும் வேலைச் செய்து வருகிறார். காரைக்காலை அடுத்த நெடுங்காடு சாலையில், நண்பர்கள் தஞ்சவூரைச்சேர்ந்த எட்வின்ராஜ்(18), சஞ்சய்(18) ஆகிய 2 பேருடன் சேர்ந்து சாலையின் நடுவே பெயிண்டு அடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, காரைக்கால் திருநள்ளாறைச்சேர்ந்த கார்த்தி((27), ராஜேஷ்(24) ஆகிய 2 பேர் மோட்டார் சைக்களில் சென்று, 3 பேரையும் ஆபசமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, வினோத், நெடுங்காடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் தேடிவருகின்றனர்.
- கருவந்தா முதல் சோலைசேரி வரையில் இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
- இணைப்பு சாலை அமைப்பதற்கான பணிகள் பூமி பூஜை விழாவுடன் நேற்று தொடங்கியது.
தென்காசி:
வீ.கே. புதூர் அருகே உள்ள கருவந்தா ஊராட்சியில் கருவந்தா முதல் சோலைசேரி வரையில் இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்களின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கருவந்தா ஊராட்சி தலைவர் தானியேல் முயற்சியியால் ரூ. 48 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கருவந்தா முதல் சோலைசேரி வரையிலான இணைப்பு சாலை அமைப்பதற்கான பணிகள் பூமி பூஜை விழாவுடன் நேற்று தொடங்கியது. இதில் கருவந்தா ஊராட்சி தலைவர் தானியேல், துணை தலைவர் மங்களம், ஊராட்சி செயலர் முருகேசன், வார்டு உறுப்பினர்கள் பேச்சியம்மாள் மாரிச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணம்மாள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- பொங்கலூர் ஒன்றிய பகுதியில் 10 இடங்களில் சாலை பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
- க.செல்வராஜ் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.
பல்லடம்:
பல்லடம் ஒன்றிய பகுதியில் முதலமைச்சரின் கிராமச் சாலைகள் விரிவாக்கத்திட்டத்தின் கீழ் ரூ.16 கோடி மதிப்பில் நடைபெறவுள்ள சாலை பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக .,செயலாளரும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.
இதன்படி பல்லடம் ஒன்றியம் வேலம்பாளையம் ஊராட்சியில், வேலம்பாளையம் முதல் வலையபாளையம் வரை சாலை விரிவாக்க பணி, கரைப்புதூர் ஆதிதிராவிடர் காலனி முதல் அறிவொளி நகர் வரை சாலை பலப்படுத்துதல், மாணிக்காபுரம் முதல் அம்மாபாளையம் பிரிவு வரை சாலை விரிவாக்கம் செய்தல், செட்டிபாளையம் ரோடு மின் நகர் பகுதியில் சாலை பலப்படுத்தும் பணி, வடுகபாளையம் புதூர் பால் கூட்டுறவு சங்கத்திலிருந்து பொள்ளாச்சி ரோடு வரை சாலை பலப்படுத்தும் பணி, நாசுவம்பாளையம் முதல் பணிக்கம்பட்டி வரை சாலை பலப்படுத்தும் பணி, காமநாயக்கன்பாளையம் முதல் கிருஷ்ணாபுரம் வரை சாலை விரிவாக்கம் செய்தல் பணி, உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இதே போல பொங்கலூர் ஒன்றிய பகுதியில் 10 இடங்களில் சாலை பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிகளில் திமுக., ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் குமார், துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், மாவட்டகவுன்சிலர் கரைபுதூர் ராஜேந்திரன், முன்னாள் நகராட்சி தலைவர் பி. ஏ.சேகர், ஊராட்சி மன்றத் தலைவர்கள் நடராஜ், நந்தினி சண்முகசுந்தரம், புனிதா சரவணன்,ரோஜாமணி, ஒன்றிய கவுன்சிலர்கள் லோகு பிரசாந்த், ஆர்.ஆர்.ரவி, பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக .,நிர்வாகிகள் சாமிநாதன், குமார் ,அன்பரசன், துரைமுருகன், ஆட்டோ குமார், ராஜேஸ்வரன், பாலகுமார், பல்லடம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் தங்கவேல், முத்துக்குமார், துரைசாமி, சின்னப்பன், ரமேஷ், கோவிந்தராஜ், பொங்கலூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் பொன்னுசாமி, கனகராஜ், சிவாச்சலம், மலைப்பாளையம் சண்முகம், கோபி என்ற கார்த்திகேயன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், திமுக., நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சாலையோரத்தில் மண் வெட்டி விரிவாக்கம் செய்யப்படுகிறது
- வாகனங்கள் சிரமங்களுக்கு மத்தியில் தடுமாறி சென்று வருகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த மஞ்சூர் குந்தா ரோட்டில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக சாலையோரத்தில் மண் வெட்டி விரிவாக்கம் செய்யப்படுகிறது. எனவே ரோட்டில் ஆங்காங்கே குவியல் குவியலாக மண் கொட்டப்பட்டு உள்ளது.
இது மழை காலம் என்பதால் ரோடு முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக, சாலை முழுவதும் நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
எனவே அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் சிரமங்களுக்கு மத்தியில் தடுமாறி செல்ல வேண்டி உள்ளது. இதனால் அரசு, தனியார் பஸ்கள் மற்றும் இரு சக்கர வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே ஊட்டி மஞ்சூர் குந்தா பகுதியில் ஆமை வேகத்தில் நடக்கும் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- முதுகுளத்தூரில் சாலை பணிகள் நடைபெறுவதால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
- பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னிலையில் அகற்றப்பட்டது.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் பை பாஸ் சாலை பணிகள் நடை பெற்று வருவதால் நகர் முழுவதும் பேவர்பிளாக் சாலை அக லப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூராக உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர். இதனை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் முது குளத்தூர் தாசில்தார் சடை யாண்டி தலைமையில் டி. எஸ்.பி. சின்ன கன்னு, பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னி லையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பின்னர் டி.எஸ்.பி. சின்ன கண்ணு கூறும்போது இனிமேல் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்தால் கடும் நடி வடிக்கை எடுக்கப்படும் என ஆக்கிரமிப்பாளர்களை எச்சரிக்கை செய்தார். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.