search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Roadside garbage"

    • நோய் பரவும் அபாயம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • குப்பைகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் ஒட்டர்பா–ளையம் ஊராட்சிக்குட்பட்ட அல்லிக்காரபாளையத்தில் இருந்து மேட்டுப்பா–ளையத்திற்கு சாலை செல்கிறது.

    இந்த சாலையில் 4 பள்ளிகளும், கடைகளும் அதிகளவில் உள்ளன. இதனால் இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். குறிப்பாக பள்ளி மாணவர்களும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 20 மாதங்களுக்கும் ேமலாக இந்த சாலையானது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. சாலையின் பெரும்பாலான இடங்களில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

    மழைக்காலங்களில் ஆங்காங்கே குழிகளில் மழைநீர் தேங்கி முழுவதும் மறைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் குழிகள் தெரியாமல் அதில் விழும் நிலையும் காணப்படுகிறது. மேலும் சேறும், சகதியாகவும் காட்சியளிக்கிறது.

    இதற்கிடையே இந்த சாலையோரத்தில் குப்பைகள் குவியல், குவியலாக கொட்டப்பட்டு வருகின்றனர். இந்த குப்பைகள் காற்றில் பறந்து வாகனங்களில் செல்வோர் மீதும் விழுந்து வருகிறது.

    அடிக்கடி இந்த குப்பைகளுக்கு சிலர் தீ வைத்து செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடைபாதையை பயன்படுத்துபவர்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

    அதிக அளவில் குப்பை–கள் கொட்டுவதினால் நாளுக்கு நாள் துர்நாற்றம் அதிகமாக இருப்பதுடன், நோய் தொற்று பரவும் அபாயமும் காணப்படுகிறது.

    இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இங்கு குப்பைகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    ×