search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rollable phone"

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய கான்செப்ட் போன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
    • முன்னதாக எல்ஜி நிறுவனம் செய்ய நினைத்ததை மோட்டோரோலா தற்போது சாத்தியப்படுத்தி இருக்கிறது.

    எல்ஜி நிறுவனம் உலகின் முதல் ரோலபில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. எனினும், தொடர் இழப்பு காரணமாக ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எல்ஜி விலகிக் கொள்வதாக அறிவித்தது. கடந்த மாதம் 6.8 இன்ச் ஸ்கிரீனில் இருந்து 7.4 இன்ச் அளவுக்கு நீளும் வகையில் உருவாக்கப்பட்ட சாதனத்தின் வீடியோவை கொரிய நபர் ஒருவர் யூடியூபில் வெளியிட்டு இருந்தார்.

    சாம்சங் நிறுவனமும் ரோலபில் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில், மோட்டோரோலா நிறுவனம் தனது ரோலபில் போன் கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. "லெனோவோ டெக் வொர்ல்டு" நிகழ்வில் மோட்டோரோலா இந்த சாதனத்தை அறிமுகம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ரோலபில் கான்செப்ட் போன் 4 இன்ச்-இல் இருந்து 6.5 இன்ச் வரை நீளும் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது.

    மோட்டோரோலா அறிமுகம் செய்து இருக்கும் ரோலபில் கான்செப்ட் ஏற்கனவே மற்ற நிறுவனங்கள் அறிமுகம் செய்த ரோலபில் மாடல்களை விட வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. வழக்கமான ரோலபில் ஸ்மார்ட்போன்களின் ரோலபில் ஸ்கிரீன் அகல வாக்கில் நீண்டு டேப்லெட் அளவு டிஸ்ப்ளே போன்று மாறும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. எனினும், மோட்டோரோலா கான்செப்ட் ரோலபில் போன் சிறிய ஸ்கிரீன் கொண்ட சாதனமாக இருந்து நீள வாக்கில் நீண்டு சற்றே பெரிய டிஸ்ப்ளேவாக மாறுகிறது.

    இந்த ரோலபில் போன் பொது மக்கள் கைகளுக்கு கிடைக்க மேலும் பல ஆண்டுகள் ஆகும் என டிஸ்ப்ளே செயின் கண்சல்டண்ட் தலைமை செயல் அதிகாரி ரோஸ் யங் தெரிவித்து உள்ளனர். எனினும், தற்போது விற்பனைக்கு கிடைக்கும் கேலக்ஸி Z போல்டு 4 மாடலுடன் ஒப்பிடும் போது புதிய ரோலபில் கான்செப்ட் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    முன்னதாக மோட்டோரோலா நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை ரேசர் கிளாம்ஷெல் ரக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. எனினும், இந்த மாடல் சீன சந்தையில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்த மாடல் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய ரேசர் போல்டபில் போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    ×