என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » rollable tv
நீங்கள் தேடியது "Rollable TV"
எல்.ஜி. நிறுவனம் 'பாய்' போன்று சுருட்டி வைத்துக் கொள்ளும் வகையிலான தொலைகாட்சி மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #LG #TV
எல்.ஜி. நிறுவனம் பெரிய திரை கொண்ட புதிய டி.வி. மாடல்களை அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய டி.வி. மாடல்கள் 'பாய்' போன்று சுருட்டி வைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய டி.வி. மாடலில் 65 இன்ச் அளவில் சுருட்டக்கூடிய திரை கொண்டிருக்கும் என்றும், இதில் வழங்கப்பட்டிருக்கும் சிறிய பட்டனை க்ளிக் செய்ததும் திரை கீழ் இருந்து மேலே எழும்பும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி.யில் OLED ஸ்கிரீன்கள் பொருத்தப்பட்டு இருப்பதால், படங்கள் அதிக துல்லியமாக தெரியும் என்றும் இவை வழக்கமான எல்.சி.டி. ஸ்கிரீன்களை விட எளிமையாக மடிக்கக்கூடியதாக இருக்கிறது.
எல்.ஜி. நிறுவனத்தின் சுருட்டக் கூடிய தொலைகாட்சி மாடல்கள் அந்நிறுவனத்திற்கு விற்பனை அளவில் ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சீன நிறுவங்களுடனான போட்டியை எதிர்கொள்ளவும் உதவும் என கூறப்படுகிறது. தென்கொரிய நிறுவனமான எல்.ஜி. எதிர்கால தொழில்நுட்பங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது.
சீயோல் நகரில் உள்ள எல்.ஜி. ஆராய்ச்சி மையத்தில் சுருட்டக்கூடிய டி.வி.யின் ப்ரோடோடைப் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி. பயன்படுத்தாத போது, பெட்டியில் சுருட்டி வைத்துக் கொள்ளும் வசதியை பயனர்களுக்கு வழங்குகிறது.
எல்.ஜி. தனது சுருட்டக் கூடிய டி.வி. மாடல்களை ஏற்கனவே அறிமுகம் செய்தது. எனினும், 2019 வாக்கில் வர்த்தக ரீதியில் இந்த டி.வி. மாடல்களின் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இது குறித்து எல்.ஜி. சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
சமீபத்தில் வெளியான தகவல்களின் படி தொலைகாட்சி சந்தையில் OLED ரக பேனல்களை கொண்ட டி.வி. மாடல்கள் வெறும் 1.1 சதவிகிதம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது என தெரியவந்துள்ளது. எல்.சி.டி. ரக டி.வி.க்கள் சந்தையில் 98 சதவிகித பங்குகளை கொண்டுள்ளது. எனினும் அடுத்த ஆண்டு வாக்கில் OLED டி.வி. மாடல்களின் விநியோகம் 70 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X