search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "roof damage"

    • காரைக்காலில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
    • ஒரு சிலர் அதிகாலை முதலே பட்டாசு வெடிக்க துவங்கிவிட்டனர்.

    புதுச்சேரி

    தீபாவளி பண்டிகை நாடெங்கும் கொண்டா டப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் பண்டிகையையொட்டி, பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்க ப்பட்டது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில், தீபாவளி அன்று, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், தீபாவளி அன்று ஒரு சிலர் அதிகாலை முதலே பட்டாசு வெடிக்க துவங்கிவிட்டனர். இரவு வரை அரசின் நேரக்கட்டுபாட்டை யாரும் பின்பற்றியதாக தெரியவில்லை. அசம்பா விதங்கள் இல்லாமல் மக்கள் சந்தோசமாக பட்டாசு வெடித்தனர்.

    போலீசாருக்கு வந்த புகாரின் பேரில், தீபாவளி அன்று, காரைக்கால் நெடுங்காட்டில் 5 பேரும், கோட்டுச்சேரியில் 6 பேரும், நிரவி மற்றும் திரு.பட்டின்பத்தில் தலா 4 பேரும், காரைக்கால் நகரில் 5 பேரும், திருநள்ளாறில் 6 பேரும் என 29 பேர் மீது அரசு அனுமதித்த நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு பதிவு செய்ய ப்பட்டு விசாரித்து வருகின்றனர். மேலும் தீபாவளிக்கு முதல் நாள் அனைத்து பகுதிகளிலும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப ட்டது. மொத்தம் 35 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தீபாவளி அன்று, வெடித்த பட்டாசுகளில் சில, திருநள்ளாறு தேனூர் பகுதியில் வசிக்கும் மீனா என்பவர் கூரை வீட்டில் பட்டதில் வீடு தீக்கிறையானது. இந்த தீ விபத்தில், சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான வீட்டு பொருட்கள் எரிந்து சாம்பலானது. இது குறித்து, திருநல்லாறு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    ×