search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RPF Constable"

    ஓடும் ரெயிலில் ஏற முயன்று தவறி விழுந்த வாலிபரை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
    சென்னை:

    ராமேசுவரத்தில் இருந்து அரியானா மாநிலம் பரிதாபாத்துக்கு நேற்று முன்தினம் சர்க்கார் சேது எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. இந்த ரெயில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நடைமேடை 5-ல் வந்தடைந்தது.

    பின்னர் பரிதாபாத் நோக்கி புறப்பட்ட ரெயிலில், வாலிபர் ஒருவர் ஏற முயன்றார். அப்போது அந்த வாலிபரின் கால் தடுமாறி அவர் ஓடும் ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் சுமன் விரைந்து செயல்பட்டு, ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்ட வாலிபரை உடனே பிடித்து வெளியே இழுத்து மீட்டார்.

    இதையடுத்து அந்த வாலிபருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பயணிகள் விரைந்து செயல்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் சுமனை பாராட்டினர்.

    ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை காப்பாற்றிய ஆர்.பி.எப். வீரர் சிவாஜிக்கு பதக்கத்துடன், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது. #RPFConstable #Train
    புதுடெல்லி:

    சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த மாதம் 23ம் தேதி இரவு வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரெயிலில் சென்றார். அப்போது அந்த பெண்ணை ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    அந்த பெண்ணின் அலறல் கேட்டு அதே பெட்டியில் பயணம் செய்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர்  சிவாஜி அங்கு சென்றார். ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது துணிச்சல் மிக்க செயலுக்கு போலீசார் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், ஓடும் ரெயிலில் பெண்ணை காப்பாற்றிய ஆர்.பி.எப். வீரர் சிவாஜிக்கு பதக்கத்துடன், ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஓடும் ரெயிலில் இளம் பெண்ணை காப்பாற்றிய சிவாஜியின் துணிவை ஊக்குவிக்கும் வகையில் ரெயில்வே அமைச்சர் பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய் பணமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே, ரெயில்வே ஐ ஜி பொன் மாணிக்கவேல் சிவாஜியின் துணிவை பாராட்டி 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. #RPFConstable #Train
    ×