search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rs 1000 crore income"

    வருவாய் அடிப்படையில் நாட்டிலேயே பா.ஜனதா கட்சி மிகப்பெரிய பணக்கார கட்சியாக உருவெடுத்துள்ளது. 2017-18ம் ஆண்டு பாஜகவுக்கு ரூ.1027.34 கோடி வருவாய் கிடைத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. #BJP
    புதுடெல்லி:

    அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்கு வரும் வருவாய் மற்றும் செலவு விபரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் 2017-2018ம் ஆண்டுக்கான வரவு-செலவு கணக்குகளை அரசியல் கட்சிகள், தலைமை தேர்தல் கமி‌ஷனிடம் தற்போது தாக்கல் செய்துள்ளன.

    இந்தியாவில் பா.ஜ.க., காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஏ.ஐ.டி.சி., தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 7 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசியக்கட்சிகளாக உள்ளன. இவற்றில் காங்கிரஸ் தவிர மற்ற 6 கட்சிகளும் தங்களுக்கு வந்த வருவாய் தகவலை தாக்கல் செய்துள்ளன.

    இந்த 6 கட்சிகளுக்கும் 2011-18ம் ஆண்டில் மொத்தம் ரூ.1198.75 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் 868 கோடி ரூபாயை 6 கட்சிகளும் செலவு செய்துள்ளன.

    வருவாய் அடிப்படையில் நாட்டிலேயே பா.ஜனதா கட்சி மிகப்பெரிய பணக்கார கட்சியாக உருவெடுத்துள்ளது. 2017-18ம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு ரூ.1027.34 கோடி வருவாய் கிடைத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இதில் ரூ989.70 கோடி தொழில் நிறுவனங்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும்பொதுமக்கள் தாமாக முன்வந்து அளித்த அன்பளிப்பாகும். வங்கிகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளுக்கு ரூ.31.20 கோடி வட்டி மூலமும் வருவாய் கிடைத்துள்ளது. கட்சி சந்தா மற்றும் கட்டணம் மூலம் ரூ.5.58 கோடி பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 2017-18-ல் ரூ.104.84 கோடி வருவாய் வந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ரூ.51.69 கோடி, தேசியவாத காங்கிரசுக்கு ரூ.8.15கோடி, ஏ.ஐ.டி.சிக்கு ரூ.5.16 கோடி, இந்திய கம்யூனிஸ்டுக்கு ரூ.155 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    வருமானம் எப்படி வந்தது என்ற தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் கூறியுள்ள 6 கட்சிகளும் செலவு கணக்குகளையும் ஒப்படைத்துள்ளன. இதில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மட்டும் வருமானத்துக்கு அதிகமாக 65 லட்சம் ரூபாயை செலவு செய்து இருப்பதாக கணக்கு தாக்கல் செய்துள்ளது.

    இந்த கணக்குகளை ஆய்வு செய்ததில் பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு வருமானம் கணிசமாக குறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. #BJP

    ×