search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs. 9 lakh 47 thousand"

    • கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தில் வாழைப்பழங்கள் ஏலம் நடைபெற்றது.
    • வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு வாங்கி சென்றனர்.

    கோபி:

    கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமை வாழைப்பழங்கள் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இதில் கோபி, கவுந்தப்பாடி, டி.என்.பாளையம், பங்களா புதூர், அழுக்குளி, குரு மந்தூர், குன்னத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் வாழைப்பழத்தார்களை கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வாழைப்பழங்கள் ஏலத்தில் கதலி கிலோ ரூ.62-க்கும், நேந்திரன் கிலோ ரூ.43-க்கும் விலை சென்றது.

    பூவன் ஒருத்தார் ரூ.460- க்கும், தேன் வாழை ரூ.710-க்கும், செவ்வாழை ரூ.1000-க்கும் ரொபஸ்டா ரூ.400-க்கும் மொந்தன் ரூ.380- க்கும், ரஸ்தாளி ரூ.510-க்கும்,

    பச்சை நாடன் ரூ.420-க்கும் ஏலத்தில் விற்பனையானது. வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு வாங்கி சென்றனர்.

    மொத்தத்தார் வரத்து 5140 ஆகும். அதன் மதிப்பு ரூ.9 லட்சத்து 47 ஆயிரம் ஆகும்.

    ×