search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RS Polls"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடகாவில் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் பா.ஜ.க. சார்பில் 2 பேர், காங்கிரஸ் சார்பில் ஒருவரும் தேர்வாவதில் எந்தச் சிக்கலும் இல்லை.
    • மீதமுள்ள ஒரு இடத்திற்கு காங்கிரஸ், ம.ஜ.த. கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. 4 இடங்களுக்கு பா.ஜ.க., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சார்பில் மொத்தம் 6 பேர் போட்டியிடுகின்றனர்.

    பா.ஜ.க. சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் அலிகான் ஆகியோரும், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் குபேந்திர ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், இன்று நடந்த வாக்குப்பதிவின்போது ம.ஜ.த. கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ஸ்ரீனிவாச கவுடா தங்கள் கட்சி வேட்பாளருக்குப் பதிலாக காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மாற்றி ஓட்டளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், எனக்கு காங்கிரஸ் கட்சியைப் பிடிக்கும். அதனால் அதற்கு ஓட்டு போட்டேன் என தெரிவித்தார்.

    அதேபோல், மற்றொரு ம.ஜ.த. எம்எல்ஏ ரேவண்ணா, தான் ஓட்டளித்த ஓட்டுச்சீட்டை காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரிடம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பா.ஜ.க. தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளது.

    மாநிலங்களவை தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ ஒருவர் கட்சி மாறி காங்கிரசுக்கு ஓட்டளித்தது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் நோட்டா வாக்குகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. #RSpolls #NOTA #SC
    புதுடெல்லி:

    இந்திய தேர்தல் முறையில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் ‘நோட்டா’ என்ற வாய்ப்பை கையாள அனுமதிக்கப்பட்டுள்ளது.

    மாநில சட்டசபை உறுப்பினர்கள் வாக்களித்து பாராளுமன்ற மேல்சபையான மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.

    இதை எதிர்த்து குஜராத் மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  முன்னாள் கொறடா ஷைலேஷ் மனுபாய் பார்மர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.



    மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வாக்களிக்கும்போது ‘நோட்டா’ முறையை பின்பற்றினால் குதிரை பேரத்துக்கும் ஊழலுக்கும் வசதியாகி விடும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தங்களது பிரதிநிதிகளை பொதுமக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் தேர்தல்களில் பயன்படுத்த மட்டும்தான் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. 

    மாநிலங்களவை தேர்தலிலும் நோட்டாவை அனுமதித்தால் யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்பதை ஊக்குவிப்பதைப் போல் ஆகிவிடும் என சுட்டிக்காட்டியதுடன் இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டிருந்தது.

    ‘நோட்டா முறையை அங்கீகரித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின்னர் கடந்த 2014-ம்  ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் முதன்முறையாக வாக்குச்சீட்டுகளில் நோட்டா முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

    அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு தங்களுக்கு வசதியாக இருந்ததால் இதுதொடர்பாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை’ என தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதைதொடர்ந்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் நோட்டா வாக்குகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என  திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. #RSpolls #NOTA #SC
    ×