search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russia Warns US"

    தடைகளை தொடர்ந்து விதித்துவரும் அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் தீயுடன் விளையாடினால் விபரீத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ரஷியா வெளியுறவுத்துறை மந்திரி குறிப்பிட்டுள்ளார். #RussiawarnsUS #USSanctions
    மாஸ்கோ:

    சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் மீது அமெரிக்க அரசு நேற்று பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. குறிப்பாக, ரஷியாவை சேர்ந்த 33 உளவு நிறுவனங்கள் மற்றும் ராணுவத்துடன் தொடர்புடையை தனியார் நிறுவனங்கள் இந்த தடை வளையத்துக்குள் வந்துள்ளனர்.

    இந்நிலையில், அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைக்கு ரஷியா வெளியுறத்துறை மந்திரி செர்கேய் ரியாப்க்கோவ் கண்டனம் தெரிவித்துள்ளார். தீயுடன் விளையாடினால் விபரீத விளைவுகளை அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.



    அமெரிக்கா விதித்துவரும் தடைகளால் ரஷியாவின் நிலைப்பாட்டில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. ஏற்கனவே தடை விதிக்கப்பட்டவர்கள் மீது மீண்டும் தடை விதிப்பது வேடிக்கையாக உள்ளது. அமெரிக்காவில் இருப்பவர்கள் பொழுதுப்போக்குக்காக இப்படி செய்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

    அமெரிக்காவின் இந்த அர்த்தமற்ற செயல்களால் ரஷியா-அமெரிக்கா இடையிலான உறவுகள் பாதிக்கப்படுவதுடன், சர்வதேச அரசியலில் பதற்றமும் உருவாகும் என்பதை அவர்கள் கவனிக்க தவறி விடுகின்றனர். நெருப்புடன் விளையாடுவது சிறுபிள்ளைத்தனமானது மட்டுமல்ல, அபாயகரமானது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று செர்கேய் ரியாப்க்கோவ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். #RussiawarnsUS #USSanctions
    ×