search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sabarimala Premises"

    திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மா பிறந்தநாளையொட்டி அத்தழப்பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மாவின் பிறந்தநாளையொட்டி 'அத்தழப்பூஜை’ எனப்படும் சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒருநாள் மட்டும் தரிசனத்துக்காக திறக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது.

    அவ்வகையில், இன்று நடை திறக்கப்படுவதை முன்னிட்டு சபரிமலை பகுதியை சுற்றி கடந்த 24 மணிநேரமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிலக்கல் மற்றும் பம்பை பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



    முதன்முறையாக, கோவிலின் அருகே 50 வயதை கடந்த பெண் போலீசாரும் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்நிலையில், சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. நாளை இரவு 10.30 மணிவரை நடை திறந்திருக்கும் என்பதால் ஏராளமான ஐயப்பன் பக்தர்கள் இருமுடி கட்டுடன் தரிசனம் செய்து வருகின்றனர். #SabarimalaTemple #SabarimalaTempleopened #Athazhapuja 
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட உள்ள நிலையில், முதல் முறையாக சன்னிதானத்தில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #Sabarimala #SabarimalaSannidhanam
    சபரிமலை:

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது இந்துக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் நாடு முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.



    கடந்த மாதம் கோவில் நடை  திறந்தபோது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி கோவிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பெண்களை அனுமதிக்காமல் ஐயப்ப பக்தர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர், இறுதி வரை அனுமதிக்கப்படவில்லை.

    இந்த நிலையில், சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக இன்று கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இந்த முறையும் போராட்டம் நடைபெறலாம் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கமாண்டோ படையினர், 100 பெண் போலீசார் உள்பட 2,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் சபரிமலை வரலாற்றில் முதல் முறையாக சன்னிதானம் பகுதியில் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்ட 15 பெண் காவலர்கள் சன்னிதானம் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #Sabarimala #SabarimalaSannidhanam

    ×