என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » sabarimala women
நீங்கள் தேடியது "Sabarimala Women"
பலத்த பாதுகாப்புடன் சபரிமலையில் ஏறிய 2 பெண்களையும் ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்கள் இருவரும் திருப்பி அனுப்பப்பட்டனர். #SabarimalaProtest #SabarimalaWomen
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஐயப்பனை தரிசிக்க இளம்பெண்கள் சென்றால் அவர்களை தடுப்போம் என்றும் எச்சரித்தனர்.
இதற்கிடையே சபரிமலை செல்ல விரும்பும் பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு அளிக்கும் என்று அறிவித்தது.
கேரள அரசின் அறிவிப்பை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்த நாள் முதல் அங்கு சென்ற இளம்பெண்கள் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
கடந்த சித்திரை ஆட்டத் திருநாள், ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறந்த நாள் மற்றும் மண்டல பூஜைக்கு நடை திறக்கப்பட்ட நாட்களில் இச்சம்பவங்கள் நடந்தன.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையில் 11 பெண்கள் நேற்று சபரிமலை சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன் மலையேறிய அவர்கள் ஐயப்ப பக்தர்களால் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பக்தர்கள் போராட்டத்தால் 11 பெண்களுக்கும் மலையேற முடியாத நிலை ஏற்பட்டது. போலீசாரும் பாதுகாப்பு அளிக்க முடியாது என கை விரித்ததால் 11 பெண்களும் ஐயப்பனை தரிசிக்காமல் திரும்பினர்.
சபரிமலையில் நேற்று சென்னை பெண்கள் ஏற்படுத்திய பரபரப்பு ஓயும் முன்பு இன்று கேரளாவைச் சேர்ந்த மேலும் 2 பெண்கள் ஐயப்பனை தரிசிக்க புறப்பட்டனர். கோழிக்கோடு கொயிலாண்டியைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகியோர் இன்று அதிகாலை இருமுடி கட்டி பம்பையில் இருந்து சன்னிதானம் புறப்பட்டனர்.
பம்பை போலீஸ் பாதுகாப்புடன் சென்ற அவர்கள் அப்பாச்சிமேடு வரை தடங்கலின்றி நடந்து சென்றனர்.
அப்பாச்சிமேடு சென்றதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் திடீரென அங்கு குவிந்தனர். அவர்கள் மலையேற முயன்ற இளம் பெண்கள் இருவரையும் சுவர் போல் நின்று மறித்தனர். நாம ஜெப வழிபாடு நடத்தி பெண்களை திரும்பி செல்லும்படி கோஷமிட்டனர்.
காலை 8.30 மணியளவில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்தது. அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி பெண்களை சன்னிதானம் நோக்கி அழைத்துச் செல்ல முயன்றனர். அப்பாச்சி மேட்டில் இருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்றதும், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பெண்களை சன்னிதானம் அழைத்துச் செல்ல முடியாமல் போலீசார் திணறினர். அவர்கள் இதுபற்றி பெண்களிடம் தெரிவித்தனர். இனியும் சன்னிதானம் செல்வது சாத்தியம் இல்லை என்றும், திரும்பிச்செல்வதே நல்லது எனவும் கூறினர்.
போலீசாரின் சமரசத்தை பெண்கள் இருவரும் ஏற்க மறுத்தனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி எங்களை 18-ம் படி ஏற்றி ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை திரும்பிச் செல்ல மாட்டோம் என்று கூறினர். இதனால் சபரிமலையில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
இதையடுத்து தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அப்பச்சமேடு பகுதியில் உள்ள நிலவரத்தை அமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துக் கூறினர். இதையடுத்து, பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், தடுத்து நிறுத்தப்பட்ட 2 பெண்களையும் திருப்பி அனுப்பும்படி அமைச்சர் அறிவுறுத்தினார். அதன்படி 2 பெண்களையும் போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் சபரிமலை செல்லும் அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது. #SabarimalaProtest #SabarimalaWomen
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X