search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Safety Centers"

    கஜா புயலையொட்டி பொதுமக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு காரைக்கால் மாவட்டத்தில் 27 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. #GajaCyclone
    காரைக்கால்:

    ‘கஜா’ புயலையொட்டி புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் கேசவன், சார்பு கலெக்டர் விக்ராந்த்ராஜா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்ஆல்வா தலைமையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

    புயல் காரணமாக காரைக்காலில் இன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் காரைக்கால் துறைமுகம் மற்றும் அரசலாற்றில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    புயல் அபாயத்தால் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆ கடற்கரை ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. காரைக்காலை பொறுத்தமட்டில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    வெள்ள சேதம் ஏற்படுமேயானால் அங்கு வசிக்கும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு காரைக்கால் மாவட்டத்தில் 27 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சமையலுக்கு தேவையான உணவுப் பொருட்கள் தேவையான அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

    புயலை எதிர்கொள்ள அரக்கோணத்தில் வந்திருந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 25 பேர் கமாண்டர் மீரா தலைமையில் நிரவியில் தங்கி உள்ளனர். வெள்ள சேதம் ஏற்பட்டால் பொதுமக்களை மீட்க ரப்பர் படகுகள், பிளாஸ்டிக் மிதவை, லைப்ஜாக்கெட் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர்.

    பொதுமக்களும் 3 நாட்களுக்கு தேவையான குடிநீர், உணவு பொருட்களை சேமித்து வைத்து கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. #GajaCyclone
    ×