search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sago recipes"

    • வெயிலுக்கு குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவது நல்லது.
    • இன்று ஜவ்வரிசியில் மோர்க்களி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    மாவு ஜவ்வரிசி, தயிர் - தலா 200 கிராம்,

    கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்,

    உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,

    மோர் மிளகாய் - 4,

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஜவ்வரிசியை தயிரில் 3 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்க்கவும்.

    அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், மோர் மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் ஊற வைத்த ஜவ்வரிசி கலவையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். கைவிடாமல் கிளற வேண்டும். அடிபிடிக்கக்கூடாது. அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.

    கடாயில் ஒட்டாமல் களி மாதிரி வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    இப்போது சூப்பராக ஜவ்வரிசி மோர்க்களி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இன்று சிவபெருமானுக்கு நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
    • இன்று சிவபெருமானுக்கு நைவேத்தியம் படைக்க இந்த ரெசிபி செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    ஜவ்வரிசி - கால் கப்

    தண்ணீர் - ஒரு கப்

    நெய் - ஒரு தேக்கரண்டி

    முந்திரி, திராட்சை - தேவைக்கு

    சர்க்கரை - அரை கப்

    பால் - 1 கப் - 1 1/2 கப்

    ஏலக்காய் தூள் - தேவைக்கு

    பாதாம், பிஸ்தா - தேவைக்கு

    செய்முறை:

    பாதாம் பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    பாலை நன்றாக காய்ச்சி ஆற வைக்கவும்.

    முதலில் ஜவ்வரிசியை கழுவி கொதிக்க வைத்த நீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்த பின்னர் நன்றாக வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சை போட்டு வறுத்து எடுக்கவும்.

    அதே பாத்திரத்தில் நன்றாக வெந்து இருக்கும் ஜவ்விரிசியை ஊற்றி சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.

    சர்க்கரை நன்றாக கரைந்ததும் கடைசியாக பால் சேர்க்கவும்.

    இத்துடன் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.

    பரிமாறும்போது பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா சேர்த்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான ஜவ்வரிசி பாயாசம் ரெடி.

    • சர்க்கரை நோயாளிகளும் இந்த பாயாசத்தை குடிக்கலாம்.
    • இதை ரெசிபியை செய்வது மிகவும் எளிமையானது.

    தேவையான பொருட்கள்

    கோதுமை ரவை - 1 கப்

    ஜவ்வரிசி - அரை கப்

    தண்ணீர் - 3 கப்

    வெல்லம் அல்லது கருப்பட்டி - 2 கப்

    தேங்காய் பால் - 3 கப்

    ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

    முந்திரி - விருப்பத்திற்கேற்ப

    நெய் - விருப்பத்திற்கேற்ப

    செய்முறை

    ஜவ்வரிசியை அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கோதுமை ரவையைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    ஒரு குக்கரில் வறுத்த கோதுமை ரவை, ஜவ்வரிசி மற்றும் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

    விசில் போனதும், ஒரு வாணலியில் வேக வைத்துள்ள கோதுமை ரவையை ஊற்றி, அதில் வெல்லம் அல்லது கருப்பட்டையை போட்டு அடுப்பில் வைத்து, 10 நிமிடம் நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.

    பின்பு அதில் தேங்காய் பாலை ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஏலக்காய் பொடியைத் தூவி கிளறி இறக்கவும்.

    இறுதியில் மற்றொரு சிறு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பாயாசத்தில் ஊற்றி கிளறினால், சுவையான கோதுமை ரவை பாயாசம் தயார்.

    • ஜவ்வரியில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று ஜவ்வரிசியில் தோசை செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    புழுங்கலரிசி - ஒன்றரை கப்,

    ஜவ்வரிசி (மாவு அரிசி) - 1 கப்,

    சின்ன வெங்காயம் - 10,

    பச்சை மிளகாய் - 4,

    கடுகு - அரை டீஸ்பூன்,

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப,

    எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    ஜவ்வரிசியைக் கழுவி, 4 மணி நேரம் தயிரில் ஊறவைக்கவும்.

    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

    முதலில் அரிசியை ஆட்டவும்.

    பின் ஜவ்வரிசியையும் ஆட்டி எடுக்கவும்.

    வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடு வந்ததும் கடுகு தாளித்து பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதோடு உப்பு சேர்த்து மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான ஜவ்வரிசி தோசை ரெடி.

    • ரவை, சேமியாவில் கேசரி செய்து இருப்பீங்க.
    • இன்று ஜவ்வரியில் கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    ஜவ்வரிசி - கால் கிலோ

    சர்க்கரை - 150 கிராம்

    குங்குமப்பூ - 1 கிராம்

    ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

    முந்திரி, திராட்சை - விருப்பத்திற்கேற்ப

    நெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும்.

    குங்குமப்பூவை சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

    * ஜவ்வரிசியை 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் தண்ணீரை வடிகட்டிவிட்டு ஜவ்வரிசியைத் தனியாக எடுத்து வைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 4 டீஸ்பூன் நெய் ஊற்றி அதில் வடிகட்டிய ஜவ்வரிசியை போட்டு நன்றாக கிளறவும்.

    * ஜவ்வரிசியை மிதமான தீயில் 15 நிமிடங்கள் கிளற வேண்டும். ஜவ்வரிசி கண்ணாடி போல் வரும் வரை இவ்வாறு செய்யவும்.

    * அடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து கிளறவும்.

    * அடுத்து அதில் சிறிது நெய், ஊறவைத்த குங்குமப்பூவை சேர்த்து கிளறவும்.

    * சர்க்கரை நன்றாக கரைந்து திக்கான பதம் வரும் போது வறுத்து வைத்த திராட்சை, முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கும் போது சிறிது நெய் சேர்த்து இறக்கவும்.

    * இப்போது சுவையான, வித்தியாசமான ஜவ்வரிசி கேசரி தயார்.

    இந்த சாபுதானா (ஜவ்வரிசி) கிச்சடியை காலை, மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இதனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - ஒரு கப்,
    உருளைக்கிழங்கு - ஒன்று
    பச்சை பட்டாணி - கைப்பிடியளவு,
    ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - கைப்பிடியளவு,
    கேரட் துண்டுகள் - கைப்பிடியளவு,
    உப்பு - தேவையான அளவு,
    பச்சை மிளகாய் - 3 (இரண்டாக கீறவும்),
    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
    வறுத்த வேர்க்கடலை - 5 டீஸ்பூன்,
    மாதுளை முத்துக்கள் - சிறிதளவு,
    நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    நெய்யில் வறுத்த முந்திரி - 10.

    தாளிக்க :

    நெய் - 3 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    கடுகு - கால் டீஸ்பூன்,
    மிளகு - கால் டீஸ்பூன்.



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பச்சை பட்டாணி, ஸ்வீட் கார்னை வேகவைத்து கொள்ளவும்.

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஜவ்வரிசியை 5 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு களைந்து தண்ணீரை வடிகட்டவும்.

    வாணலியில் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் பச்சை மிளகாய், ஜவ்வரிசி சேர்த்து வதக்கவும்.

    பிறகு அதனுடன் உப்பு, காய்கறிகள் சேர்த்து கிளறி மூடி சிறு தீயில் வைத்து ஐந்து நிமிடம் வேக விடவும்.

    பிறகு மூடியை திறந்து எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

    கடைசியாக வறுத்த வேர்க்கடலை, மாதுளை முத்துக்கள், கொத்தமல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சாபுதானா கிச்சடி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×