search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salah"

    ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான ஆட்டத்தில் காயம் அடைந்த சாலா உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்பட்டுள்ளது.
    உக்ரைனில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ரியல் மாட்ரிட் 3-1 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    இந்த போட்டியின் முதல் பாதி நேரத்தில் லிவர்பூல் அணியின் முன்னணி வீரரான முகமது சாலாவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் கண்ணீரோடு தொடர்ந்து விளையாட முடியாமல் வெளியேறினார். இந்த காயத்தால் அடுத்த மாதம் 14-ந்தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடரில் எகிப்து அணிக்காக விளையாடுவாரா? என்ற சந்தேகம் இருந்தது வந்தது.

    காயம் அடைந்த முகமது சாலா ‘‘யூரோப்பா சாம்பியன்ஸ் லீக் நடைபெற்ற இறுதிப் போட்டி கடினமான இரவாக அமைந்தது. என்றாலும், நான் ஒரு போராளி. நான் ரஷியா சென்று உங்களுக்கு பெருமை சேர்ப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவு எனக்கு வலிமையை கொடுக்கும்’’ என்று கூறியிருந்தார்.



    இந்நிலையில் லிவர்பூல் கால்பந்து கிளப் அணியின் பிசியோ, சாலாவின் காயம் குணமடைய மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஆகும் எனக் கூறியுள்ளார். இதனால் உலகக்கோப்பை தொடரில் சாலா பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    எகிப்து முதன்முறையாக 1934-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் விளையாட தகுதிப் பெற்றது. அதன்பின் 56 வருடங்களுக்குப் பின் 1990-ம் ஆண்டு தகுதிப் பெற்றது. தற்போது 28 ஆண்டுகள் கழித்து தகுதிப் பெற்றுள்ளது. எகிப்து அணி உலகக்கோப்பைக்கு தகுதி பெற முகமது சாலாவின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×