search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salt satyagraha memorial museum"

    வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் மகாத்மா காந்தி சொந்தமாக உப்பு தயாரித்ததை நினைவுகூரும் வகையில் உப்பு சத்தியாகிரகம் அருங்காட்சியகத்தை தண்டியில் மோடி திறந்து வைத்தார். #SaltSatyagrahaMemorial #SaltSatyagrahaMuseum
    அகமதாபாத்:

    வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் உப்புக்கு தனியாக வரி விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடல் நீரில் இருந்து சொந்தமாக உப்பு தயாரிக்கும் சத்தியாகிரகப் போராட்டத்துக்கு மகாத்மா காந்தி அழைப்பு விடுத்தார்.

    குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி கடற்கரை பகுதியை நோக்கி 1930-ம் ஆண்டு 241 மைல் தூர பாதயாத்திரையை காந்தி மேற்கொண்டார். ‘தண்டி யாத்திரை’ ‘உப்பு சத்தியாகிரகம் யாத்திரை’ என்றழைக்கப்படும் இந்த யாத்திரையில் அவருடன் ஆரம்பத்தில் 80 பேர் கலந்து கொண்டனர்.

    இந்த யாத்திரை தண்டி சென்றடைந்தபோது சுமார் 50 ஆயிரம் பேர் உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.

    இந்நிலையில், இந்த ‘உப்பு சத்தியாகிரகம் யாத்திரை’யை நினைவுகூரும் வகையில் தண்டி நகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவகம் மற்றும் அருங்காட்சியகத்தை மகாத்மா காந்தியின் 71-வது நினைவுநாளான இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    காந்தியுடன் இந்த உப்புச் சத்தியாகிரகத்தில் ஆரம்பத்தில் புறப்பட்ட 80 பேரின் சிலைகள் இந்த நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    12-3-1930 அன்று தொடங்கிய உப்பு சத்தியாக்கிரகம்  6-4-1930 அன்று முடிந்தது. இந்த 24 நாட்களை குறிக்கும் விதமாக இங்கு 24 சுவரோவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. #SaltSatyagrahaMemorial #SaltSatyagrahaMuseum 
    ×