search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sambangi"

    • இதனை “கைலாய மலையின் பனித்தூறல்” என்று வர்ணிப்பவர்களும் உண்டு.
    • சிவபெருமானுக்கு பொதுவாக வெள்ளை நிற மலர்கள் மிகவும் படிக்கும்.

    மனதை அமைதிப்படுத்தும் நில சம்பங்கி

    வெள்ளைநிறம் உடைய மலர்கள் சாத்வீக குணத்தை கொண்டவை. மீண்டும் மீண்டும் சாத்வீகமான மலர்களை நாம் இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபாடு செய்து தரிசிக்கும்போது, அந்த வெள்ளை மலர்களில் உள்ள சாத்வீக குணம் நமக்குள்ளும் வந்துவிடும்.

    அத்தகைய சாத்வீக குணத்தை தரும் மலர்களில் ஒன்றாக நில சம்பங்கி மலர் உள்ளது. இந்த நில சம்பங்கி மலர்களுக்கு மற்ற மலர்களை விடக் கூடுதலான ஒரு அம்சம் உண்டு.

    அதாவது நில சம்பங்கி மிகமிக வலிமையான பிரத்யேகமான வாசனை கொண்டது.

    நில சம்பங்கி மாலையை மற்ற மலர்களைபோல கட்டுவது போல் இல்லாமல் ஊசியில் நூல் கோத்து, நீள நீளமாகக் கோத்து, மிக மெல்லிய, நளின மாலைகளை அணிவது இன்றும் வழக்கம்.

    இதைவிட ஆலயங்களில் செய்யப்படும் அனைத்து அலங்காரங்களுக்கும் அதிகம் பயன்படும் மலர் இதுதான்.

    இந்தப் பூவின் வெண்மைநிறம் மற்றும் மெல்லிய நீண்ட குழல் போன்ற வடிவத்தின் காரணமாக, இதனை "கைலாய மலையின் பனித்தூறல்" என்று வர்ணிப்பவர்களும் உண்டு.

    இந்த மலர்மாலை அனைத்து ஆலயங்களிலும் அனைத்து தெய்வங்களுக்கும் எப்போதும் அணிவிக்கப்படும் மாலையாக உள்ளது.

    சகஸ்ரநாம அர்ச்சனைகளுக்கு ஏராளமான பூக்கள் தேவைப்படும்போது வாசனைமிக்க மலர் என்ற ஒரே காரணத்திற்காக அதிகம் இடம்பெறும் மலர் சம்பங்கிதான்.

    மல்லிகை சாகுபடி செய்யும் மதுரை விவசாயிகள் சமீபகாலமாக நிலசம்பங்கி சாகுபடிக்கு வெகுவாக மாறியுள்ளனர்.

    "இரவு ராணி" என்று நம் விவசாயிகள் இந்தப்பூவை சொல்வ துண்டு. சந்தை விற்பனையில் அதிகலாபம் பெற்றுக் கொடுப்பதால் இந்த மலர் பூ வியாபாரிகளின் செல்வம் ஆகவும் கருதப்படுகிறது.

    சிவபெருமானுக்கு பொதுவாக வெள்ளை நிற மலர்கள் மிகவும் படிக்கும்.

    அவனுக்குகந்த நாட்களிலும், நேரங்களிலும் கைநிறைய அள்ளி அள்ளி அர்ச்சித்து வணங்கினால் மனத்தூய்மை பெருகும்.

    உங்களைச்சுற்றி எது நடந்தாலும் பதற்றம் அடைய மாட்டடீர்கள். நிதானமான மனதுடன் செயல்களில் ஈடுபடுவீர்கள்.

    நிலசம்பங்கிப்பூக்களை "புதிய சிருஷ்டி" என்று புதுச்சேரி அன்னை வர்ணித்துள்ளார். எனவே சம்பங்கி மலர்கள் நமக்குள்ள திறனை அதிகப்படுத்தவும், இல்லாத அம்சங்களை உருவாக்கவும் உதவுகின்றன.

    ×