என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » sampark se samarthean
நீங்கள் தேடியது "sampark se samarthean"
பா.ஜ.க.வின் சம்பர்க் ஸே சமர்த்தான் என்னும் “ஆதரவுக்கான தொடர்பு” திட்டத்தின்கீழ் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை அமித் ஷா இன்று சந்தித்தார். #AmitShahmeetsMSDhoni #SamparkseSamarthan
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மே மாதம் 26-ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.
இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக, கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், சுமார் ஒரு லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும் என பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.
அவ்வகையில், பல்வேறு பிரபலங்களை பா.ஜ.க.வினர் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அவ்வகையில், டெல்லியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை அமித் ஷா இன்று சந்தித்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார்.
அவருடன் மத்திய மந்திரி பியுஷ் கோயலும் வந்திருந்தார். மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் புத்தகத்தை அவரிடம் அளித்த அமித் ஷா, சிறிது நேரம் தோனியுடன் உரையாற்றி, விடைபெற்று சென்றார். #AmitShahmeetsMSDhoni #SamparkseSamarthan
×

X