என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » sani bhagwan
நீங்கள் தேடியது "sani bhagwan"
நவக்கிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சனி கிரகம் இருக்கிறது. சனி பகவானுக்கு உகந்தவை, பகையான கிரகங்கள், நட்பு கிரகங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
காரகன் - ஆயுள்
தேவதை - ஈஸ்வரன்
தானியம் - எள்
உலோகம் - இரும்பு
நிறம் - கருப்பு
குணம் - தாமஸம்
சுபாவம் - குரூரர்
சுவை - கசப்பு
திக்கு - மேற்கு
உடல் அங்கம் - தொடை
தாது - நரம்பு
நோய் - வாதம்
பஞ்சபூதம் - காற்று
பார்வை நிலை - தான் நின்ற ராசியில்இருந்து 3,7,10 ஆகிய இடங்களின் மீது முழுமையானபார்வை, 5,9 ஆகிய இடங்களில் அரை பங்கு பார்வை, 4,8 ஆகிய இடங்களில் முக்கால் பங்கு பார்வை.
பாலினம் - ஆண்- பெண் இல்லாத தன்மை
உபகிரகம் - குளிகன் (மாந்தி)
ஆட்சி ராசி - மகரம், கும்பம்
உச்ச ராசி - துலாம்
மூலத்திரிகோண ராசி - கும்பம்
நட்பு ராசி - ரிஷபம், மிதுனம், கன்னி
சமமான ராசி - தனுசு, மீனம்
பகை ராசி - கடகம், சிம்மம், விருச்சிகம்
நீச்ச ராசி - மேஷம்
திசை ஆண்டுகள் - பத்தொன்பது ஆண்டுகள்
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - இரண்டரை ஆண்டுகள்
நட்பு கிரகங்கள் - புதன், சுக்ரன், ராகு, கேது
சமமான கிரகம் - குரு
பகையான கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
அதிக பகையான கிரகம் - சூரியன்
இதர பெயர்கள் - கரியவன், அந்தகன், காளி, கௌரி, மந்தன், முதுமகன், முடவன்
நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி

தஞ்சாவூர் அருகே உள்ள திருநறையூர் ராமநாதசுவாமி ஆலயத்தில் சனீஸ்வரர் தனது குடும்பத்தினருடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தஞ்சாவூர் அருகே உள்ள திரு நறையூர் ராமநாதசுவாமி ஆலயத்தில் சனீஸ்வர பகவானுக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. இந்த சன்னிதியில் சனீஸ்வரர் தனது குடும்பத்தினருடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
சனீஸ்வரருக்கு இடது பக்கத்தில் மந்தா தேவியும், வலது பக்கத்தில் ஜேஷ்டாதேவியும் காட்சிதருகின்றனர். அவர்களுக்கு அருகே சனிதேவனின் புதல்வர்களாக குளிகன் மற்றும் மாந்தி இருக்கின்றனர். இது ஒரு அபூர்வமான அமைப்பாகும்.

இலத்தூர் அறம்வளர்த்த நாயகி சமேத மதுநாத சுவாமி திருக்கோவில் சனி பகவான் பரிகாரத் தலம் ஆகும். ஏழரைச்சனியின் துன்பத்தை நீக்கும் பரிகார தலம் இதுவாகும்.
இலத்தூர் அறம்வளர்த்த நாயகி சமேத மதுநாத சுவாமி திருக்கோவில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்தது. சனி பகவான் பரிகாரத் தலம் இது. நவக்கிரகங்களுள் ஒன்றான சனீஸ்வர பகவான் தனிச்சன்னிதி கொண்டு தெற்கு நோக்கி வீற்றிருக்கும் ஒரே தலம் இலத்தூர் ஆகும்.
மனிதர்கள் மட்டுமல்லாமல் சிவனையே சனி பகவான் சில காலங்களில் பிடித்து ஆட்டிப் படைத்துள்ளார். சிவன் விஷமுண்டது கண்டகச்சனி காலத்திலும், தட்சனிடம் அவமானப்பட்டது அஷ்டமச்சனி காலத்திலும், குளத்தில் உள்ள கருங்குவளை மலருக்கடியில் ஏழரை நாழிகை மறைந்திருந்தது ஏழரைச்சனி காலத்திலும் ஆகும். அத்திருக்குளம்தான் இத்திருக்கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளதாக தல வரலாறு சொல்கிறது.
அகத்தியருக்கு ஏழரைச்சனி ஆரம்பித்ததும், பொதிகை மலையில் இருந்து புறப்பட்டு, ஏழரை ஆண்டுகள் வடதிசை சென்று திரும்பும் வழியில் அனுமன் நதி பாயும் இத்திருக்குளத்தில் நீராடிவிட்டு புளிய மரத்தடியில் உள்ள சிவனை வழிபட்டு, அருகிலேயே ஈசனின் இருப்பிடமான கயிலாயத்தை (வடக்கு) நோக்கி அமர்ந்து சனிபகவானை நினைத்து, சனீஸ்வர ஸ்தோத்திரம் பாடினார். இதையடுத்து அவருக்கு சனீஸ்வர பகவான் காட்சியளித்தார். அகத்தியர் வடக்கு நோக்கி அமர்ந்திருந்ததால் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அகத்தியருக்குக் காட்சியளித்தார்.
குளத்தில் இருந்த கருங்குவளை மலருக்கடியில் ஈஸ்வரன் மறைந்திருந்ததாலும், ஏழரைச்சனி போக்கின்போது அகத்தியர் இக்குளத்தில் நீராடிவிட்டு சனி பகவானை தரிசித்ததாலும் இக்குளம் அகத்தியர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
ஏழரைச்சனி விலகுபவர்கள் மட்டும் இதில் நீராடிவிட்டு சனி பகவானை தரிசிக்க வேண்டும். மற்றவர்கள் நேரடியாக கோவிலுக்குள் சென்று வணங்கலாம். இங்கு பொங்கு சனியாக வீற்றிருந்து அருள்பாலிப்பதால் சனீஸ்வர பகவான் பிரசாதத்தை வீட்டிற்குக் கொண்டு செல்லலாம்.
திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது இலத்தூர். சென்னை, மதுரை, திருநெல்வேலியிலிருந்து தென்காசிக்கு பேருந்து வசதிகளும், ரெயில் சேவையும் உள்ளது.

×

X