search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sani sani dosham"

    ஜாதகத்தில் சனி தோஷம் கொண்டு துன்பங்கள் அனுபவிப்பார்கள் “விநாயகரை” வழிபட்டால் போதும், வேறு எதுவும் செய்யத் தேவையில்லை.
    ஜாதகத்தில் சனி தோஷம் கொண்டு துன்பங்கள் அனுபவிப்பார்கள் “விநாயகரை” வழிபட்டால் போதும், வேறு எதுவும் செய்யத் தேவையில்லை. இதனை விளக்கும் புராண கதை ஒன்றை காணலாம். ஒரு தடவை ஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் நிஷ்டையில் இருந்து, விநாயகர் தன்னைப் பிடிப்பதற்காகச் சனி பகவான் வருவதை அறிந்து கொண்டார். அவன் வந்ததும் ஒரு தலைச் சுவடியை நீட்டினார். “அதில் இன்று போய் நாளை வா” என்றிருந்தது.

    பின்னர் விநாயகப் பெருமான் அதை அரசமரத்தடியில் வைத்தார். பின்பு சனி பகவானிடம் “சனீஸ்வரா எந்த நாளும் இந்த அரசமரத்திற்கு வருக. இந்த ஓலைச் சுவடியில் என்ன எழுதி இருக்கிறதோ அதன்படி நடப்பாயாக!” என்று சபித்து விட்டு மறைந்து விட்டார். அதன் பிரகாரம் சனீஸ்வர பகவான் தினமும் அந்த அரச மரத்தடிக்குச் சென்று அதில் உள்ள வாசகத்தைப் படித்து ஏமாந்தபடி திரும்புவது வழக்கமானது. இப்படி பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஏமாந்துபோன சனிபகவான், விநாயகரைப் பிடிப்பது என்பது முடியாத காரியம் என்றுணர்ந்து அவரை துதித்து வழிபடத் தொடங்கினார்.

    விநாயகரும், அவர் முன்தோன்றி “சனீஸ்வரா, காரணமின்றி யாரையும் உன் சக்தியைப் பயன்படுத்தித் தவறாக நடக்கக்கூடாது. இதற்கு உன் அனுபவம் ஒரு படிப்பினையாகட்டும். இன்று முதல் என்னை வணங்கும் பக்தர்களையும் நீ பிடித்து துன்புறுத்தக் கூடாது” என்று கூறி அவருக்கு ஆசி அளித்து மறைந்தார்.
    இதன்படியே இன்றும் சனி தோஷம் உள்ளவர்கள் விநாயகரை அவருக்கு உகந்த நாட்களான சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி இன்னும் பிற நாள்களிலும் வணங்கி வர சனிதோஷத்தில் இருந்து முற்றிலும் விடுபடுகிறார்கள். சனி பிடிக்காதது மட்டுமல்ல, சனியின் கெடுபலன் களையும் குறைத்து அருள்புரிகிறார் விநா யகர், நவக்கிரக கோட்டையில், அதுவும் சனி பகவான் எதிரியில் அமர்ந்து கொண்டு.

    நவக்கிரக கோட்டையில் ஸ்ரீ நவசக்தி சுயம்பு விநாயகராக அருள்பாலிக்கிறார். நவக்கிரகங்கள் எல்லாம் தனித்தனி சந்நிதிகளில் விநாயகர் எழுந்தருளியிருக்கும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளனர். வேலூரில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்னை. பொன்னையில் இருந்து 3 கி.மீட்டரில் உள்ளது நவக்கிரகக் கோட்டை. வேலூரிலிருந்து பொன்னைக்கு பேருந்து வசதி உண்டு. பொன்னையில் இருந்து மினி பஸ் மற்றும் ஆட்டோ மூலம் நவக்கிரகக் கோட்டையை அடையலாம்.

    யாரும் சனியோட கடுமையால பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்....

    சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப் போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும். அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.

    வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால், அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும். அப்படித் தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக் காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும். இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும். இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்து முக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டிற்கு ஒரு முறை கிரக நிலை மாறும். அப்படி மாறியதும் அதன் வலுஇழந்து போய் விடும். இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப் போட வேண்டும்.

    ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள். இதனால், சனி பகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, கண்டச் சனி, அர்த்தாஷ்டகச் சனி, சனி மகாதசை நடப்பவர்களுக்கு, இந்த செயல் ஒரு மிக பெரிய வர பிரசாதம் ஆகும்.

    உடல் ஊனமுற்றவர்களுக்கு--காலணிகள், அன்னதானம், அளிப்பது, மிக நல்லது.
    ×