search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanitation by waste water"

    • இந்த தெருப்பகுதிக்கு சாக்கடை வடிகால்கள் இல்லாததால் கொட்டகையில் இருந்து வெளியேறும் மாட்டுச் சாணம் மற்றும் கழிவு நீர் சாலையிலேயே தேங்கி நிற்கிறது.
    • தெரு வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மாட்டு ச்சாணத்தின் மேல் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டி பட்டாளம்மன் கோவில் தெருப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதே தெருவில் வசிக்கும் தனிநபர் ஒருவர் அவரது வீட்டில் கொட்டகை அமைத்து பசுமாடுகள் வளர்த்து வருகிறார். இந்த தெருப்பகுதிக்கு சாக்கடை வடிகால்கள் இல்லை.

    எனவே கொட்டகையில் இருந்து வெளியேறும் மாட்டுச் சாணம் மற்றும் கழிவு நீர் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மாடுகளின் கழிவை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அகற்ற வேண்டும் என அவருக்கு பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் எந்த வித பலனும் இல்லை. அதே போல கடமலை க்குண்டு ஊராட்சி நிர்வாக த்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.

    அதனால் தற்போது இந்த தெருப்பகுதி முழுவதும் மாட்டு சாணம் குவிந்து காணப்படுகிறது. தெரு வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மாட்டு ச்சாணத்தின் மேல் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சுகாதார கேடு ஏற்பட்டுள்ள காரண த்தால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகளால் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர்.

    அதேபோல குழந்தைகளுக்கு தோல் பிரச்சனைகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் மாவட்ட கலெ க்டர் அலுவலகத்தில் முறை யிடப் போவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

    ×