என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » santhanavanam
நீங்கள் தேடியது "Santhanavanam"
திருப்பதியில் தேவஸ்தானம் உருவாக்கியுள்ள சந்தன வனத்தில் 3 யானைகள் நடமாடுவதை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். #Elephantmovement
திருமலை:
திருப்பதியில் பாபவிநாசம் அருவிக்கு செல்லும் வழியில் உள்ள பார்வேட்டு மண்டபம் பகுதியில் தேவஸ்தானம் சந்தன மரங்களையும், செம்மரங்களையும் நட்டு பராமரித்து வருகிறது.
ஏழுமலையானின் கைங்கரியத்துக்கு தேவையான சந்தன கட்டைகளை பெறுவதற்காக மரங்களை வளர்த்துள்ளனர்.
இந்த நிலையில் சந்தன வனத்துக்கு பின்புறம் நள்ளிரவில் 3 யானைகள் நடமாடியதை வனத்துறையினர் கண்டறிந்தனர். அந்த யானைகள் சந்தன மரங்களின் நீர் பாசனத்துக்காக அமைக்கப்பட்ட தண்ணீர் குழாய்களை உடைத்து விட்டு சென்றுள்ளன.
திருமலையில் இதுவரை யானைகள் இல்லை. தற்போது அவை கடப்பா மாவட்டத்திலிருந்து சேஷாசலம் வனப்பகுதி வழியாக திருமலைக்கு வந்துள்ளன. இதற்கு முன் யானைகள் கூட்டம் மலைச் சாலையின் நடுவில் வந்ததால் வனத்துறையினர் ஸ்ரீவாரி பாதாலு பகுதிக்கு செல்லும் வழியை மூடி பக்தர்கள் செல்ல அனுமதி மறுத்தனர்.
தற்போது பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியில் யானைகள் நடமாடி வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பக்தர்கள் நடமாடும் பகுதிக்குள் யானைகள் வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். #Elephantmovement

×

X