search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sarabjit murder case"

    பாகிஸ்தான் நாட்டின் லாகூர் சிறையில் இந்திய கைதி சரப்ஜித் சிங் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவரை நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. #Pakistancourt #Sarabjitmurder #Lahorecourt
    இஸ்லாமாபாத்:

    இந்தியாவில் இருந்து தவறுதலாக எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த சரப்ஜித் சிங் என்பவரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். பின்னர், அந்நாட்டில் 1990-ம் ஆண்டு 14 பேரை பலி வாங்கிய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாகக் கூறி சரப்ஜித் சிங்குக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

    ஆனால் சரப்ஜித் சிங்குக்கு குண்டுவெடிப்பில் எவ்விதத் தொடர்பும் இல்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்த போதிலும் அதை பாகிஸ்தான் அரசு ஏற்கவில்லை. அவரது கருணை மனுவையும் அந்நாட்டு முன்னாள் அதிபர் முஷாரப் நிராகரித்து விட்டார்.

    எனினும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான அரசு, 2008-ல் சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்தது. 

    லாகூரில் உள்ள கோட் லக்பத் மத்திய சிறையில் இருந்த அவரை கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சக கைதிகள் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி 2-5-2013 அன்று அவர் உயிரிழந்தார். 

    பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்திய கைதி சரப்ஜித் சிங்கை (49) அடித்துக் கொலை செய்த வழக்கில் அந்நாட்டின் 2 மரண தண்டனைக் கைதிகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    லாகூரில் உள்ள கோட் லக்பத் மத்திய சிறையில் நீதிபதி முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின்போது, அமீர் சர்ஃப்ராஸ் என்ற தம்பா மற்றும் முடாசார் பஷீர் ஆகிய இரு கைதிகள் மீது முறைப்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது

    அவர்களுக்கு எதிராக நடந்த வழக்கின்போது குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புள்ளவர் என்பதால் சரப்ஜித் சிங்கை சிறைக்குள் வைத்து தாக்கி கொன்றதாக வாக்குமூலம் அளித்திருந்தனர்.

    இந்நிலையில், இந்த கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் அவர்கள் இருவரையும் விடுதலை செய்து லாகூர் மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி முஹம்மது மொயின் கோக்கார் இன்று தீர்ப்பளித்தார். #Pakistancourt #Sarabjitmurder #Lahorecourt
    ×