search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sardar Vallabhbhai Patel Statue"

    உலகிலேயே மிக உயரமான சிலையான, சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். #SardarVallabhbhaiPatel #StatueOfUnity
    அகமதாபாத்:

    ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது.

    சர்தார் வல்லபாய் படேல், நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும் வகையில், ‘ஒற்றுமைக்கான சிலை’ என்று இது அழைக்கப்படுகிறது.

    இதன் உயரம் 182 மீட்டர். உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட 2 மடங்கு உயரம் கொண்டது.

    இந்த சிலையை உருவாக்க 70 ஆயிரம் டன் சிமெண்ட், ஆயிரக்கணக்கான டன் எக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. சிலையின் வெளிப்புற பூச்சுக்காக 1,700 டன் வெண்கலம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.



    சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். சிலையை அவர் திறந்து வைத்தவுடன், இந்திய விமானப்படைக்கு சொந்தமான 3 விமானங்கள் வானில் பறந்து சென்று, தேசிய கொடியில் உள்ள 3 வண்ணங்களில் பொடிகளை தூவி, வானில் தேசிய கொடியை உருவாக்கின.

    மேலும் நாட்டின் ஒற்றுமையை குறிக்கும்வகையில், சிலை அருகே உருவாக்கப்பட்டு உள்ள ஒற்றுமை சுவரையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது, 3 போர் விமானங்கள், அந்த சுவருக்கு மேலே தாழ்வாக பறந்து சென்றன.



    பின்னர், படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, மி-17 ரகத்தை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் மூலம் படேல் சிலை மீது மலர்கள் தூவப்பட்டன.

    சிலை திறப்பை முன்னிட்டு, குஜராத் காவல்துறை, ஆயுதப்படை மற்றும் துணை ராணுவப்படைகளைச் சேர்ந்த பாண்டு வாத்திய குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. 29 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட கலைஞர்களின் நடன, இசை நிகழ்ச்கிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சிலை திறப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் காண வசதியாக, 135 மீட்டர் உயரத்தில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து சர்தார் சரோவர் அணையையும், அதைச் சுற்றி உள்ள மலைகளையும் பார்த்து ரசிக்கலாம்.  #SardarVallabhbhaiPatel #StatueOfUnity #IronManofIndia #NationalUnityDay

    உகாண்டா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கு சர்தார் வல்லபாய் படேலின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார். #ModiinUganda
    கம்பாலா:

    அரசுமுறை பயணமாக நேற்று உகாண்டா வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கடற்கரை நகரமான எண்ட்டெபே நகர விமான நிலையத்தில் உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி தலைமையில் முப்படை அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் இருநாடுகளின் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக மோடி - யோவேரி முசெவேனி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்தியா - உகாண்டா இடையில் 4 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. ராணுவ ஒத்துழைப்பு, விசா நீட்டிப்பு, கலாசார பரிவர்த்தனை தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டன.

    மேலும், உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு இந்தியாவின் அன்பளிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன கருவிகள் வழங்கப்படும் என்றார்.

    இந்நிலையில், தலைநகர் கம்பாலாவில் அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் மார்பளவு சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.



    அதன்பின்னர், கம்பாலாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, அடுத்த ஆண்டு இந்தியாவின் அலகாபாத் நகரில் நடைபெறவுள்ள கும்பமேளா நிகழ்ச்சி மற்றும் வாரணாசியில் நடைபெறும் பிரவாசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். அந்த விழாவுக்கு உங்களை அழைக்கவே நான் இங்கு வந்துள்ளேன்.

    உகாண்டாவில் அடுத்த தடவை நீங்கள் வாங்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

    உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றும் பிரதமர் மோடிக்கு எண்ட்டெபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #ModiinUganda
    ×