search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sarkar"

    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியை இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்த நிலையில், அவரது ராஜினாமாவை ஏற்க சங்க உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். #Bhagyaraj
    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்தார். சர்கார் பட கதை விவகாரத்தால் மிகவும் மனவேதனை அடைந்ததாக பாக்யராஜ் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், பாக்யராஜின் ராஜினிமாவை ஏற்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திரைப்பட எழுத்தாளர் சங்க பொதுச் செயலாளர் மனோஜ் குமார் தெரிவித்திருப்பதாவது,

    பாக்யராஜ் தொடர்ந்து தலைவர் பதவியை வகிக்க வேண்டும், என்று அவரது ராஜினாமாவை சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டதால், பாக்யராஜே தலைவர் பதிவியை ஏற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாக்யராஜ் தலைவர் பொறுப்பேற்பது குறித்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #Bhagyaraj

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு மதுரை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Sarkar #Vijay
    விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் கதைக் கரு தொடர்பாக சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டது.

    இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மகேந்திர பாண்டி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். 

    அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் சர்கார் படத்துக்கு ரூபாய் 500 முதல் 1,000 வரை ஆன்லைனில் வசூலித்து விதி மீறலில் ஈடுபடுகிறார்கள். இதனால் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பும் நடைபெறுகிறது. எனவே, மதுரை மாவட்டத்தில் சர்கார் படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் 2017-ல் உள்துறை செயலர் (சினிமா) வெளியிடபட்ட அரசாணைப்படி கட்டணம் வசூலிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.



    நேற்று இந்த மனு நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் சிறப்பு குழு ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வழக்கை முடித்துவைத்தனர். #Sarkar #Vijay 

    சர்கார் பட சர்ச்சையை தொடர்ந்து திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். #Bhagyaraj #Sarkar
    தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    போட்டி இல்லாமல், அனைத்து உறுப்பினர்களோட ஏகோபித்த ஒப்புதலோட என்னை நம்ம சங்கத்துக்கு தலைவரா தேர்ந்தெடுத்தீங்க, நானும் சந்தோஷமா பொறுப்பு ஏறத்துக்கிட்டு, மன சாட்சியோட நேர்மையா செயல் பட்றதா உறுதிமொழி ஏத்துக்கிட்டேன். எல்லாம் நல்லபடியாதான் போயிட்டிருந்தது. 

    திடீர்னு சர்கார் பட சம்பந்தமாக சங்கத்துக்கு ஒரு புகார் வந்தது. அந்த புகாரை பரிசீலித்து சம்பந்தப்பட்ட உறுப்பினர்கிட்ட உண்மை இருப்பதா தெரிஞ்சதாலே, அவருக்கு நியாயம் வழங்க, பொறுப்பில் இருக்கற முக்கியமானவங்க எல்லாரையும் கலந்து ஆலோசிச்சு நடவடிக்கை எடுத்து, நல்லபடி நியாயமா அதை செயல்படுத்தவும் முடிஞ்சுது. ஆனா.. அதுல பல அசெளகரியங்கள் நான் சந்திக்க வேண்டி வந்தது. அதுக்கு முக்கிய காரணம்னு நான் நினைக்கிறது தேர்தல்ல நின்னு ஜெயிக்காம நான் நேரடியா தலைவர் பொறுப்புக்கு வந்ததுதான்னு நினைக்கிறேன். 



    என்னை மாதிரியே போட்டி இல்லாம பதவிக்கு வந்த எல்லாருமே ராஜினாமா பண்ணிட்டு முறையா தேர்தல் நடத்தி, மறுபடியும் பொறுப்புக்கு வர்றதுதான். நான் யாரையும் நிர்பந்திக்கவில்லை.

    தேர்தல் நடத்தினால் அதில் முறையா நின்னு, மெஜார்ட்டி ஓட்டோட ஜெயிச்சு பொறுப்பை ஏத்துக்கிட்டு, தொடர்ந்து கடமையோட செயல்பட்றேன். இப்படிக்கு, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்யும் கே.பாக்யராஜ். 

    எனக்கு நேர்ந்த அசௌகர்யங்கள் என்ன? 

    ஒழுங்கினங்கள் என்னாங்கறதை, சங்க நலன் நற்பெயர் கருதி நான் வெளியிட விரும்பல.

    அதோ், முருகதாஸிடம் நான் கெஞ்சியும் உடன் படாததாலே வேறு வழியே இல்லாம சன் பிக்சர்ஸ் போல ஒரு பெரிய நிறுவனத்தின், மிகப் பெரிய படமான சர்கார் படக் கதையை நான் வெளியே சொல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இருந்தாலும் தவறு என உணர்ந்து சம்பந்தப்பட்ட சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கோருகிறேன். #Bhagyaraj #Sarkar

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படம் சிறப்பு காட்சிக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Sarkar #Vijay
    விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் கதைக் கரு தொடர்பாக சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 6-ஆம் தேதி ரிலீஸாகிறது.

    தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் படங்களை கூடுதல் காட்சிகள் திரையிட்டாலோ, அதிக விலைக்கு டிக்கெட் விற்றாலோ வழக்கு தொடர்வேன் என்று சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் தெரிவித்து இருந்தார்.

    இதை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூடுதல் காட்சிகள் திரையிட தடைவிதித்து உத்தரவிட்டது.



    தேவராஜ் இதுபற்றி கூறும் போது, ‘சர்கார்’ உள்ளிட்ட படங்களில் விதிகள் மீறப்படுகிறதா என்று கண்காணிப்பேன். நடவடிக்கை இல்லாவிட்டால் வழக்கு தொடுப்பேன். ஒரு ரூபாய் அதிகம் வாங்கினாலும், கூடுதல் காட்சி அனுமதி இன்றி ஓட்டினாலும் கண்டிப்பாக வழக்கு போடுவேன். நீதிமன்றத்திற்கு தேவை ஆதாரம். அந்த ஆதாரத்துடன் வழக்கு தொடுப்பேன்’ என்றார். #Sarkar #SarlarSpecialShows #Vijay

    விஷாலுடன் காதலுமில்லை, திருமணமும் இல்லை என்று கூறியுள்ள வரலட்சுமி, தான் விரைவில் அரசியலில் நுழையப்போவதாக கூறியுள்ளார். #Varalakshmi #Vishal #Sarkar
    “போடா போடி” படம் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார்.

    சமீபத்தில் வெளியான சண்டக்கோழி-2 படத்தில் வில்லியாக நடித்து உள்ளார். அடுத்து விஜய்யுடன் “சர்கார்” படத்தில் நடித்து இருக்கிறார்.

    அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது:-

    ’நடிகர் விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா வி‌ஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மை இல்லை.

    விஷாலுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தால் நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தயார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். எதற்காக விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.



    தமிழகத்தில் அரசியல் காலியிடம் உள்ளது உண்மைதான். அந்த காலியிடத்தை நிரப்பத்தான் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ஜெயலலிதா சிறப்பான ஆளுமை மிக்க தலைவர். இதுவரை அவரை 3 முறை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அரசியலில் அவர் எனக்கு உந்து சக்தியாக உள்ளார். சிறப்பான ஆட்சியாளர், சிறப்பான கல்வியாளர். தனியொரு பெண்மணியாக மொத்த மாநிலத்திலும் ஆளுமை செலுத்தினார்.



    இன்னும் 5 வருடங்களில், அரசியலுக்கு வருவேன். எனது தந்தை அவரது கட்சியில் சேருவதற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்தார். நான்தான் மறுத்துவிட்டேன். நான் தந்தை கட்சியில் சேர்ந்து அரசியலுக்கு வர மாட்டேன். எந்த கட்சியில் சேருவேன் என்பதை பிறகு தெரிவிக்கிறேன்’

    இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்தார். #Varalakshmi #Vishal #Sarkar

    விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் கதை விவகாரத்தில் நடிகர் பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு மன்னிப்பு கேட்டுள்ளார். #Sarkar #Shanthnu
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் சர்கார். வரும் 6-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் கதைத் திருட்டு புகார் தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறின.

    நேற்று ஐகோர்ட்டில் இந்த விவகாரம் சுமூகமாக முடிக்கப்பட்டது. இந்த பிரச்சினையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவரான இயக்குனர் கே.பாக்யராஜ் சில பேட்டிகள் மற்றும் அறிக்கைகளில் சர்கார் படத்தின் கதையை கூறி விளக்கியிருந்தார்.

    படம் வெளியாகும் முன்னர் இப்படியாக கதையைக் கூறியதால் பலர் அதிருப்தியடைந்தனர். முக்கியமாக விஜய் ரசிகர்கள் பாக்யராஜை கடுமையாக விமர்சித்தனர்.



    இந்நிலையில் பாக்யராஜின் மகன் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் இல்லை. என்றைக்கும் விஜய் அண்ணா, எனக்கு விஜய் அண்ணா தான்.

    தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டதால் கதையை அப்பா கூறினார். அதனால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தீபாவளியை கொண்டாடுவோம். சர்காரை கொண்டாடுவோம்.” என்று கூறியுள்ளார். சாந்தனு விஜய்யின் தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் `சர்கார்' படத்தின் முன்னோட்டம். #Sarkar #Vijay #KeerthySuresh
    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் `சர்கார்'.

    விஜய் - கீர்த்தி சுரேஷ் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி, பிரேம்குமார், துளசி சிவமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - ஏ.ஆர்.ரஹ்மான், படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவு - கிரிஸ் கங்காதரன், கலை இயக்குனர் - டி.சந்தானம், சண்டைப்பயிற்சி - ராம், லக்‌ஷ்மன், நடனம் - பிருந்தா, ஷோபி பால்ராஜ், தயாரிப்பு - கலாநிதி மாறன், தயாரிப்பு நிறுவனம் - சன் பிக்சர்ஸ், எழுத்து - ஏ.ஆர்.முருகதாஸ், ஜெமோகன், இயக்கம் - ஏ.ஆர்.முருகதாஸ்.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது,

    விஜய்யுடன் நான் இணைந்த மூன்றாவது படம் சர்கார். முதல் படம் துப்பாக்கி பண்ணும் போது, அவருடைய படங்களை முதலில் பார்துவிட்டு நான் ஒரு கணக்கில் இருந்தேன். என்னுடைய கதையை வேற லெவலுக்கு கொண்டு சென்றார் விஜய். அவருடைய திறமைக்கு ஏற்ப ஒரு படம் எடுக்க வேண்டும் என்று கத்தி படம் பண்ணோம். இப்போது மூன்றாவது முறையாக அவருடன் இணைந்து சர்கார் படம் பண்ணியிருக்கிறேன்.



    இந்த படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பற்றி என்னால் பெரியதாக சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் கூறுகிறேன். சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள். படத்தில் விஜய் சார் அவரது நிஜ வாழ்க்கையில் இருப்பது போல் நடித்திருக்கிறார். உங்களுக்கும் அது தோன்றும். ஒவ்வொரு முறையும் அவரது திறமை வளர்ந்து கொண்டே போகிறது. விஜய் சார் எனக்கு கிடைத்த ஆயுதம். அவரை ஒரு பீரங்கியாக பயன்படுத்தியிருக்கிறேன். என்று கூறியிருந்தார்.

    தீபாவளி பண்டிகை நாளான வருகிற நவம்பர் 6-ஆம் தேதி சர்கார் வெளியாக இருக்கிறது. #Sarkar #Vijay #KeerthySuresh

    சர்கார் டீசர் பார்க்க:

    விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ திரைப்படத்துடன் விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ திரைப்படம் வெளியாகாமல் தள்ளி போயிருக்கிறது. #Sarkar #ThimiruPudichavan
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு, பழ கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

    இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அன்றைய தினத்தில் ‘சர்கார்’ படத்திற்கு போட்டியாக விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’, ஆர்.கே.சுரேஷின் ‘பில்லா பாண்டி’ படங்கள் வெளியாக இருப்பதாக அறிவித்தார்கள்.

    தற்போது விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி தினத்தில் வெளியாகாமல் நவம்பர் 16ம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிட இருக்கிறார்கள். 
    விஜய்யின் சர்கார் படத்தின் வழக்கு முடிவுக்கு வந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வதந்திகளை நிறுத்துங்கள் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருக்கிறார். #Sarkar #ARMurugaDoss
    விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எழுத்தாளரும் உதவி இயக்குனருமான வருண் ராஜேந்திரன் என்பவர் சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்றும், செங்கோல் என்ற பெயரில் அக்கதையை தென் இந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருப்பதாகவும் கூறினார்.

    இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் சர்கார் படத்துக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சர்கார் படத்தின் கதை விவகாரத்தில் வருணுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதாக முருகதாஸ் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் சர்கார் படத்தின் டைட்டில் கார்டில் வருண் ராஜேந்திரன் பெயருடன் நன்றி என்று போட இருப்பதாகவும் கூறியிருந்தார்கள். இதையடுத்து வருண் ராஜேந்திரனின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டதாக செய்திகள் வெளியானது.

    இதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‘நிறைய வதந்திகள் பரவி வருகிறது. பாக்யராஜ் அவர்கள் என்னை கூப்பிட்டு, பிரச்சனை போயிட்டு இருக்கிறது. ஒருத்தருடைய ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுட்டாங்க. அதை பத்து வருடங்களுக்கு முன்பாக வருண் ராஜேந்திரன் எழுதி வைத்திருக்கிறார் என்று சொன்னார். அந்த ஒரு கரு தான் எங்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை. மற்றபடி, அந்த கதைக்கும், இந்த கதைக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. எனக்கு முன்னாடி ஒரு உதவி இயக்குனர் எழுதி பதிவு செய்திருப்பதால், அவரை பாராட்டி ஊக்குவிப்பதற்காக டைட்டிலில் அவர் பெயர் போட சொன்னார். சரி என்று ஒப்புக்கொண்டேன். 

    மற்றபடி, ‘சர்கார்’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஏ.ஆர்.முருகதாஸ். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.



    சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்த நிலையில், இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டதால் படத்தை ரிலீஸ் செய்ய தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Sarkar #Vijay
    நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள `சர்கார்' என்ற திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் 6-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில், சர்கார் படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும், சர்கார் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜும் சர்கார் கதையும், வருண் ராஜேந்திரன் கதையும் ஒரே மாதிரி இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது.



    இந்த நிலையில், சர்கார் படத்தின் மீதான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணையை காண இயக்குநர் பாக்யராஜ், ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தனர். இந்த நிலையில், சர்கார் படத்தின் கதை விவகாரத்தில் வருணுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதாக முருகதாஸ் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் படத்தின் டைட்டில் கார்டில் தனது பெயருடன் நன்றி மற்றும் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வருண் ராஜேந்திரன் மனுவில் கூறியிருந்தார். 



    இந்த நிலையில், வருணின் கோரிக்கையை சர்கார் படக்குழு ஏற்றுக் கொண்டதால், இரு தரப்பினரும் சமரச முடிவுக்கு வந்தனர். இதையடுத்து வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி சுந்தர் தெரிவித்தார். மேலும் சர்கார் படத்தை ரிலீஸ் செய்ய தடையில்லை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

    சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருந்த நிலையில், வருண் ராஜேந்திரனின் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பித்தக்கது. #Sarkar #Vijay #ARMurugadoss

    சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்த நிலையில், வருணுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதாக ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பு தெரிவித்துள்ளது. #Sarkar #Vijay #ARMurugadoss
    நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள `சர்கார்' என்ற திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் 6-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில், சர்கார் படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும், சர்கார் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜும் சர்கார் கதையும், வருண் ராஜேந்திரன் கதையும் ஒரே மாதிரி இருப்பதாக தெரிவித்து உள்ளார். இதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.



    கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சையையும், தற்கால அரசியலையும் கருவாக வைத்து இந்த படத்தை எடுத்து இருப்பதாக ஏ.ஆர். முருகதாஸ் தெளிவுபடுத்தி இருந்தார்.

    இந்த நிலையில், சர்கார் படத்தின் மீதான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணையை காண இயக்குநர் பாக்யராஜ், ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தனர். இந்த நிலையில், சர்கார் படத்தின் கதை விவகாரத்தில் வருணுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதாக முருகதாஸ் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து படத்திற்கு தடை கேட்டு வருண் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி சுந்தர் ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Sarkar #Vijay #ARMurugadoss

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்கார்' படம் உலகளவில் அதிக நாடுகளில் திரையிடப்படும் விஜய் படம் என்ற பெருமையை பெறுகிறது. #Sarkar #Vijay
    நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் உள் ளிட்டோர் நடித்துள்ள `சர்கார்' என்ற திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் 6-ஆம் தேதி வெளியாக உள்ளது.

    இந்த திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம், சுமார் 1200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உலகமெங்கும் சுமார் 80 நாடுகளில் வெளியாக இருக்கிறது. ஏ & பி குரூப்ஸ் மற்றும் டி ஃபோக்கஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மெக்சிகோ, போலந்து, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, ரஷ்யா மற்றும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் படத்தை வெளியிடுகின்றன. தமிழ், தெலுங்கிலும் படம் அதிக திரையரங்குகளில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.



    இதற்கிடையெ இந்த படத்துக்கு எதிராகவும், படத்தை வெளியிட தடை கேட்டும் வழக்கு தொடரப்பட்டது. சர்கார் படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும், சர்கார் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இதற்கிடையே இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சர்கார் படத்தின் கதை தன்னுடையது தான் என்றும், ஒரு கதையின் கரு ஒரே மாதிரியாக பலருக்கு தோன்றியிருக்கலாம். ஆனால் திரைக்கதை தான் முக்கியம். அதில் ஒற்றுமை இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். #Sarkar #Vijay

    ×