என் மலர்
நீங்கள் தேடியது "Satellite"
- ஏவப்படும் சாத்தியமான தேதி குறித்தும் நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மறுபரிசீலனை செய்து வருகின்றனர்.
- விண்வெளியில் பறக்கும்போது அதிக வெப்பத்தால் சேதமடைய வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக 'நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார்' (நிசார்) என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர். இது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். இதன் மூலம் பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாற்றங்கள், வள மேலாண்மை மற்றும் இயற்கை பேரழிவுகள் குறித்த முக்கியமான நுண்ணறிவு தகவல்களையும் வழங்கும்.
இதனை கடந்த 2023-ம் ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது நிசார் செயற்கைக்கோளில் உள்ள பூமி மற்றும் ரேடார் ஆண்டெனா பிரதிபலிப்பானைப் பயன்படுத்துவதற்கு சாதகமான நிலை இல்லாத "கிரகணப் பருவம்" காரணமாக ஏவுதலில் தாமதம் ஏற்பட்டது. சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக 2025-ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதத்தில் விண்வெளியில் ஏவுவதற்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தியா-அமெரிக்கா கூட்டு ஏவுதல் மீண்டும் இந்த ஆண்டு இறுதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஏவப்படும் சாத்தியமான தேதி குறித்தும் நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மறுபரிசீலனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறும்போது, 'நிசார் செயற்கைக்கோள் வருகிற மே அல்லது ஜூன் மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கிடையில் சோதனையில் செயற்கைக்கோள் ஈடுபடுத்தப்பட்டபோது, நிசார் செயற்கைக்கோளில் தொழில்நுட்ப பிரச்சினை இருப்பது தெரியவந்தது. அதாவது, நிசார் செயற்கைக்கோளில் உள்ள 12 மீட்டர் விட்டம் கொண்ட 'பிரதிபலிக்கும் ஆண்டெனா' விண்வெளியில் பறக்கும்போது அதிக வெப்பத்தால் சேதமடைய வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதை நிவர்த்தி செய்வதற்காக பிரதிபலிக்கும் ஆண்டெனா அதிக வெப்பமடைவதை தடுக்க ஒரு சிறப்பு வெப்ப பூச்சுக்காக அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. பூச்சு பயன்படுத்தப்பட்ட பிறகு நிசார் செயற்கைக்கோளுடன் மிண்டும் ஒருங்கிணைப்பதற்கும், மேலும் சோதனை செய்வதற்கும் ஆண்டெனா இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. பணிக்கான ஏவுதளத் தயார்நிலை தேதியை வரும் வாரங்களில் நாசா-இஸ்ரோ தீர்மானிக்கும்' என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, 'நிசார் செயற்கைக்கோள் மீண்டும் பல்வேறு கட்ட சோதனைகள் செய்ய வேண்டியிருப்பதால், நிசார் செயற்கைக்கோள் ஏவுதல் தேதியை இந்த ஆண்டின் இறுதிக்கு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது' என்றனர்.
- சீனா ஜிகுவான் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து குவாக்பு-1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.
- சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் நிகழ்வுகளை ஹார்ட் எக்ஸ்ரே இமேஜர் மூலம் தயாரித்து வெளியிட்டு உள்ளது.
சூரியனின் மேற்பரப்பு எப்படி இருக்கும் என்ற வீடியோ காட்சிகளை சீனா வெளியிட்டு உள்ளது. சீனாவின் அறிவியல் அகாடமி கடந்த அக்டோபர் மாதம் ஜிகுவான் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து குவாக்பு-1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.
சூரியனை ஆய்வு செய்யும் வகையில் அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை கொண்டு சீனாவின் சூரிய ஆய்வகம் சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் நிகழ்வுகளை ஹார்ட் எக்ஸ்ரே இமேஜர் மூலம் தயாரித்து வெளியிட்டு உள்ளது.
- செயற்கைகோள் மென்பொருள் தயாரித்த மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- 10 பேர் மென்பொருள் தயாரித்தனர்.
திருமங்கலம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டுடன் ஆசாதி-2 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோளுக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10 பேர் மென்பொருள் தயாரித்தனர். அவர்கள் செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சிக்கு இஸ்ரோ சென்று வந்தனர். செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து மாணவிகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
இந்த நிலையில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்து செயற்கைக்கோள் மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி சால்வை அணிவித்து கவுரவித்தார்.
- 3,500 அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்தது.
- செயற்கை கோள் புரட்சியை அடிப்படையாக கொண்டு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
மாமல்லபுரம்
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை, கிழக்கு கடற்கரை சாலை கடற்கரையில் இருந்து இன்று காலை 8.15 மணிக்கு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இன்டர் நேஷனல் பவுண்டேஷன் சார்பில் இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் 150 சிறிய ரக செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப் பட்டது.
இஸ்ரோ விஞ்ஞானி கோகுல் ஆணந்த் தலைமையிலான இஸ்ரோ தொழில்நுட்ப விஞ்ஞானிகள் இந்த ராக்கெட்டை இயக்கினர். இதில் தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இயக்குனர் வெங்கட்ராமன், திருப்போரூர் எம்.எல்.ஏ.பாலாஜி ரோஸ் மார்ட்டீன், ஜோஸ் சார்லஸ் மார்ட்டீன், ஏ.பி.ஜெ.எம்.நஜீமா மரைக்காயர், ஷேக்ச லீம், ஷேக்தாவூர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் எனப்படுவது குறைந்த உயரத்தில் செலுத்தக் கூடியதாகவும், சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்துவதற்காகவும், செயற்கை கோள்களின் தரவுகளை சேகரிப்ப தற்காகவும் அனுப்பப்படுகிறது. இன்று விண்ணில் செலுத்த ப்பட்டுள்ள ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் சுமார் 2.4 கி.மீ. உயரம் வரை செல்லக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் 3,500 பேர் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரடியாக பார்வையிட்டனர். விண்ணில் ஏவப்பட்டு உள்ள சிறிய ரக செயற்கைகோள்கள் மூலம் வானிலை, கதிர்வீச்சு தன்மை, வளிமண்டல நிலை உள்ளிட்ட பல்வேறு தரவு களை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செயற்கைகோள் விண்ணில் பாய்வதை பார்ப்பதற்காக அதனை தயாரித்த மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் குஜராத், பெங்களூர், ஜெய்பூர், கேரளா, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநில மாணவர்கள், அணுசக்தி துறையினர் சுமார் 5 ஆயிரம் பேர் வந்திருந்தனர்.
அவர்கள் விண்ணில் ராக்கெட் வெற்றிகரமாக பாய்ந்ததும் ஆரவாரத்தில் கைதட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறும் போது, செயற்கை கோள் புரட்சியை அடிப்படையாக கொண்டு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது மாணவர்களால் செயற்கை கோள் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கைக்கான வித்து.
விண்வெளி ஆராய்ச்சித் துறையில் மாணவர்கள் குழுவாக செயல்பட முடியும். மாணவர்களின் குழு மனப்பான்மையை வளர்க்கும் விதமாக இது உள்ளது.
மாணவர்கள் துறை ரீதியாக சாதிக்க பள்ளியில் இருந்து தொடங்க வேண்டும். சிறு வயது முதலே அனைவருடனும் இணைந்து செயல்படுவதற்கான பயிற்சி.
தற்போது செயற்கை கோள் புரட்சி ஏற்பட்டு உள்ளது. பொறியாளர்களை பள்ளியிலேயே உருவாக்க வேண்டும். செயற்கை கோள்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது" என்றார்.
- ஒன் வெப் விண்வெளி செயற்கை கோள்களில் 2-வது மற்றும் கடைசி தொகுதி செயற்கை கோள்களை இது சுமந்து செல்கிறது.
- ஏவப்படும் 36 செயற்கை கோள்களின் மொத்த எடை சுமார் 5805 கிலோ ஆகும்.
சென்னை:
இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 36 செயற்கை கோள்களுடன் நாளை (26-ந் தேதி) விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது தளத்தில் இருந்து நாளை காலை 9 மணிக்கு விண்வெளிக்கு புறப்படுகிறது.
ஒன் வெப் விண்வெளி செயற்கை கோள்களில் 2-வது மற்றும் கடைசி தொகுதி செயற்கை கோள்களை இது சுமந்து செல்கிறது.
தற்போது ஏவப்படும் 36 செயற்கை கோள்களின் மொத்த எடை சுமார் 5805 கிலோ ஆகும். எல்.வி.எம்.3 ராக்கெட்டுகள் 8 டன் எடை வரை சுமந்து செல்லும் திறன் கொண்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தை தலைமையகமாக கொண்ட ஒன் வெப், இங்கிலாந்து அரசு மற்றும் இந்தியாவின் பாரதிய நிறுவனத்தின் ஆதரவுடன் அதிவேக தாமதமில்லா உலகளாவிய தொலை தொடர்பு மற்றும் இணைய இணைப்பை வழங்குகிறது.
- இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட ஆர்யப்பட்டா, காஸ்மோஸ்-3எம் என்ற ராக்கெட்டால் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டது.
- இந்திய அரசு அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகளில் ஆர்யபட்டாவின் படங்கள் இடம்பெற செய்து கவுரவப்படுத்தியது.
இந்திய அறிவியல் வரலாற்றில் 1975-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். அன்று இந்தியாவின் கனவை ஒரு விண்ணோட சுமந்து சென்று வெற்றிக்கரமாக அந்த கனவை சரித்திரமாக மாற்றிய வரலாற்று சிறப்புமிக்க நாள்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த 50 அறிவியல் விஞ்ஞானிகள் ஒன்று கூடி ரஷ்யாவின் சோவியத் செயற்கைகோள் ஏவுதளத்திலிருந்து ஒரு ராக்கெட்டை ஏவினர். அந்த விண்ணோடம் ஏப்ரல் 19, 1975-ம் ஆண்டில் கொண்டு சென்ற செயற்கை கோள் தான் ஆர்யப்பட்டா.
இந்தியாவின் முதல் கணிதவியலாளர் மற்றும் வானியலாளராக அறியப்படுகின்ற ஆர்யப்பட்டாவின் பெயரை இந்த செயற்கைகோளுக்கு வைக்கப்பட்டது.
5-வது நூற்றாண்டில் வாழ்ந்த ஆர்யப்பட்டா சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணத்தின் நிகழ்வுகளை சரியாக கணித்து கூறி, இந்தியாவின் விஞ்ஞான சரித்திரத்தில் இடம்பிடித்தார்.
அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தியிடம் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆர்யப்பட்டா பெயருடன் மைத்ரி, ஜவஹர் போன்ற பெயர்களையும் செயற்கை கோளிற்காக பரிந்துரை செய்தனர். இறுதியில் இந்திராகாந்தி தேர்வு செய்த பெயரே ஆர்யப்பட்டா.
முற்றிலும் இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட ஆர்யப்பட்டா, காஸ்மோஸ்-3எம் என்ற ராக்கெட்டால் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டது. 360 கிலோ கிராம் எடை கொண்ட இது 26 முனைகளுடன், 1.4 விட்டம் அளவில் தயாரிக்கப்பட்டது.
இந்த செயற்கைக்கோளை உருவாக்க சுமார் ரூ.5 கோடி செலவிடப்பட்டது. 26 மாதங்கள் விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்து செயற்கை கோளை உருவாக்கினர். இந்த செயற்கைக் கோள் பூமியிலிருந்து சுமார் 695 கி.மீ. உயரத்தில் அமையுமாறு ஏவப்பட்டது. இது உலகை ஒருமுறை சுற்றிவர 96.6 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. ஒரு நாளைக்கு 15 சுற்றுக்கள் வீதம் உலகைச் சுற்றி வந்தது. இதன் சராசரி வேகம் விநாடிக்கு 8 கி.மீ. ஆகும்.
ஆர்யப்பட்டாவின் மேல் மற்றும் கீழ் பகுதிகளை தவிர அனைத்து பேனல்களுமே சூர்ய மின்கலங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது. இதனால் ஆர்யப்பட்டாவால் 46வால்ட் மின்சாரத்தை உற்பத்திசெய்துக் கொள்ள முடியும்.
பூமியின் அயணி மண்டலத்தில் இருக்கக்கூடிய நிலைகளை ஆராயவும், நியூட்ரான்கள், சூரியனிலிருந்து வெளிப்படும் காமா கதிர்கள் ஆகியவற்றை அளவீடு செய்வதும் ஆர்யப்பட்டாவின் பணியாக இருந்தது. மேலும் இது வானியல் எக்ஸ்ரேக்களின் செயல்திறனை கண்டறிவதும் இதனுடைய முக்கிய பணியாக இருந்தது. சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட பின் முதல் 4 நாட்கள் ஆர்யப்பட்டாவின் பணி சிறப்பாகவே இருந்தது. ஆனால் திடீரென்று ஏற்பட்ட மின்சார விநியோகக் கோளாறால், 5-வது நாளில் செயல்பாடுகள் அனைத்தும் தோல்வியடைந்து, ஆர்யப்பட்டாவிலிருந்த அனைத்து கருவிகளும் செயலற்று போயின.
மின்சார விநியோகம் தடைபடும் வரை பெங்களூரிலுள்ள இஸ்ரோவின் தலைமை அலுவலகத்திற்கு ஆர்யப்பட்டா சில தகவல்களை அனுப்பிவைத்தது.
செயலிழந்து நின்றாலும், ஆர்யப்பட்டா பூமியின் சுற்றுப்பாதையில் கிட்டத்தட்ட 1992-ம் ஆண்டு வரை சுற்றி வந்தது. 17 ஆண்டுகள் கழித்து 1992-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி ஆர்யப்பட்டா பூமியின் மேற்பரப்பில் வெடித்து சிதறியது. ஆர்யபட்டா செயற்கை கோளின் வெடித்த துகள்கள், பாகங்கள் அனைத்தும் மீண்டும் வளிமண்டலத்திற்குள் பிரேவசித்து, இந்தியாவின் கனவு அன்றே மறைந்தது.
இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சிக்கு அச்சாரம் அமைத்து கொடுத்த ஆர்யப்பட்டா செயற்கைகோளை நினைவுகூறும் விதமாக, இந்திய அரசு அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகளில் ஆர்யபட்டாவின் படங்கள் இடம்பெற செய்து கவுரவப்படுத்தியது.
இந்த சரித்திர தினத்தை நாளை நினைவு கூறும் நாளாகும்.
- வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
- ஜப்பான் தீவில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் பதுங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
டோக்கியோ:
வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏவுகணை சோதனை நடத்துகிறது.
சமீபத்தில் ஜப்பான் கடலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஜப்பான் தீவில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் பதுங்கி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஏவுகணை ஜப்பான் பகுதிக்குள் விழவில்லை.
இந்த நிலையில் வடகொரியாவின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தவும், ஏவுகணை இடைமறிப்பு கருவிகளை செயல்படுத்தவும் தயாராக இருக்கும்படி ராணுவத்துக்கு ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜப்பான் மந்திரி யசுகாசு ஹமாடா, ராணுவத்திடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு எதிராக அழிவுகரமான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
- இதற்கான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று தொடங்கியது.
- ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை விண்ணில் பாய்வதற்கு 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இதற்கான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டை நாளை (திங்கட்கிழமை) காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.
இதில் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.
செயற்கைகோளை உத்தேசித்துள்ள சுற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்ல அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
வாகனங்கள் வழிசெலுத்துவதற்கு திட்டமிடப்பட்ட 2-வது தலைமுறை செயற்கைகோள்களில் முதன்மையானது. அடுத்த தலைமுறைக்கான என்.வி.எஸ். வரிசை செயற்கைகோள்கள் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தகவல்களை தக்கவைத்து மேம்படுத்தும். இந்த தொடர் சேவைகளை விரிவுபடுத்த கூடுதலாக 'எல்1 பேண்ட் சிக்னல்'களை உள்ளடக்கியது.
இதற்கான இறுதி கட்டப்பணியான 27.30 மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.12 மணிக்கு தொடங்கியது.
3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.
- ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி விண்ணில் பாய்வதற்கு 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இதற்கான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டை இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.
இதில் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.
செயற்கைகோளை உத்தேசித்துள்ள சுற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்ல அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. வாகனங்கள் வழிசெலுத்துவதற்கு திட்டமிடப்பட்ட 2-வது தலைமுறை செயற்கைகோள்களில் முதன்மையானது.
அடுத்த தலைமுறைக்கான என்.வி.எஸ். வரிசை செயற்கைகோள்கள் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தகவல்களை தக்கவைத்து மேம்படுத்தும். இந்த தொடர் சேவைகளை விரிவுபடுத்த கூடுதலாக 'எல்1 பேண்ட் சிக்னல்'களை உள்ளடக்கியது.
இதற்கான இறுதி கட்டப்பணியான 27.30 மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று காலை 7.12 மணிக்கு தொடங்கியது. 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.
ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- ஒரு வருடத்தில் வடகொரியா கிட்டத்தட்ட 100 ஏவுகணைகளை சோதனை செய்து இருக்கிறது.
- செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று ஜப்பான் அரசிடம் வடகொரியா நோட்டீஸ் மூலம் தெரிவித்தது.
ராணுவ உளவு செயற்கைக்கோள் ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்து இருக்கிறது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான பொறுப்பற்ற ராணுவ பயிற்சிகளுக்கு இதுபோன்ற வசதிகள் மிகவும் அவசியமான ஒன்று என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
மே 31-ம் தேதி முதல் ஜூன் 11-ம் தேதிக்குள் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் வடகொரியா தெரிவித்து இருக்கிறது. இது குறித்து ஜப்பான் அரசுக்கு வடகொரியா அனுப்பிய நோட்டீசில், ராணுவ உளவு முயற்சியின் அங்கமாக முதன் முறையாக செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணை தொழில்நுட்பத்தில் அனுப்ப இருப்பதாக தெரிவித்து இருந்தது.

இது மஞ்சள் கடல், கிழக்கு சீன கடல் மற்றும் பிலிப்பைன்சின் கிழக்கு பகுதியில் உள்ள லூசோன் தீவுகளில் கடல்நீரை பாதிக்கச் செய்யலாம் என்றும் வடகொரியா நோட்டீசில் தெரிவித்து இருந்தது. ஜப்பான் எல்லைக்குள் வடகொரிய ஏவுகணை நுழைந்தால், அதனை உடனடியாக சுட்டு வீழ்த்த ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜப்பான் நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி யசுகாசு ஹமடா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.
கடந்த ஆண்டு துவங்கியதில் இருந்து வடகொரிய கிட்டத்தட்ட 100 ஏவுகணைகளை சோதனை செய்து இருக்கிறது. இந்த சோதனைகள் தென் கொரியா மற்றும் ஜப்பான் கடற்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்து இருக்கிறது. எனினும், தடையை மீறி செயற்கைக்கோளை விண்ணில் ஏவ வடகொரியா முடிவு செய்துள்ளது.
ஐ.நா. தடையை மீறி ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயல் என்று ஜப்பான் தெரிவித்து இருக்கிறது. வடகொரியாவின் புதிய செயற்கைக்கோள் ஏவும் நடவடிக்கை ஜப்பான், தென் கொரிய கடல் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- ஜிலின்-1 செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 108ஆக உயர்ந்துள்ளது.
- 2030ம் ஆண்டுக்குள் சந்திரனில் விண்வெளி வீரர்களை தரையிறக்க சீனா திட்டம்.
சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று மதியம் 1.30 மணிக்கு ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்களுடன் நீண்ட 2டி ராக்கெட்டை விண்ணில் செலுத்தி அந்நாடு புதிய சாதனையை படைத்துள்ளது.
இந்த நீண்ட ராக்கெட் 476வது விமானப் பயணமாகும். ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் முக்கியமாக வணிக ரிமோட் சென்சிங் சேவைகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப சரிபார்ப்பை வழங்கும் எனவும் செயற்கைக்கோள்களில் பெரும்பாலானவை 36 ஜிலின்-1 தொடரைச் சேர்ந்தவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஜிலின்-1 செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 108ஆக உயர்ந்துள்ளது.
சீனா, 420 கிலோகிராம் எடை கொண்ட ஜிலின்-1 செயற்கைக்கோளை 2015ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில், அதன் எடையை வெறும் 22 கிலோவாகக் குறைத்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, 2030ம் ஆண்டில் நிலவு மற்றும் அதற்கு மேற்பட்ட பயணங்கள் மற்றும் பூமியில் தரை செயல்பாடுகளுக்கு இடையே ஒரு தகவல் தொடர்பு பாலமாக செயல்படும் ரிலே செயற்கைக்கோள்களை உருவாக்கவும் சீனா செயல்பட்டு வருகிறது.
2030ம் ஆண்டுக்குள் சந்திரனில் விண்வெளி வீரர்களை தரையிறக்க சீனா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் திட்டம் தோல்வியடைந்தது
- கடலில் கிடந்த பாகங்களை சேகரித்து தென்கொரியா சோதனை
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை செய்து வருகிறது. அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த போதிலும், அதைப்பற்றி கண்டு கொள்வதில்லை.
இறுதியாக கடந்த மே மாதம் செயற்கைக்கோள் ஒன்றை ஏவியது. இந்த செயற்கைக்கோள் அமெரிக்கா, தென்கொரியாவின் ராணுவப் பணிகளை உளவு பார்க்க உதவிகரமாக இருக்கும். இந்த செயற்கைக்கோளை நிலைநிறுத்தினால் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என தென்கொரியா கருதியது.
ஆனால், ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோள், வடகொரிய தீபகற்ப கடலில் விழுந்து நொறுங்கியது. இதை மிகப்பெரிய தோல்வியாக வடகொரியா கருதுகிறது. இருந்தாலும் தவறுகளை கண்டறிந்து, சரிசெய்யப்பட்டு மீண்டும் செயற்கைக்கோளை செலுத்த முயற்சி மேற்கொள்வோம் எனத் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே செயற்கைக்கோளின் உடைந்த பாகங்களை தேடும் பணியில் தென்கொரியா ஈடுபட்டது. கப்பற்படை, விமானப்படை, நீரில் மூழ்கி தேடும் வல்லுனர்கள் ஆகியோரை கொண்டு 36 நாட்கள் தேடுதல் வேட்டை நடத்தி செயற்கைக்கொளில் துண்டுகளை சேகரித்தது. அவற்றை ஆராய்ந்த பார்த்தபோது ராணுவ பணிகளை உளவு பார்க்கும் திறனில்லை என தெரியவந்துள்ள என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.
எண்ணற்ற மற்றும் முக்கிய பகுதிகளை நாங்கள் மீட்டெடுத்துள்ளோம். தென்கொரியா மற்றும் அமெரிக்க வல்லுனர்கள் கொண்டு ஆய்வு செய்தபோது வடகொரியாவின் செயற்கைக்கோளுக்கு ராணுவ பணிகளை உளவு பார்க்கம் திறனில்லை என்பது தெரியவந்தது என தென்கொரியா தெரிவித்துள்ளது.
தென்கொரியாவின் தகவலுக்கு வடகொரிய இன்னும் பதில் அளிக்கவில்லை.