என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » saurabh chaudhary
நீங்கள் தேடியது "Saurabh Chaudhary"
உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 17 வயதே ஆன சவுரப் சவுத்ரி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டி ஜெர்மனியில் உள்ள முனிச்சில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 17 வயதே ஆன இளைஞர் சவுரப் சவுத்ரி கலந்து கொண்டார்.
அவர் 246.3 புள்ளிகள் பெற்று சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதற்கு இவர் 245 புள்ளிகள் பெற்றதே உலக சாதனையைாக இருந்து. தற்போது அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
சவுரப் சவுத்ரி கடந்த ஆண்டு ஆசிய போட்டி, யூத் ஒலிம்பிக் ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்த வருடம் டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பையில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக துப்பாக்கி சுடுதல் ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பந்தயத்தில் இந்திய இளம் வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். #SaurabhChaudhary #ShooterWorldChampionship
சாங்வான்:
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பந்தயத்தில் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 245.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் ஜூன் மாதம் நடந்த உலக கோப்பை ஜூனியர் போட்டியில் இதே பந்தயத்தில் தான் படைத்து இருந்த உலக சாதனையை (243.7 புள்ளிகள்) சவுரப் சவுத்ரி தகர்த்து நேற்று புதிய சாதனை படைத்தார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவரான சவுரப் சவுத்ரி சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் தென்கொரியா வீரர் லிம் ஹோஜின் (243.1 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும், மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் சிங் சீமா (218 புள்ளிகள்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இதன் அணிகள் பிரிவில் சவுரப் சவுத்ரி, அர்ஜூன் சிங் சீமா, அன்மோல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1730 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வென்றது. தென்கொரியா அணி (1,732 புள்ளிகள்) புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தது. ரஷிய அணி (1,711 புள்ளிகள்) வெண்கலப்பதக்கம் பெற்றது.
ஜூனியர் ஆண்களுக்கான டிராப் அணிகள் போட்டியில் அமன் அலி எலாஹி, விவான் கபூர், மனவ்ஆதித்யா சிங் ரதோர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 348 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியது. ஆஸ்திரேலிய அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்கள் வென்று 3-வது இடத்தில் உள்ளது. #SaurabhChaudhary #ShooterWorldChampionship

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற சவுரப் சவுத்ரிக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #AsianGames2018 #SaurabhChaudhary
லக்னோ:
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி (வயது 16) தங்கப் பதக்கம் வென்றார். இப்போட்டியில் சவுரப் 240.7 புள்ளிகள் எடுத்து புதிய சாதனையும் படைத்துள்ளார். மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வெண்கலப் பதக்கம் வென்றார்.
தங்கம் வென்ற சவுரப் சவுத்ரி உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர். எனவே, அவரது திறமையைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #AsianGames2018 #SaurabhChaudhary

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். மற்றொரு வீரர் அபிஷேக் வெண்கலம் வென்றார். #AsianGames #SaurabhChaudhary
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.
அதன்பின்னர் இறுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட சவுரப் (வயது 16) தங்கப் பதக்கம் வென்றார். இந்தியாவின் மூன்றாவது தங்கப் பதக்கம் இதுவாகும். இப்போட்டியில் சவுரப் 240.7 புள்ளிகள் எடுத்து புதிய சாதனையும் படைத்துள்ளார். அபிஷேக் 219.3 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார். ஜப்பான் வீரர் மத்சுடா டொமோயுகி 239.7 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #SaurabhChaudhary

இதற்கான தகுதிச்சுற்றில் இந்திய வீரர்கள் சவுரப் சவுத்ரி மொத்தம் 586 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்து, இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். இதேபோல் மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வர்மா 580 புள்ளிகளுடன் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.
அதன்பின்னர் இறுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட சவுரப் (வயது 16) தங்கப் பதக்கம் வென்றார். இந்தியாவின் மூன்றாவது தங்கப் பதக்கம் இதுவாகும். இப்போட்டியில் சவுரப் 240.7 புள்ளிகள் எடுத்து புதிய சாதனையும் படைத்துள்ளார். அபிஷேக் 219.3 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார். ஜப்பான் வீரர் மத்சுடா டொமோயுகி 239.7 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #SaurabhChaudhary
ஜெர்மனியில் நடைபெற்ற ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பையில் இந்தியாவின் சவுரவ் சவுத்ரி உலக சாதனையுடன் தங்கம் வென்றார். #ISSFJuniorWorldCup #SaurabhChaudhary
பெர்லின்:
ஜெர்மனியின் சுஹல் நகரில் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவுரவ் சவுத்ரி தங்கம் வென்றார். இது இந்தியாவுக்கு எட்டாவது பதக்கங்கமாகும்.
இந்தப்போட்டியில் சவுத்ரி மொத்தமாக 243.7 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்தார். முன்னதாக சீனாவின் வாங் ஜிஹாவின் 242.5 புள்ளிகளே உலக சாதனையாக இருந்தது. இந்நிலையில் இந்தியாவின் சவுத்ரி இந்த சாதனையை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
இதே பிரிவில் கொரியாவின் லிம் ஹோஜின் (239.6) வெள்ளிப்பதக்கமும், சினாவின் வாங் ஜிஹாவ் (218.7) வெண்கலப்பதக்கமும் வென்றனர். இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா எட்டு தங்கம், ஒரு வெள்ளி, ஐந்து வெண்கலம் என 14 பதக்கங்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. #ISSFJuniorWorldCup #SaurabhChaudhary
×

X