search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Save Delta"

    கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு உதவும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நன்கொடை வழங்கப்படுகிறது. #GajaCycloneRelief #ProducersCouncil
    கஜா புயலால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். 



    அந்த வகையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நன்கொடை வழங்கப்படுகிறது. சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதன் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சேர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக நன்கொடை அளிக்க முடிவெடுத்துள்ளனர். மேலும், திரைப்படக் கூட்டமைப்பிலிருந்து பலரும் நன்கொடை அளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #GajaCycloneRelief #ProducersCouncil #SaveDelta

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் வாட்டர் பில்டருடன் செல்வதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். #GajaCycloneRelief #Kasthuri
    நடிகை கஸ்தூரி கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களுடன் கிளம்பினார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை அள்ளிக்கொடுக்கும் உயர்ந்த உள்ளங்களை வாழ்த்துகிறேன். என்னால் முடிந்த அளவில் நிவாரண பொருட்களை எடுத்துக் கொண்டு நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல உள்ளேன். டெல்டா மாவட்டங்களின் தற்போதைய அத்தியாவசிய தேவை குடிநீர்.

    உணவு பொருட்கள், மருத்துவ உதவி போன்றவை பலதரப்புகளிருந்து வந்துகொண்டிருக்கும் வேளையில், குடிநீர் பற்றாக்குறை பூதாகரமாக தலையெடுத்துள்ளது. நாட்கள் செல்ல செல்லச், சுத்தமான பாதுகாப்பான குடிநீர் மிக பெரிய தேவையாக இருக்கும். இதற்கு அத்தியாவசியமான 1000 நீர் சுத்திகரிப்பு கருவிகளை வழங்க இருக்கிறோம்.



    1000 குடும்பத்திற்கு தேவையான அதிநவீன குடிநீர் சுத்திகரிப்பான்கள், போர்வைகள், கொசுமருந்து, காய்ச்சல் நிவாரணி மாத்திரைகள், சானிடரி நாப்கின்கள் அடங்கிய லாரியை அனுப்புகிறோம். இந்த குடிநீர் சுத்திகரிப்பான்கள் பேரிடர் காலத்தில் பயன்படுத்த மிகவும் உகந்தவை. எங்கும் எடுத்து செல்லலாம், சுலபமாக பயன்படுத்தலாம், எத்தனை மாசுபட்ட தண்ணீரையும் தெளிந்த பாதுகாப்பான சுத்தமான குடிநீராக மாற்றிவிடும். கொதிக்கவைக்க அவசியமில்லை.

    பிளாஸ்டிக் பாட்டில்களையும், கேன்களையும் நாடவேண்டியதில்லை, இரண்டு வருடங்களுக்கு குறையாமல் செலவில்லாமல் குடிநீரை சுத்தப்படுத்திக் கொள்ளலாம். இது வெளிநாட்டில் மட்டுமே இப்போதைக்கு கிடைக்கிறது, இங்கு நம் பயன்பாட்டிற்காக ஆயிரம் சுத்திகரிப்பான்களை உடனடியாக தயாரித்து அனுப்பியிருக்கும் சென்னை ராமா குடிநீர் சுத்திகரிப்பான் நிறுவனத்திற்கு நன்றி. முதல் கட்டமாக 1000 பில்டர்கள் வழங்குகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCycloneRelief #Kasthuri

    ×