search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saweety Boora"

    • சவீட்டி பூரா, நீத்து காங்காஸ் மோதும் இறுதிப்போட்டி இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.
    • மேலும் இரண்டு இந்திய வீராங்கனைகள் மோதும் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது.

    புதுடெல்லி:

    உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடைபெற்று வருகின்றன.

    இதன் இறுதிப் போட்டிக்கு நிகாத் ஜரீன் (50 கிலோ பிரிவு), நீத்து காங்காஸ் (48 கிலோ பிரிவு), லவ்லினா (75 கிலோ பிரிவு), சவீட்டி பூரா (81 கிலோ பிரிவு) ஆகிய 4 இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்று இருந்தார்கள்.

    இறுதிப்போட்டி இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் 4 வீராங்கனைகளும் வென்று, இந்தியாவுக்கு 4 தங்கம் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சவீட்டி பூரா மோதும் இறுதிப்போட்டி இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதே போல் நீத்து காங்காஸ் மோதும் இறுதிப் போட்டியும் இன்று நடக்கிறது. இருவரும் இறுதி ஆட்டத்தில் வென்று தங்கம் பதக்கம் பெறுவார்களா? என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

    மேலும் இரண்டு இந்திய வீராங்கனைகள் மோதும் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது.

    ரஷியாவில் நடைபெற்று வரும் குத்துச்சண்டை தொடரில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்கள்.
    ரஷியாவின் கஸ்பிஸ்க் நகரில் உமாகாநோவ் மெமோரியல் குத்துச் சண்டை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 81 கிலோ எடைப்பிரிவில் பிரிஜேஷ் யாதவ், 91 கிலோ எடைப்பிரிவில் விரேந்தர் குமார் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்கள்.

    பெண்கள் பிரிவில் 75 கிலோ எடைப்பிரிவில் சவீட்டி பூரா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஷஷி சோப்ரா (57 கிலோ), பிங்கி ஜங்ரா (51 கிலோ), பவித்ரா (60) அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்து வெண்கல பதக்கம் வென்றனர்.

    ஆண்கள் பிரிவில் கவுரவ் பிதுரி அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கல பதக்கம் வென்றார்.
    ×