என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sea"

    • ஏர்வாடி அருகே வலையில் சிக்கிய டால்பின் மீனை மீனவர்கள் கடலில் விட்டனர்.
    • இந்த மீன்களைப் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    கீழக்கரை

    மன்னார்வளைகுடா கடலில் ஓங்கி இன திமிங்கலங்கள், ஆவுலியா எனப்படும் கடல் பசு, டால்பின், பாறாமை, பாலாமை, பனை மீன், வேளா மீன், பால் சுறா, கடல் அட்டைகள், கடல் குதிரைகள் உள்ளிட்ட பல்வேறு வகை உயிரினங்கள் உள்ளன. இந்த மீன்களைப் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே வாலிநோக்கம் கடலில் தற்போது சீலா மீன் பிடிக்கும் சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள மீனவர்கள் ஒன்றிணைந்து கரைவலையை கடலில் வீசி பின்னர் கரைக்கு இழுத்தனர். அப்போது சுமார் 4 மற்றும் 6 வயதுடைய டால்பின் மீன் வலையில் சிக்கி இருந்தது. வலைக்குள் சிக்கி போராடிக் கொண்டிருந்த டால்பினை கண்ட மீனவர்கள் அதனை உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.

    இது குறித்து வனச்சரகர் செந்தில்குமார் கூறும்போது, அழிந்து வரும் அரிய வகை இனமான டால்பின் வாலி நோக்கம் மீனவர்கள் கரை வலையில் சிக்கியுள்ளது. மீனவர்கள் உடனே அதனை மீட்டு கடலில் விட்டுள்ளனர் என்றார். கடந்த 20-ந் தேதி சாயல்குடி அருகே நரிப்பையூர் மீனவர்கள் கரை வலையில் சிக்கிய 200 கிலோ எடையுள்ள டால்பினை கடலுக்குள் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
    • மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தூத்துக்குடி மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    தூத்துக்குடி:

    மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    வருகிற 8-ந்தேதி தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    இதைத்தொடர்ந்த தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் நாளை (புதன்கிழமை) முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தூத்துக்குடி மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்த அறிவிப்பு மாவட்டம் முழுவதும் உள்ள கடலோர கிராமங்களில் மீனவ மக்களிடம் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் விரைவாக கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    இது தொடர்பாக ஆங்காங்கே ஒலி பெருக்கி மூலமாகவும் மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளன.

    • 10-க்கும் மேற்பட்ட படகுகளில் காரைக்கால் மீனவர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    • கடல் சீற்றமாக இருந்ததால் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    காரைக்கால் பகுதியில் இருந்து ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த சிவா (வயது 28) என்பவரும் கடந்த 4-ந்தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்று ள்ளனர்.

    இவர்கள் மீன்களை பிடித்து கொண்டு 5-ந்தேதி அதிகாலையில் கரை திரும்பிக்கொண்டிருந்த போது மீனவர் சிவா படகில் இருந்து தவறி கடலில் விழுந்து மூழ்கி மாயமானார்.

    இதைத்தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட படகுகளில் காரைக்கால் மீனவர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றமாக இருந்ததால் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

    புயல் கரையை கடந்ததால் நேற்று காரைக்கால் மீனவர்கள் 10 படகுகளில் கோடியக்கரை கடற்பகுதிக்கு வந்து மாயமான மீனவர் சிவாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இன்னும் தேடும் பணி நடந்து வருகிறது.

    • நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து 700 விசைப்படகுகள், 3ஆயரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க சென்றனர்.
    • ஒரு வாரத்திற்கு பிறகு மீன் பிடிக்க மீன்வளத்துறையினர் அனுமதித்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    வங்கக்கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற நாகை மீனவர்கள் தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என கடந்த ௪-ம்தேதி மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 25 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    மேலும் மாண்டஸ் புயல் கரையை கடந்ததைத் தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று இறக்க ப்பட்டது. மேலும் கடல் சீற்றம் குறைந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு மீன் பிடிக்க மீன்வளத்துறையினர் அனுமதித்துள்ளனர்.

    மேலும் மீன்வளத்துறை மூலம் படகுகளுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று அதிகாலை நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 700 விசைப்படகுகள் 3 ஆயரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க சென்றனர்.

    ஒரு வாரத்திற்கு பிறகு மீன்பிடிக்கச் செல்லும் அக்கரைப்பேட்டை, நாகூர் பட்டினச்சேரி, நம்பியார் நகர், செருதூர், காமேஷ்வரம் விழுந்தமாவடி, ஆறுக்காட்டுதுறை, கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் அதிக அளவில் மீன் கிடைக்கும் என மகிழ்ச்சியில் சென்றுள்ளனர்.

    • மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
    • 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 70 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

     நாகப்பட்டினம்:

    தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சில அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன.

    இதனால் நாகை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று நாகை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தி வருகின்றனர். அதன்படி மீனவர்களும் கரைக்கு திரும்பினர்.

    இதனால் இன்று நாகை, அக்கரைபேட்மாடை, வேதாரண்யம், வேளாங்கண்ணி உள்பட 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 70 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    700 விசைப்–படகுகள், 3000 பைபர் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்தனர்.

    • ராட்சத அலையால் படகு கவிழ்ந்ததில் மீனவர் விழுந்து தத்தளித்து மாயமானார்.
    • மூழ்கி மாயமான பெருமாளின் உடல் இன்று கொட்டாயமேடு கடற்கரையில் கரை ஒதுங்கி இருந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொட்டாயமேடு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன், இவருக்கு சொந்தமான படகில் அதே கிராமத்தை சேர்ந்த நடராஜன்,பெருமாள், சூரியமூர்த்தி ஆகியோருடன் கடந்த 27-ம் தேதி காலை கொட்டாயமேட்டில் இருந்து மீன் பிடிக்க சென்றனர்.

    கரையில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சில அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலையால் படகு கவிழ்ந்ததில் மீனவர்கள் 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

    இதில் பெருமாள் கடலில் மூழ்கி மாயமானார்.

    நடராஜன், சூரியமூர்த்தி ஆகியோர் கடலில் தத்தளித்தனர்.

    இதனை அறிந்த அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் உடனடியாக நடராஜன், சூரியமூர்த்தியை மீட்டு தாங்கள் வந்த படகில் ஏற்றினர். மேலும் விபத்துக்குள்ளான பைபர் படகை கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனர்.

    இதையடுத்து காயமடைந்த நடராஜன், சூரியமூர்த்தியை அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி கடலோர காவல் குழும போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து மீனவர்கள் உதவியுடன், கடலோர காவல் படை குழும போலீசார் கடலில் மூழ்கி மாயமான பெருமாளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் கடலில் மூழ்கி மாயமான பெருமாளின் உடல் இன்று கொட்டாயமேடு கடற்கரையில் கரை ஒதுங்கி இருந்தது .

    இதனை அறிந்த மீனவர்கள் புதுப்பட்டினம் போலீசார் மற்றும் கடலோர காவல் படைக்கு தகவல் அளித்தனர்.

    தகவலின் பேரில் உடலை கைப்பற்றி போலீசார் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    படகு கவிழ்ந்து கடலில் தவறி விழுந்து உயிரிழந்த பெருமாளுக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தியான கூடம், சிலுவை பாதை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மகிழ்ந்தனர்.
    • மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    இதனால் அந்த பகுதியே குதுகலமானது.

    பேராலயத்தில்நடைபெறும்திருப்பலிகளிலும், பழையமாதாஆலயம், நடுத்திட்டு, தியான கூடம், சிலுவைபாதை, சிறுவர் பூங்கா, உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று மகிழ்ந்தனர். மேலும் கடற்கரையில் குடும்பத்து டனும், நண்பர்களுடனும் கடலில் நீராடி மகிழ்ந்தனர்.

    இதனால் மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

    கடற்கரையில் அசாம்பாவிதங்கல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • திடீரென மயக்கம் ஏற்பட்டு கடலுக்குள் தவறி விழுந்துள்ளார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே உள்ள அந்தோணியார்புரம் கொள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 33) மீனவர்.

    இவர் நேற்று கடலுக்குச் சென்று மீன் பிடித்து விட்டு கரை திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு தவறி கடலுக்குள் விழுந்துள்ளார்.

    உடன் வந்த மீனவர்கள் அவரை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவேஉயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சேதுபாவா சத்திரம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இறந்து போன அந்தோணிராஜ்-க்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இச்சம்பவம் அக்கிராமத்தில் மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திரேஸ்புரத்தை சேர்ந்த பிரின்ஸ்டன் மகன் ஜெரோசின் கடலில் மூழ்கி மூச்சு திணறி இறந்துவிட்டார்.
    • இது குறித்து தருவைகுளம் கடலோர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ்புரம் கடல் பகுதியில் இருந்து சங்கு குழி தொழில் செய்வதற்காக நாட்டுப் படகில் 5 தொழிலாளர்கள் புறப்பட்டு சென்றனர். சுமார் 10 கடல் மைல் தொலைவில் சங்கு குளி தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அவர்களுடன் சென்ற திரேஸ்புரத்தைச் சேர்ந்த பிரின்ஸ்டன் மகன் ஜெரோசின்(15) என்பவர் கடலில் மூழ்கி மூச்சு திணறி இறந்துவிட்டார்.

    இது குறித்து தருவைகுளம் கடலோர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    • இடிந்தகரை கடற்கரையில் இருந்து சுமார் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் நாட்டு படகு ஒன்று மிதந்து கொண்டு இருந்தது.
    • மீனவர்கள் உதவியுடன் போலீசார் அந்த நாட்டு படகை மீட்டு வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் இடிந்தகரை கடற்கரையில் இருந்து சுமார் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் நாட்டு படகு ஒன்று மிதந்து கொண்டு இருந்தது. அதில் மீனவர்கள் யாரும் இல்லை.

    இதனை அப்பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பார்த்து கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் தலைமையிலான போலீசார் மீனவர்கள் உதவியுடன் அந்த நாட்டு படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அந்த படகில் லம்பாடி என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. அதில் பதிவெண் எதுவும் எழுதப்படவில்லை.

    கடற்கரையோர மாவ ட்டத்தில் கடலோரத்தில் கட்டப்பட்டிருந்த நாட்டு படகு ஏதேனும் கயிறு அறுந்து காற்றின் வேகத்தால் கடலுக்குள் இழுத்து வரப்பட்டதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த படகின் மதிப்பு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது.

    • நேற்று ஜெயராஜ் அதே பகுதியை சேர்ந்த 5 மீனவர்களுடன் சங்கு குளிக்க சென்றார்.
    • அவர்கள் புதிய துறைமுகம் ஆழ்கடல் பகுதியில் சங்கு குளித்த போது திடீரென ஜெயராஜ் கடலில் மூழ்கினார்.

    தூத்துக்குடி :

    தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுக்குடி அருகே உள்ள சாமுவேல் புரத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது45). சங்குகுழி மீனவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று ஜெயராஜ் அதே பகுதியை சேர்ந்த 5 மீனவர்களுடன் சங்கு குளிக்க சென்றனர். அவர்கள் புதிய துறைமுகம் ஆழ்கடல் பகுதியில் சங்கு குளித்த போது திடீரென ஜெயராஜ் கடலில் மூழ்கினார். அவரை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்த னர்.

    பின்னர் அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தருவை குளம் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி பலியாகும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.
    • இதை தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகூர் சில்லடி கடற்கரைக்கு வரும் வெளியூர் பயணிகள், கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி பலியாகும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன.

    இதை தடுக்கும் வகையில், கடலில் குளிப்பவர்களுக்கான எச்சரிக்கை பலகை நாகூர் முஸ்லிம் ஜமாத் சார்பில் சில்லடி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.

    அதை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வில், நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில் குமார், நாகூர் முஸ்லிம் ஜமாத் தலைவர் ஏ.எஸ்.ஏ.காதர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி செயற் பொறியாளர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    ×