search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seals for shops"

    செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே கோவிலுக்கு சொந்தமான ரூ.12 கோடி நிலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே ஓட்டல் மற்றும் கடைகள் உள்ளன.

    இவை கட்டப்பட்டிருந்த நிலத்தையும், கடைகளையும் தனியார் ஒருவர் அனுபவித்து வந்தார். அதன் வாடகைகளையும் அவருடைய குடும்பத்தினரே வாங்கி வந்தனர்.

    சமீபத்தில் இந்த சொத்தை பங்கு வைப்பது தொடர்பாக குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டது. எனவே கோர்ட்டுக்கு சென்றனர். அப்போது 3 தலைமுறையாக ஒரே குடும்பத்தினர் அனுபவித்து வந்த இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து இந்து அறநிலையத்துறையினர் அந்த நிலத்தை கோவிலுக்கு மீட்டுத்தர வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுப்பிரமணியம், அந்த நிலத்தை இந்து அறநிலையத்துறையினர் மீட்பதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

    இந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள ஓட்டல் மற்றும் கடைகளுக்கான வாடகை பாக்கியை சம்பந்தப்பட்டவர்கள் 6 வாரத்துக்குள் கோவிலுக்கு செலுத்த வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் வாடகை பாக்கி செலுத்தப்படவில்லை.

    எனவே ரூ.12 கோடி மதிப்புள்ள இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் காஞ்சீபுரம் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணி, செயல் அலுவலர் சிவசண்முக பொன்மணி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், காவல் துறையினர் அங்கு சென்றனர்.

    கடைகளை காலி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர். அந்த கடைகளை நடத்தி வந்தவர்கள் போலீஸ் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டனர்.

    பின்னர் அந்த கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. இது கோவிலுக்கு சொந்தமான இடம் என்ற போர்டும் அங்கு வைக்கப்பட்டது.

    இதையடுத்து கடை நடத்தி வந்த அனைவரும் சோகத்துடன் அங்கிருந்து சென்றனர். செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே கோவில் நிலம் மீட்கப்பட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×