என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "search"

    • சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
    • தேர்தல் முடியும் வரையிலும் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களை கவர மது பானங்களை பயன்படுத்துவதை தடுக்க மற்றும் அண்டை மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக மது பானங்களை கடத்துவதை தடுக்கவும், புதுவை பிராந்திய எல்லை பகுதிகளில் 10 இடங்களில் கலால்துறையால் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கனகசெட்டிகுளம், தவளக்குப்பம், முள்ளோடை, சோரியாங் குப்பம், மடுகரை, மதகடிப்பட்டு, திருக்கனூர், சேதராப்பட்டு, அய்யங் குட்டிபாளையம், கோரிமேடு ஆகிய சோதனை சாவடிகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் குழுக்கள் புதுச்சேரியில் இருந்து அண்டை மாநிலத்துக்கும், அண்டை மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கும் வாக்காளர்களுக்கு வழங்க பணம், மதுபானங்கள், பரிசு பொருட்கள் ஆகியவற்றை சட்ட விரோதமாக கடத்துவதை, தவிர்க்க வாகன சோதனையில் தேர்தல் நடக்கும் நாள் வரை ஈடுபட உள்ளது.

    மேலும் இந்த சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    இதற்கிடையே புதுச்சேரி சட்டம்- ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. சட்டம்- ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ் பெக்டர்கள் பங்கேற்றனர்.

    அந்த ஆலோசனை கூட்டத்தின் போது பாராளுமன்ற தேர்தலையொட்டி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் போலீசார் வாகன சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணித்து தடுக்க வேண்டும். தேர்தல் முடியும் வரையிலும் போலீசார் உஷாராக இருக்க வேண்டும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

    • பணத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
    • கார் அரசு மற்றும் தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை தப்புவதில்லை அனைத்தையும் மடக்கி பிடித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை மெயின் ரோட்டில் அழகாபுரி சோதனை சாவடியில் பறக்கும் படை உதவி தேர்தல் அதிகாரி தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னை திருவொற்றியூர் குப்பம் பெட்டினத்தார் கோவில் தெருவில் வசிக்கும் செந்தில்குமார் (வயது 43) என்பவர் மினி லாரியில் மீன் லோடு ஏற்றி வந்தார்.

    அந்த லாரியை பறக்கும் படையினர் மறித்து விசாரித்ததில் கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக பறக்கும் படையினர் அந்த பணத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் அந்த பணம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் பறக்கும் படையினர் சாலைகளில் செல்லும் வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கார் அரசு மற்றும் தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை தப்புவதில்லை அனைத்தையும் மடக்கி பிடித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் ரெயில்களில் மட்டும் இந்த சோதனை நடைபெறுவதில்லை அதற்கு மட்டும் தேர்தல் அதிகாரிகள் பாராமுகமாக இருந்து கண்டு கொள்வதில்லை. இதனால் பணம் கடத்துவோர் ரெயில்கள் மூலம் எளிதாக பணத்தை கடத்தலாம் எனவும் பறக்கும் படையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ரெயில்களிலும் சோதனை இட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியில் முட்டை வியாபாரம் செய்து வருபவர் நாகராஜன்(44). இவர் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தில் இருந்து முட்டை வியாபாரம் செய்துவிட்டு அருப்புக் கோட்டைக்கு வரும் போது தேர்தல் நிலையான கண் காணிப்பு குழு தலைவர் மகாலட்சுமி தலைமையி லான குழுவினர் நாகராஜன் ஆவணமின்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்தை பறிமுதல் செய்து அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் வள்ளிக் கண்ணு முன்பு அந்த பணத்தை சீல் வைக்கப்பட்டு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். 

    • பயங்கரவாத தடுப்பு படையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
    • துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல கும்பலின் தலைவன் பெரும்பாவூர் அனஸ். கொச்சி பியூட்டிபார்லர் துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவர் மீது மேலும் பல வழக்குகள் இருக்கின்றன. இவருடைய கூட்டாளிகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் பயங்கரவாத தடுப்பு படையினர் மற்றும் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அனசின் கூட்டாளியான எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள மஞ்சலி கொச்சுகுன்றும்புரம் பகுதியை சேர்ந்த ரியாஸ் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் 2 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 4 துப்பாக்கிகள், 2 கத்திகள், துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 25 குண்டுகள் இருந்தன.

    அவற்றை சோதனையில் ஈடுபட்ட பயங்கரவாத தடுப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ரியாசின் வீட்டில் இருந்து ரூ8.83 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து ரியாசை போலீசார் கைது செய்தனர். ரியாசின் வீட்டில் கடந்த 8 ஆண்களுக்கு முன்பு இதேபோல் பயங்கர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர்.

    இந்நிலையில் தற்போதும் அவர் துப்பாக்கிகளுடன் சிக்கியிருக்கிறார். அவர் தனது வீட்டில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கிவைத்திருந்தது தொடர்பாக அவரிடம் பயங்கரவாத தடுப்பு படையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று அனசின் மற்றொரு கூட்டாளியான அல்தாப் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து ரிவால்வர் கேஸ், கைவிலங்கு மற்றும் சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அனசின் நெருங்கிய கூட்டாளியான பெரும்பாவூரை சேர்ந்த ஷாஜி பாப்பன் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    மேலும் அனசுடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் கோவை மாவட்டம் ஆனைமலையில் ஒருவரின் வீடு, மேட்டுப்பாளையத்தில் ஒருவரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் பயங்கரவாத தடுப்பு படையினர் அந்த மாவட்ட போலீசாரின் உதவியுடன் சோதனை நடத்தி உள்ளனர்.

    பயங்கரவாத தடுப்பு படையினரின் அதிரடி சோதனையில துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • தொடர் ஆய்வு மேற்கொண்டு விதிமீறல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் அதிகாரிகள்.

    சென்னை:

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

    இதுபோன்ற சம்பவம் இனி ஏற்படாமல் தடுக்கும் விதமாக பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள 4 குழுக்களை அமைத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், தீபாவளி முடியும்வரை பட்டாசு தொழிற்சாலைகளில் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

    வருவாய், தீயணைப்புத்துறை, தொழிலக பாதுகாப்பு உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும். தொடர் ஆய்வு மேற்கொண்டு விதிமீறல் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
    • 8 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் நேற்று சோதனையிட்டனர்.

    சேலம்:

    சேலத்தை அடுத்த வலசையூரை சேர்ந்தவர் சபரி சங்கர் (35) . இவர் சேலம், தருமபுரி, நாமக்கல் , ஆத்தூர், திருச்சி உள்பட 11 இடங்களில் எஸ்.வி.எஸ். நகை கடை என்ற பெயரில் நகை கடைகளை நடத்தி வந்தார். இதில் கவர்ச்சி கரமான திட்டங்களை அறிவித்து ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் முதலீடு பெற்றார்.

    பின்னர் சில மாதங்களுக்கு முன்பு கடையை பூட்டி விட்டு சுமார் 100 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துவிட்டு தலைமறை வாகிவிட்டார் .

    இது குறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரை புதுச்சேரியில் வைத்து தருமபுரி போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கோவை சிறையில் வைத்து சபரிசங்கரை கைது செய்தனர். பின்னர் கடந்த 24-ந் தேதி சபரிசங்கரிடம் விசாரணை நடத்த 4 நாட்கள் காவலில் எடுத்தனர்.

    தொடர்ந்து சேலம் அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி, ஆத்தூர், தாரமங்கலம் உள்பட 5 இடங்களில் உள்ள எஸ்.வி.எஸ். நகைகடைகளை திறந்து 8 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் நேற்று சோதனையிட்டனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வருவாய்துறையினருடன் இணைந்து கடைகளை திறந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சபரி சங்கரை அந்த கடைகளுக்கு அழைத்து வந்து கடையில் பொருட்களை கணக்கெடுத்தனர். அதில் தங்க நகைகள் பெரிய அளவில் இல்லை என்று கூறப்படுகிறது. 70 கிலோவிற்கு மேல் வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளிக்கட்டிகள் அங்கு இருந்ததாகவும், அதனை பறிமுதல் செய்ததாகவும் போலீசார் கூறி உள்ளனர்.

    தொடர்ந்து சபரி சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, நகை கடைகளில் வேலை செய்த மேலாளர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அவர்களுக்கு கார்களை வாங்கி கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

    இதனால் அவர்கள் கடைகளில் இருந்த நகைகளை அள்ளி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த கடைகளின் மேலாளர்களை பிடித்தால் மேலும் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். 

    • பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • 160 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில் மலேசியா செல்வதற்காக வந்தார். அவரின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தபோது அவர் வைத்திருந்த இரண்டு அட்டைப்பெட்டிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதில் சமையலுக்கு தேவையான அரிசி, பருப்பு வகைகள் இருப்பதாக கூறினார்.

    ஆனால் அந்த அட்டைப்பெட்டிகள் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் அட்டைப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் உயிருடன் 160 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது.

    இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், அந்தப் பயணியை கைது செய்தனர். மேலும் அட்டை பெட்டிகளில் இருந்த நட்சத்திர ஆமைகளையும் பறிமுதல் செய்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    சுங்க அதிகாரிகள் அந்த பயணியின், மலேசியா பயணத்தை ரத்து செய்தனர். விசாரணையில் இந்த நட்சத்திர ஆமைகளை, ஆந்திர மாநிலம் சதுப்பு நிலப்பகுதியில் இருந்து கொண்டு வருவதாகவும், இந்த நட்சத்திர ஆமைகளுக்கு இங்கு ரூ.50 முதல் ரூ. 100 வரையில் விலை ஆனால் மலேசியா நாட்டில் இந்த நட்சத்திர ஆமைகள் ரூ.5 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்குவார்கள் என்று தெரிவித்தார்.

    மேலும் அங்குள்ள வீடுகளில் நட்சத்திர ஆமைகள் வளர்க்கப்படுகின்றன. நட்சத்திர விடுதிகளில், இறைச்சி மற்றும் சூப்புக்காகவும், மருத்துவ குணமுடைய நட்சத்திர ஆமைகளை, மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்துவதால் கடும் கிராக்கி இருப்பதாக தெரிவித்தார்.

    பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    • மிக முக்கியமான இடங்களில் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை நடத்தப்படுகிறது.
    • சென்னை எழும்பூா், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    குடியரசு தினம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    குடியரசு தினத்தில் இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய விமானப்படை உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு படைகளின் அணிவகுப்பு தலைநகர் டெல்லியில் நடைபெறுவது வழக்கம். இது இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதமாக நடத்தப்படும்.

    அந்தவகையில் நாளை நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவத்தின் போா் கண்காணிப்பு அமைப்பு முறையான 'சஞ்சய்', டி.ஆர்.டி.ஓ.வால் உருவாக்கப்பட்ட தரையில் உள்ள இலக்குகளை குறிவைத்து தாக்கும் 'பிரளய்' ஏவுகணை முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட உள்ளது.

    மேலும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 16 அலங்கார ஊா்திகளும் மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களைச் சோ்ந்த 15 அலங்கார ஊா்திகளும் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளன.

    இதுதவிர 'பன்முனைத் தாக்குதல்களை தடுக்கும் பல அடுக்கு பாதுகாப்பு ' என்ற கருப்பொருளுடன் டி.ஆர்.டி.ஓ. தனக்கென தனி அலங்கார ஊா்தியை காட்சிப்படுத்த உள்ளது.

    இதில் தரையில் இருந்து வான் இலக்குகளை விரைந்து தாக்கும் ஏவுகணை, கடல், வானம் மற்றும் தரை என பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கண்டறியும் வான்வழி முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, ஆளில்லா விமானங்களை கண்டறிந்து அழிக்கும் ரேடாா், 'ஆருத்ரா' ரேடாா், மின்னணு போா்க்கள அமைப்பான 'தாராசக்தி', இந்தியாவின் முதல் நீண்ட தூர ஹைபா்சோனிக் ஏவுகணை, குறைந்த எடையுடைய இலகுரக குண்டு துளைக்காத உடைகள், 'ஜோராவா்' பீரங்கி உள்ளிட்டவை காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

    சி-130 ஜே சூப்பா் ஹொ்குலிஸ், சி-295, சி-17 குளோப் மாஸ்டா், பி-81, எம்ஐஜி-29, எஸ்யு-30 உள்ளிட்ட போா் விமானங்களும் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளன. முதல் முறையாக முப்படையின் ஊா்தியும் இந்த அணி வகுப்பில் இடம்பெற உள்ளது.

    இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறாா்.

    76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, டெல்லி காவல்துறை 1,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் நகர மக்களுக்கு உதவுவதற்காக தேசிய தலைநகர் முழுவதும் சுமார் 35 உதவி மையங்கள் உள்ளிட்ட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    இந்த ஆண்டு பாதுகாப்பு நெறிமுறைகள் ஆறு அடுக்குகளை உள்ளடக்கியது என்றும், காவல்துறைக்கு ஒத்துழைக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. நகரம் முழு வதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    டெல்லியில் நடப்பது போல மாநில தலைநகரங்களிலும் நாளை குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.



    குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக காவல் துறை மாநிலம் முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்தி உள்ளது. குறிப்பாக பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மாா்க்கெட்டுகள், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    மிக முக்கியமான இடங்களில் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. இதே போல், மாநிலம் முழுவதும் ரெயில் நிலையங்களில், காவல் துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகள், அவா்களின் உடமைகள் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா்.

    சென்னை எழும்பூா், சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதே போல பாதுகாப்பு கருதி, ரெயில்வே தண்டவாளங்களில் ரெயில்வே போலீசாா் ரோந்து செல்கின்றனா்.

    மாா்க்கெட்டுகள், பஸ் நிலையங்கள் ஆகியவற்றில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசாா் அடிக்கடி சோதனையும் நடத்தி வருகின்றனா். சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரியும் நபா்களின் அடையாள அட்டை, முகவரி ஆகியவற்றை பெற்ற பின்னரே அவா்களை காவல் துறையினா் விடுவிக்கின்றனா்.

    மாநிலத்தில் கடலோரங்களிலும் கண்காணிப்பை பலப்படுத்தும்படி போலீசாருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டு உள்ளாா். அதன்படி, தமிழகத்தில் கடலோரப் பகுதிகளிலும் போலீசாா் கண்காணிப்பை அதிகரித்துள்ளனா்.

    24 மணி நேரமும் போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீசாா் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனா்.

    சென்னை முழுவதும் காவல்துறையின் கண்காணிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினவிழாவையொட்டி, சில நாள்களாக 10 ஆயிரம் போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

    சென்னையின் கடற்கரையோரப் பகுதிகளிலும் போலீசாா் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா். சந்தேகத்துக்குரிய நபா்களிடம் போலீசாா் தீவிர விசாரணை செய்கின்றனா்.

    தமிழக அரசின் சாா்பில் குடியரசு தின விழா நடைபெறும் மெரீனா கடற்கரையின் காமராஜா் சாலையை இரு வாரங்களுக்கு முன்பே போலீசாா் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

    கோயம்பேடு மாா்க்கெட், புறநகா் பேருந்து முனையம் ஆகியவற்றில் பயணிகளை போலீசாா் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனா். சென்னையில் கடந்த இரு நாள்களாக போலீஸ் கண்காணிப்பும், ரோந்தும் அதிகரிப்பட்டுள்ளது. இரவில் முக்கியமான சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் போலீசாா் தீவிர வாகன சோதனையும் செய்து வருகின்றனா். நகரின் உள்ள ஹோட்டல்கள், விடுதிகள், மேன்சன்கள் ஆகியவற்றில் போலீசார் திடீா் சோதனை நடத்தி வருகின்றனா்.

    பாதுகாப்பு கருதி தமிழக அரசின் சாா்பில் குடியரசு தின விழா நடைபெறும் மெரீனா கடற்கரை, கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து மெரீனா கடற்கரை வரை, ஆழ்வாா்பேட்டையில் உள்ள முதல்வா் வீட்டில் இருந்தும் மெரீனா கடற்கரை வரை இன்றும், நாளையும் சிவப்பு மண்டலமாக சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.

    இதன்படி இந்தப் பகுதிகளில் டிரோன், ஹாட் ஏா் பலூன்கள், பாரா கிளை டா்ஸ், டிரோன்கள் உள்ளிட்ட அனைத்து விதமான எலக்ட்ரானிக்ஸ், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • கெத்தல்ரேவ் பகுதியில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா்.
    • புகாரின்பேரில் தாராபுரம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம் : 

    தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூா் ஊராட்சிக்கு உள்பட்ட குடியிருப்பில் வசித்து வருபவா் ஜெயசுதா (வயது 38). இவா் கெத்தல்ரேவ் பகுதியில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், ஜெயசுதா வீட்டின் அருகில் உள்ள மளிகைக்கடைக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் ஜெயசுதா அணிந்திருந்த 5 பவுன் தாலிக்கொடியைப் பறித்து விட்டு தப்பிச் சென்றனா். இது குறித்து ஜெயசுதா கொடுத்த புகாரின்பேரில் தாராபுரம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது.
    • 3 டன்களுக்கு மேல் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சுவாமிமலை:

    திருவிடைமருதூர் அருகே அம்மாசத்திரத்தில் குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து கடைகளில் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின்படி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனையில் குடோனில் இருந்த 3 டன்களுக்கு மேல் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக திருவிடைமருதூர் இன்ஸ்பெக்டர் அம்மாசத்திரம் சந்தன கணபதி ெதருவை சேர்ந்த செல்வகுமார் (வயது 43) மற்றும் நேரு நகர், மல்லிகை வீதியை சேர்ந்த வெங்கடேசு (43) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாஞ்சூர் மற்றும் நாகூர் பகுதிகளில் உள்ள 7 கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
    • ஒரு கடையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்ததற்காக ரூ.5000 அபராதம் விதித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் வாஞ்சூர் மற்றும் நாகூர் பகுதிகளில் உள்ள 7 கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையில் இரண்டு கடைகளில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர்.

    அதனை கைப்பற்றி அந்த இரண்டு கடைகளுக்கும் சீல் வைத்தனர். மேலும் ஒரு கடையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்ததற்காக ரூ.5000 அபராதம் விதித்தனர்.

    இது போன்ற தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் எச்சரிக்கை விடுத்தார்.

    • எங்கள் வீட்டில் சோதனை நடத்தியது அத்துமீறிய செயல் என 7 பேர் குடும்பத்தினர் பேட்டியளித்துள்ளனர்.
    • செல்போன்கள், லேப்-டாப்கள், சிடி, புத்தகங்கள், ரூ.3 லட்ச ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்றதாக கூறினர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை 7 வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இது இஸ்லாமியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் சோதனை நடத்தப்பட்ட 7 பேர் குடும்பத்தினர் இன்று காலை கோரிப்பாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    எங்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தினர். அதன் பிறகு 7 பேரையும் தரதரவென இழுத்துச் சென்றனர். அவர்கள் தற்போது எங்கு உள்ளனர்? என்ற விவரம் கூட எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

    எங்கள் வீட்டில் இருந்து செல்போன்கள், லேப்-டாப்கள், சிடி, புத்தகங்கள், ரூ.3 லட்ச ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்றனர்.

    தேசிய புலனாய்வு முகமையின் அத்துமீறல் நடவடிக்கையை கண்டித்து மதுரை நெல்பேட்டை அண்ணா சிலை பகுதியில், இன்று மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • மாணவரின் தந்தை ஒருவர் தலைமையாசிரியரிடம் கேட்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.
    • குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க காவல்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி இருப்பது குறித்து அப்பள்ளியில் பயிலும் மாணவரின் தந்தை ஒருவர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்பது போன்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.

    இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற போதை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க காவல்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றது.

    அதன்படி சீர்காழி காவல்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட போதை, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

    சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், டி. எஸ். பி. பழனிசாமி, சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொண்ட குழுவினர்.

    இவ்வாறு 50 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கண்டனர். அப்போது சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டு, புத்தூர் செங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தபோது அங்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த நான்கு கடைகளுக்கும் பூட்டி சீல் வைத்தனர்.

    ×