search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "secret inspection"

    கவர்னர் கிரண்பேடி இன்று காலை கோரிமேட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவையில் குற்ற சம்பவங்கள் எது நடந்தாலும் பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறையான 100 மற்றும் காவல் தொடர்பான புகார் வாங்க மறுத்தல், லஞ்சம் பெறுதல் போன்ற ரகசிய புகார்களை கவர்னர் உருவாக்கிய 1031 என்ற தொலைபேசியில் பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

    இந்த தொலைபேசியில் அளிக்கப்படும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக எழுந்துள்ளது.

    இது சம்மந்தமான புகாரின் அடிப்படையில் கவர்னர் கிரண்பேடி இன்று காலை கோரிமேட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்,

    கடந்த முறை ஆய்வு செய்தபோது புகார் சம்மந்தமாக கம்ப்யூட்டரில் பதிவு செய்ய கூறியிருந்தார். அவற்றை ஏன் இன்னும் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். இதுவரை பெற்ற புகார்கள் எவ்வளவு? அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினார்.

    அதன் பின் 1031-க்கு வரும் புகார்கள் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கண்காணிக்க வேண்டும் என கூறினார்.

    புகார் கொடுப்பவர்களின் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின்போது டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், கவர்னரின் தனி செயலர் சீனிவாஸ், ஆகியோர் உடனிருந்தனர்

    ×