search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "secular certificate"

    முஸ்லிம் லீக் கட்சியின் மதவாத, பிரிவினைவாத அரசியலுக்கு ‘மதச்சார்பின்மை’ என்ற சான்றிதழ் அளிக்க ராகுல் காந்தி முயற்சிப்பதாக மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி குறிப்பிட்டுள்ளார். #Rahul #secularcertificate #communalpolitics
    திருவனந்தபுரம்:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி எம்.பி.யாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி வகித்து வருகிறார். இந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடும் அவர் கேரள மாநில காங்கிரஸ் பிரமுகர்களின் வற்புறுத்தலுக்கிணங்க அங்குள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். 

    ராகுல் காந்தியை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் துஷார் வெள்ளப்பள்ளி களமிறக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், வயநாடு தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மத்திய  மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, முஸ்லிம் லீக் கட்சிக்கு ராகுல் காந்தி மதச்சார்பின்மை சான்றிதழ் அளிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்திய யூனியன் முஸ்லிக் லீக் போன்ற மதவாத கட்சிகளுடன் மீண்டும் காங்கிரஸ் கட்சி கைகோர்த்துள்ளது.

    நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் முதல்முறையாக கடந்த 2004-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் முஸ்லிம் லீக்கை முன்னர் அங்கம் வகிக்கச் செய்து, அங்கீகரித்தது போல் இப்போதும் ராகுல் காந்தி தலைமையிலான இந்த கட்சி முஸ்லிம் கட்சியின் மதவாத அரசியலை நியாயப்படுத்தும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

    முஸ்லிக் லீக்கின் மதவாத, பிரிவினைவாத அரசியலுக்கு ‘மதச்சார்பின்மை' என்ற சான்றிதழை அளிக்க முயற்சிக்கும் ராகுல் காந்தி வெறும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக நேற்று வயநாட்டுக்கு வரவில்லை. 

    மதவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை பரப்பும் நோக்கத்தில் அவர் இங்கு வந்து சென்றுள்ளார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ எனவும்  முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். #Rahul #secularcertificate #communalpolitics #divisivepolitics #MuslimLeague #Naqvi
    ×