என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Security Scheme"
- பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
- மேலும் விபரங்களுக்கு, 91500 57749 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சிவகங்கை
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிவ கங்கை மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2-வது செவ்வாய்கி ழமை சிவகங்கை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டப் பயனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.
அதில் முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் இ-சேவை மையம் மூலமாக விண்ண் பித்து பல வருடங்கள் கடந்தும் வைப்புத்தொகை ரசீதுகள் கிடைக்கப் பெறாமல் உள்ள பயனாளி கள் ஒப்புகை ரசீதுடன் கூடிய இணைய வழி விண்ணப்பத்துடனும், 18 வயது பூர்த்தியடைந்தும் முதிர்வுத் தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகளும், வைப்புத்தொகை பத்திர நகல், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் பயனாளியின் நடப்பில் உள்ள வங்கிக் கணக்கு புத்தக முகப்பு நகல், பயனாளியின் (தாய் மற்றும் மகள்) 2 பாஸ்போர்ட் புகைப்படம் ஆகிய உரிய சான்றுகளுடன், இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, 91500 57749 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.