என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » security withdrawn
நீங்கள் தேடியது "security withdrawn"
காஷ்மீரின் புல்வாமா தாக்குதலின் விளைவாக தற்போது 18 பிரிவினைவாதிகள் மற்றும் 155 அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. #PulwamaAttack #SecurityCancelled
ஜம்மு:
அதன்படி, பிடிபி தலைவர் வாகித் பர்ரா, ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபாசில், எஸ்ஏஎஸ் கிலானி, அகா சையது மொஸ்வி, மவுலவி அப்பாஸ் அன்சாரி, யாசின் மாலிக், சலீம் கிலானி, ஷாகித் உல் இஸ்லாம், சாபர் அக்பர் பட், ஃபரூக் அகமது கிச்லூ, மஸ்ரூர் அப்பாஸ் அன்சாரி, அகா சையது அபுல் ஹுசைன், அப்துல் கனி ஷா, முகமது முசாதுஇக் பட் உட்பட 155 அரசியல்வாதிகள், 18 பிரிவினைவாத தலைவர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. #PulwamaAttack #SecurityCancelled
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களான மிர்வாயிஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் உள்ளிட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்ய உள்ளதாக அம்மாநில அரசு கடந்த பிப்ரவரி 17 அன்று அறிவித்திருந்தது. இதன்படி 6 பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஜம்மு காஷ்மீரின் தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது மேலும் பல தலைவர்களின் பாதுகாப்பை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, பிடிபி தலைவர் வாகித் பர்ரா, ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபாசில், எஸ்ஏஎஸ் கிலானி, அகா சையது மொஸ்வி, மவுலவி அப்பாஸ் அன்சாரி, யாசின் மாலிக், சலீம் கிலானி, ஷாகித் உல் இஸ்லாம், சாபர் அக்பர் பட், ஃபரூக் அகமது கிச்லூ, மஸ்ரூர் அப்பாஸ் அன்சாரி, அகா சையது அபுல் ஹுசைன், அப்துல் கனி ஷா, முகமது முசாதுஇக் பட் உட்பட 155 அரசியல்வாதிகள், 18 பிரிவினைவாத தலைவர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. #PulwamaAttack #SecurityCancelled
காஷ்மீரில் இருக்கும் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதையடுத்து, பாதுகாப்பு தேவையில்லை என ஒரு அமைப்பு கூறியுள்ளது. #Pulwamaattack #Securitywithdrawn #MirwaizUmarFarooq
ஜம்மு:
இந்த ஆலோசனைக்கு பின்னர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுபவர்கள், வதந்திகளை பரப்புபவர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் மதம் மற்றும் அரசியல் சார்புகளைப்பற்றி கருதாமல் கருணை காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவிட்டார்.
முன்னதாக, பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை மற்றும் பயங்கரவாதிகளிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர். அவர்களுக்கான பாதுகாப்பு விலக்கப்படும் என கடந்த 15-ம் தேதி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களான மிர்வாயிஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் உள்ளிட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு நேற்று அறிவித்தது.
மேலும் இது குறித்து பிரிவினைவாத தலைவர் அப்துல் கனிபட் கூறுகையில், ‘எனக்கு காஷ்மீர் அரசு தான் பாதுகாப்பு தந்தது. நான் பாதுகாப்பு கேட்கவில்லை. எனக்கு காஷ்மீர் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். பாகிஸ்தானிற்கும் இந்தியாவிற்கும் இடையே விரைவில் போர் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. இந்திய அரசு முதலில் இதனை கவனிக்க வேண்டும்’ என கூறினார். #Pulwamaattack #Securitywithdrawn #MirwaizUmarFarooq
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து நாட்டில் நிலவிவரும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து உளவுத்துறை மற்றும் காவல்துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, ஜம்முவில் உள்ள ராஜ்பவனில் காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் அம்மாநில உள்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பின்னர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுபவர்கள், வதந்திகளை பரப்புபவர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் மதம் மற்றும் அரசியல் சார்புகளைப்பற்றி கருதாமல் கருணை காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு காஷ்மீர் கவர்னர் உத்தரவிட்டார்.
முன்னதாக, பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை மற்றும் பயங்கரவாதிகளிடம் பணம் வாங்கும் கைக்கூலிகள் காஷ்மீரில் உள்ளனர். அவர்களுக்கான பாதுகாப்பு விலக்கப்படும் என கடந்த 15-ம் தேதி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களான மிர்வாயிஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் உள்ளிட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு நேற்று அறிவித்தது.
இதனையடுத்து ஹரியத் பிரிவினைவாத அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்த போலீஸ் பாதுகாப்பால் காஷ்மீர் விவகாரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்பட போவதில்லை.
தலைவர்களின் வீடுகளின் முன் பாதுகாப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான். ஹரியத் தலைவர்கள் யாரும் இந்த பாதுகாப்பை எதிர்பார்க்கவில்லை. இதனை காஷ்மீர் அரசு தான் அளித்து வந்தது. ஏற்கனவே ஹரியத் தலைவர்கள் இந்த பாதுகாப்பை எப்போது வேண்டுமானாலும் நீக்கிக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தனர்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இது குறித்து பிரிவினைவாத தலைவர் அப்துல் கனிபட் கூறுகையில், ‘எனக்கு காஷ்மீர் அரசு தான் பாதுகாப்பு தந்தது. நான் பாதுகாப்பு கேட்கவில்லை. எனக்கு காஷ்மீர் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். பாகிஸ்தானிற்கும் இந்தியாவிற்கும் இடையே விரைவில் போர் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. இந்திய அரசு முதலில் இதனை கவனிக்க வேண்டும்’ என கூறினார். #Pulwamaattack #Securitywithdrawn #MirwaizUmarFarooq
×

X