என் மலர்
நீங்கள் தேடியது "security"
- ஓடும் பஸ்ஸில் ஏறவோ இறங்கவோ மாட்டேன், பஸ் படிகளில் நின்று பயணிக்க மாட்டேன்
- பல்வேறு விதிமுறைகள் குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
திருவையாறு:
திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலை பள்ளி வளாகத்தில் பள்ளிக் குழந்தைகள் கடைபிடிக்க வேண்டிய சாலை போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் மண்டல இயக்குநரகத்தின் ஆலோசனைப்படி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய சாலைப் போக்குவரத்து விதிகள் பற்றிய அறிவுரைகளும் உறுதிமொழி ஏற்பும் தொடர்நது இப்பள்ளியில் வழங்கப்படுகிறது.
பள்ளிசெயலர் ரஞ்சன்கோபால் ஆலோசனையின்படி நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் அனந்தராமன் சாலைப் போக்குவரத்து விதிமுறை உறுதிமொழிகளை வாசிக்க, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்.
சாலையின்இடது புறமாக நடந்து செல்வேன், சாலையின் குறுக்கே கடந்து செல்லாமல் உரிய நடைபாதைகளில் மட்டுமே கடந்து செல்லுவேன், ஓடும் பஸ்ஸில் ஏறவோ இறங்கவோ மாட்டேன், பஸ் படிகளில் நின்று பயணிக்க மாட்டேன்,ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகே மோட்டார் வாகனங்களை ஓட்டுவேன், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிவேன், பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பெற்றோரையும் தலைக்கவசம் அணிய வலியுறுத்துவேன் மற்றும் பள்ளிக்கு உரிய நேரத்திற்கு முன்னதாகவே செல்லுவேன் முதலிய 25க்கு மேலான உறுதிமொழிகள் ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
- சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள்.
- திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் மப்டியில் நின்று கண்காணிப்பு.
தஞ்சாவூர்:
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 4 மாவட்டங்களிலும் சேர்த்து 3000-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை பெரிய கோவில், மணிமண்டபம் பூங்கா, வேளாங்கண்ணி தேவாலயம், மயிலாடுதுறை அமிர்தகடேஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜர் கோவில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோவில்கள், சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர அங்கு சந்தேகப்படும்படி யாராவது நடமாடுகிறார்களா எனவும் கண்காணித்து வருகின்றனர். மேலும் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக ஹோட்டல்களில் பாதுகாப்பை உஷா ர்படுத்தி உள்ளனர். மேலும் குடித்துவிட்டு வாகனம் யாராவது ஓட்டுகிறார்களா எனவும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பஸ், ரெயில் நிலையங்கள், கடைவீதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் மப்டியில் நின்று கண்காணித்து வருகின்றனர். நாளை வரை இந்த பாதுகாப்பு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஊராட்சி அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி, எந்தவித உரிமையும் இன்றி பிரார்த்தனைக் கூட்டம் நடத்தி வருகிறார் .
- பிரார்த்தனை கூடம் நடத்தக்கூடாது என்று அவினாசி தாசில்தார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் .
அவினாசி :
அவினாசி அருகே பொங்கல் பண்டிகை கொண்டாடும் தருணத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஜெபக்கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டுமென கலெக்டருக்கு பொதுமக்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் செம்பியநல்லூர் ஊராட்சி தாசம்பாளையம் நேரு நகர் பகுதியில் ஒருவர் ஊராட்சி அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி அந்த இடத்தில் எந்தவித உரிமையும் இன்றி பிரார்த்தனைக் கூட்டம் நடத்தி வருகிறார் .அங்கு பிரார்த்தனை கூடம் நடத்தக்கூடாது என்று அவினாசி தாசில்தார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் .அதையும் மீறி பிரார்த்தனை கூட்டம் நடத்தி வருகிறார்.ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நேரு நகர் பொதுமக்கள் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.எங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மேற்படி நபர் பிரார்த்தனை நடத்த வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வந்து தங்க வைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். பொங்கல் பண்டிகை காலத்தில்நாங்கள் ஏற்பாடு செய்துள்ள விளையாட்டுப் போட்டிகளில் கலவரத்தை ஏற்படுத்த இருப்பதாக தெரிய வருகிறது. எனவே கலவரத்தை ஏற்படுத்த இருக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் வேண்டும்.
- பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை அவுரி திடலில் சிக்கல் வேளாண்மை அறிவியல் மையம், தானம் அறக்கட்டளை சார்பில் பெண்கள் முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ரகு தலைமை, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தாங்கினார்.
நாகை புதிய பஸ் நிலையம் அவுரி திடலில் தொடங்கிய பேரணியானது நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் அருகே நிறைவடைந்தது.பெண் குழந்தைகள் உயிர் வாழ்வதையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தல், பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துதல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு சட்டத்தினை கடுமையாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இது நாகை, சீர்காழி, காரைக்கால், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் தானம் அறக்கட்டளை மண்டல ஒருங்கிணைப்பாளர் சரவணன் நன்றி கூறினார்.
- திருமலைகிரி பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற குமாபிஷேக விழாவின் போது, அந்த பகுதியைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாமி கும்பிட சென்றபோது, அவரை மற்றொரு சமுதாயத்தினர் தடுத்து நிறுத்தினர்.
- ஆபாச வார்த்தைகளால் திட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கோவில் பூட்டப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற குமாபிஷேக விழாவின் போது, அந்த பகுதியைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாமி கும்பிட சென்றபோது, அவரை மற்றொரு சமுதாயத்தினர் தடுத்து நிறுத்தினர்.
மேலும் அந்த இளைஞரை, கோவிலினுள் நுழைந்ததற்காக பொதுமக்கள் முன்னிலையில் தி.மு.க. பிரமுகர் மாணிக்கம் ஆபாச வார்த்தைகளால் திட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கோவில் பூட்டப்பட்டது.
மேலும் இளைஞரை திட்டிய மாணிக்கம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக அறிவித்தது. இந்த நிலையில் இளைஞர் கொடுத்த புகாரின் பேரில், மாணிக்கம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே அனைத்து சமுதாய மக்களும், கோவிலில் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ராஜா தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் உதவியோடு நேற்று அந்த பகுதியை சேர்ந்த பட்டியல் இன மக்கள் அழைத்து வரப்பட்டனர். கடந்த சில நாட்களாக பூட்டப்பட்டிருந்த கோவில் திறக்கப்பட்டு, கோவிலுக்குள் அவர்கள் அழைத்து செல்லப்பட்டு சாமி தரிசனம் செய்ய வைத்தனர். இந்த நிலையில் இதை உறுதிப்படுத்தும் வகையில், இன்று பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், பெண்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கட்சியினர் சம்பந்தப்பட்ட மாரியம்மன் கோவிலுக்குள் சென்று பூஜை செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து இளைஞர்கள் கோவிலுக்குள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதற்கிடையே அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
- உரிய பாதுகாப்புடன் இருப்பதாக வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
திருவாரூர்:
வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீசாருக்கு உத்தர விட்டுள்ளார்.
தங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது குறித்து தகவல் தெரிவிக்குமாறும் அரசு சார்பில் வட மாநில தொழிலாளர்களுக்காக தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் ஜவுளிக்க டைகள், உணவகங்கள், ரைஸ்மில்கள்உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கட்டிட தொழில்கள் என பீகார், ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3 ஆயிரத் திற்கும் மேற்பட்டதொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களது பாது காப்பினை உறுதி செய்யு மாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் காவல்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளார்.
அதன் பேரில் 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளனவா, மிரட்டல்கள் இருந்து வருகிறதா, தாக்கப்படுகிறார்களா என கேட்டனர்.
அதன்படி திருவாரூர் நகரம், மத்திய பல்கலைக்கழகம், வண்டம்பளையம் தனி யார்நவீன அரிசி ஆலை மற்றும்நீடாமங்கலம், மன்னார்குடி, பரவாக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தாங்கள் அனைவரும் உரிய பாதுகாப்புடன் இருந்து வருவதாகவட மாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் தொடங்க உள்ள பிளஸ்-2 தேர்வுக்காக மொத்தம் 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- தேர்வு பணிகளில் சுமார் 1,500 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
நெல்லை:
தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை மறுநாள்(திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி மாவட்டந்தோறும் தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் தொடங்க உள்ள பிளஸ்-2 தேர்வுக்காக மொத்தம் 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 184 பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-2 மாணவ, மாணவிகள் சுமார் 22 ஆயிரம் பேர் 69 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
இதுதவிர பாளை மத்தியச்சிறை, சேரன்மகாதேவி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி, ஏர்வாடியில் தனியார் மெட்ரிக் பள்ளி, பாளை தனியார் பள்ளிகளில் 4 தனியார் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கும் தனித்தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
பறக்கும் படை
தேர்வையொட்டி வினாத்தாள்கள் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளில் வைக்கப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்வு பணிகளில் சுமார் 1,500 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
தேர்வு நாளன்று காலை 7 மணிக்கு வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டு தேர்வு மையங்களில் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்காக 16 வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தேர்வில் முறைகேடுகள், தவறுகள் நடக்காமல் இருக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் 7 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர நிலையான படையும் ஒவ்வொரு மையத்திற்கும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி ஆய்வு செய்து வருகிறார்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை பிளஸ்-1 பொதுத்தேர்வை 16, 499 பேரும், பிளஸ்-2 தேர்வை 18,299 மாணவர்களும் எழுத உள்ளனர். இதற்காக 2 தனிதேர்வு மையங்கள் உள்பட மொத்தம் 64 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த 2 தேர்வுகளுக்காக 1,322 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தனித்தேர்வு மையங்களில் சிறை கைதிகள் உள்பட பலர் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
கட்டுப்பாடுகள்
தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், கண்கா ணிப்பு ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் உள்ள விதிகளை மாண வர்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மயிலாடுதுறை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
- வட மாநில தொழிலாளர்களை அமர வைத்து ஒருமைப்பாட்டை மேம்படுத்து வகையில் திமுக சார்பில் சமபந்தி உணவு பரிமாறினர்.
தரங்கம்பாடி:
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக எழுந்த புரளியைத் தொடர்ந்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு மாவட்டங்களில் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்ப குடும்பமாக வசித்து வருகின்றனர்.
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திமுக சார்பில் வட மாநில தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாட்டு சமபந்தி நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் வட மாநில தொழிலாளர்களுக்கு மாலை போட்டு சால்வை அணிவித்து கௌரவித்தார்.
தொடர்ந்து வட மாநில தொழிலாளர்களை அமர வைத்து ஒருமைப்பாட்டு சமபந்தி விருந்தாக ஒருமைப்பாட்டை மேம்படுத்து வகையில் திமுக சார்பில் சமபந்தி உணவு பரிமாறினர்.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் செல்வமணி, நகர செயலாளர் குண்டுமணி, திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பேச்சிமுத்து இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
- மாடசாமி என்பவர் பேச்சிமுத்துவை மிரட்டி செல்போனை பறித்து சென்றார்.
நெல்லை:
சிவந்திப்பட்டியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது65). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று பணியில் இருந்த பேச்சிமுத்துவிடம் நாலாட்டின்புதூரை சேர்ந்த மாடசாமி (33) என்பவர் மிரட்டி செல்போனை பறித்து சென்றார். இது தொடர்பாக அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தார்.
- ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
- காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
முத்துப்பேட்டை:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வட்டார தலைவர் முருகையன், செயலாளர் எலிசபெத் ராணி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், சத்துணவு திட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- பேரணியானது பிரதான சாலை வழியாக சென்று அண்ணா சிலை அருகே நிறைவுபெற்றது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அடுத்த தண்டலைச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நேற்று தொடங்கி வருகிற 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.
தொடக்க நிகழ்ச்சியாக நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அங்கம்மாள் தலைமை தாங்கினார்.
நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேரணியை தொடங்கி வைத்தனர்.
பேராசிரியர் திலகர், பிரைட் பீப்புள்ஸ் நிறுவனர் பிரபாகரன் மற்றும் பேராசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பலர் பேரணியில் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம் செய்திருந்தார்.
பேரணியானது பிரதான சாலை வழியாக சென்று அண்ணா சிலையில் நிறைவுபெற்றது.
- பூ பல்லாக்கு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.
- மின் தட்டிகள் மற்றும் மேல தாளங்கள், நாட்டிய குதிரைகள் ஊர்வ லத்தில் இடம்பெற்றன.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை தெற்குதெரு அரபுசாஹிப் ஆண்டவர் பள்ளிவாசலில் 535-ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று தொடங்கியது.
முன்னதாக விழா கமிட்டியினர் முன்னிலையில் கந்தூரி விழா ஊர்வலத்தை முத்துப்பேட்டை ஜாம்புவா னோடை தர்கா முதன்மை அறங்காவலரும், தமிழக தர்காக்கள் முன்னேற்ற பேரவை நிறுவன தலைவருமான எஸ்.எஸ்.பாக்கர்அலி சாஹீப் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து, அரபு சாஹிப் ஆண்டவர் பள்ளிவா சலில் இருந்து கந்தூரி பூ பல்லாக்கு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.
இதில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட 2 பூப்பல்லாக்கு, கண்ணாடி களால் அலங்கரிக்கப்பட்ட 2 ரதங்கள், மின் விளக்கு களால் உருவாக்கப்பட்ட ஏராளமான மின் தட்டிகள் மற்றும் மேல தாளங்கள், நாட்டிய குதிரைகள் ஊர்வ லத்தில் இடம்பெற்றன.
ஊர்வலம் பேட்டை ரோடு, முகைதீன் பள்ளி திடல், பட்டுக்கோட்டை சாலை, பங்களா வாசல், நியூ பஜார், பழைய பஸ் ஸ்டான்ட், திருத்துறைப்பூண்டி சாலை வழியாக புதிய பஸ் நிலையம் சென்றது.
பின்னர், அங்கிருந்து பெரிய கடைத்தெரு, மரைக்காயர் தெரு, எஸ்.கே.எம் தெரு வழியாக மீண்டும் பள்ளிவா சலை வந்தடைந்தது.
பின்னர் இரவு 9 மணிக்கு மௌலுத் ஷரீப் மற்றும் துஆ ஓதப்பட்டு புனித கொடி ஏற்றப்பட்டது.
இதில் நூற்றுக்க ணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தையொட்டி திருவாரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.