search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seismograph and Accelerograph"

    • முல்லைபெரியாறு அணையில் நிலநடுக்கத்தை அளவிடும் கருவி பொருத்தவேண்டும் என பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடப்பட்டு வந்தது.
    • அணைப்பகுதியில் நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் கருவியும், நிலச்சரிவு ஏற்படுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் ஆக்ஸிலரோகிராப் கருவிகள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மத்திய நீர்வள ஆணையமுதன்ைம பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையில் மூவர்குழு உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவியாக 5 பேர் கொண்ட துணைக்குழு அமைக்கப்பட்டது.

    மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் தமிழகத்தின் சார்பில் செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள அரசு சார்பில் செயற்பொறியாளர் ஹரிகுமார், உதவிபொறியாளர் பிரசீத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும் சமயங்களில் இக்குழு ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை மூவர் குழுவுக்கு அனுப்பி வைக்கும். அதன்படி கடந்த பிப்ரவரி 25-ந்தேதி அணையில் நீர்மட்டம் 129.50 அடியாக இருந்தபோது துணைக்குழு ஆய்வு மேற்கொண்டது.

    தற்போது அணையின் நீர்மட்டம் 135.90 அடியாக உயர்ந்துள்ள நிலையில் மத்திய துணைக்குழு ஆய்வு மேற்கொண்டது. ஆய்வுக்குபின் குமுளியில் உள்ள கண்காணிப்பு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    முல்லைபெரியாறு அணையில் நிலநடுக்கத்தை அளவிடும் கருவி பொருத்தவேண்டும் என பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடப்பட்டு வந்தது. இந்நிலையில் துணைக்குழு ஆய்வுகூட்டத்தில் அணைப்பகுதியில் நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்ேமாகிராப் கருவியும், நிலச்சரிவு ஏற்படுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் ஆக்ஸிலரோகிராப் கருவிகள் பொருத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகளிடம் துணைக்குழு தலைவர் தெரிவித்தார்.

    இதன்மூலம் பல ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்து திரும்பும்போது மத்திய துணைக்குழுவிடம் விவசாய சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

    இதில் ரூல்கர்வ் முறையை கைவிடவேண்டும், அணையை பலப்படுத்தி 152 அடிவரை நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். காலியாக உள்ள தமிழக பொறியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    பராமரிப்பு பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனு அளித்தனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் காலை நிலவரப்படி 135.75 அடியாக உள்ளது. வரத்து 1448 கனஅடி, திறப்பு 1885 கனஅடி, இருப்பு 6055 மி.கனஅடி.

    வைகை அணை நீர்மட்டம் 58.50 அடி, வரத்து 1813 கனஅடி, திறப்பு 969 கனஅடி, இருப்பு 3324 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.35 அடி, வரத்து 10 கனஅடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 70.35 அடி, வரத்து 11 கனஅடி, திறப்பு 3 கனஅடி.

    ×