search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "senior Airports Authority India officer"

    விமான நிலையங்களை கையாள்வதற்கு டெண்டர் விட்டதில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் உயர் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
    புதுடெல்லி:

    இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தில் செயல் இயக்குனராக (நிதி) இருந்து வந்தவர், ரவிசந்திரன். இவர் ‘டி’ பிரிவு விமான நிலையங்களை கையாள்வதற்கு டெண்டர் விட்டதில், சென்னையை சேர்ந்த ஒரு நிறுவன அதிபரிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்டார். ஆனால் அவர் லஞ்சம் கொடுக்க விரும்பாமல், சி.பி.ஐ.யிடம் புகார் செய்தார். அவரை கையும், களவுமாக பிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டனர்.

    அதன் அடிப்படையில் ரசாயன பவுடர் தடவிய ரூ.2 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அந்த நிறுவனத்தின் அதிபர், நேற்று ரவிசந்திரனிடம் வழங்கினார். அப்போது அங்கே பதுங்கி இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் பாய்ந்து சென்று ரவிசந்திரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சப்பணத்தை கைப்பற்றினர். மேலும், சென்னை மற்றும் டெல்லியில் அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது. அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
    ×