search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Separate book halls"

    • ராணிப்பேட்டையில் ஏற்பாடுகள் தீவிரம்
    • மாணவ, மாணவிகளை பாதுகாப்புடன் அழைத்து வர உத்தரவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற டிசம்பர் மாதம் 3-வது வாரம் புத்தக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசியதாவது:-

    புத்தக கண்காட்சியில் 60-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள் இடம் பெற ஏதுவாக தனித்தனியாக புத்தக அரங்குகள் , தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் உணவுக்கூடம் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை ஏற்படுத்த சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மின்சாரத்துறையின் சார்பாக தடையில்லாத மின்சாரம், பொதுப்ப ணித்துறையின் மூலமாக அரங்குகளில் ஒளிவிளக்கு, ஒளிப்பெருக்கி, மேடை, ஜெனரேட்டர் வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி அதன் உறுதித்தன்மையினை ஆய்வு செய்யப்பட்ட வேண்டும்.

    பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளை பாதுகாப்புடன் புத்தக கண்காட்சிக்கு அழைத்து வர ஏதுவாக பஸ் வசதிகள், நாள்தோறும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், அரசுத் துறைகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேச்சா ளர்களின் பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

    புத்தக திருவிழாவில் அரசு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி அரங்குகளை துறை அலுவ லர்கள் ஒருங்கிணைந்து அமைக்க வேண்டும்.

    தெரியப்படுத்த வேண்டும்

    மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள புத்தக வாசிப்பாளர்கள், மாணவ, மாணவிகள்மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் புத்தக திருவிழா நடை பெறுவது குறித்து தெரியப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் வளர்மதி பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட நூலக அலுவலர் பழனி உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×