search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "September"

    • செப்டம்பர் 30-ந் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்.
    • செப்டம்பர் மாதத்தில் ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் கடந்த 21ந் தேதி 34ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. செப்டம்பர் 30-ந் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய செப்டம்பர் மாதத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு மெகா முகாம் வீதம் 4 முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடங்கில் கைவசம் உள்ள தடுப்பூசி குறித்து துணை இயக்குனர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

    சுகாதாரத்துறையினர் கூறுகையில், மாவட்டத்துக்கு தலா ஒரு லட்சம் முதல் 3 லட்சம் வீதம் 60 லட்சத்துக்கு அதிகமான தடுப்பூசி தமிழகம் முழுவதும் கையிருப்பில் உள்ளது. கடந்தாண்டில் தடுப்பூசி செலுத்தாமல் நடப்பாண்டு துவக்கத்தில் தடுப்பூசி செலுத்தியிருந்தால் கூட இந்நேரம் பெரும்பாலானோர் பூஸ்டர் செலுத்தியிருக்க முடியும்.ஆனால் காலக்கெடு வந்த பின்பும் குறுஞ்செய்தி கிடைத்த பின்பும் பலர் பூஸ்டர் செலுத்தாமல் உள்ளதால் அதனால் மாதம் இரு மெகா முகாம் என்பது மாற்றப்பட்டு செப்டம்பரில் நான்கு முகாம் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றனர்.

    கேரள கன்னியாஸ்திரி கொடுத்த கற்பழிப்பு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. #Jalandharbishop
    கொச்சி:

    கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பிராங்கோ பலமுறை தன்னை கற்பழித்ததாக கன்னியாஸ்திரி குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த புகாரை வைக்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தை உரிய முறையில் விசாரிக்கவில்லை என்றும், வழக்கை நீர்த்து போகச்செய்ய போலீசார் முயல்வதாகவும் கூறி கொச்சியில் கத்தோலிக்க சீர்திருத்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பேராயர் பிராங்கோ மூலக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி சக கன்னியாஸ்திரிகளும் போராடி வருகின்றனர்.



    இதைத்தொடர்ந்து பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில், 19-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே கன்னியாஸ்திரியின் கற்பழிப்பு புகாரை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை எனக்கூறி 3 பேர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அதில் ஒரு மனுதாரர் கோரி இருந்தார்.

    இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது. இதில் போலீசாரின் விசாரணையில் நம்பிக்கை வெளியிட்ட நீதிபதிகள், பேராயரிடம் 19-ந் தேதி போலீசார் நடத்தும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என அறிவித்தனர்.

    இந்த விவகாரத்தில் மனுதாரர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், இந்த சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்பதால், விசாரணைக்கு சிலகாலம் பிடிக்கும் எனவும் தெரிவித்தனர். பின்னர் வழக்கின் விசாரணையை 24-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    முன்னதாக இந்த வழக்கில் இதுவரை எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்து போலீசார் தரப்பில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.  #Jalandharbishop
    பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறவுள்ளது என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #PakistanPresidentElection
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வருபவர் மம்னூன் ஹூசைன். இவரது பதவிக்காலம் செப்டம்பர் மாதம் 9-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறவுள்ளது என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பாகிஸ்தான் நாட்டின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தானின் ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் மாதம் 4-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே, பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    #PakistanPresidentElection
    ரெயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை, அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி முதல் ரத்து செய்ய ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்துள்ளது. #IRCTC #Insurance
    புதுடெல்லி:

    டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் நோக்கில் ரெயில் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) செயல்படுத்தி வந்தது. இந்த திட்டத்தின் கீழ், ரெயில் விபத்தில் உயிரிழக்கும் பயணிகளின் குடும்பத்துக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை இழப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது.

    இதைப்போல ஊனமடையும் பயணிகளுக்கு ரூ.7½ லட்சமும், காயமடைந்தால் ரூ.2 லட்சமும் இழப்பீடு வழங்கப்படுகிறது. மேலும் உடலை எடுத்துச்செல்ல ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.



    இந்த இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை கைவிட ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி முதல் ரெயில் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் கிடையாது என ரெயில்வேத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    அதற்கு பதிலாக இன்சூரன்ஸ் திட்டம் இனிமேல் விருப்ப தேர்வாக அமைகிறது. அதாவது இன்சூரன்ஸ் தேவை என்றால் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே அதை தேர்வு செய்ய வேண்டும்.

    இதற்காக தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டண விவரம் குறித்து இன்னும் சில நாட்களில் ரெயில்வேத்துறை அறிவிப்பு வெளியிடும் எனவும் அந்த அதிகாரி கூறினார்.

    முன்னதாக டெபிட் கார்டு மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, பதிவு கட்டணத்தை ரெயில்வே ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.  #IRCTC #Insurance 
    இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே நீண்ட காலமாக உள்ள பிரச்சினைகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 19-ந்தேதிக்குள் தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. #India #Nepal #ModiVisitNepal
    காட்மாண்டு:

    பிரதமர் மோடி அண்டை நாடான நேபாளத்துக்கு 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று அவர் காட்மாண்டு அருகே பாக்மதி நதிக்கரையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த பசுபதி நாத் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவருக்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதேபோல் மஸ்டாக் மாவட்டத்திக்கு சென்று அங்குள்ள முக்திநாத் கோவிலிலும் சாமி கும்பிட்டார். கடல் மட்டத்தில் இருந்து 12,172 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவில் இந்துக்கள் மற்றும் புத்தமதத்தினர் இருவருக்குமே புனித ஸ்தலமாகும். மோடிக்கு இந்த 2 கோவில்களிலும் கோவில் நிர்வாகம் சார்பில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.



    இதைத்தொடர்ந்து தலைநகர் காட்மாண்டு திரும்பிய மோடி, நேபாள பிரதமர் சர்மா ஒலியுடன் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே நீண்ட காலமாக உள்ள பிரச்சினைகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 19-ந்தேதிக்குள்(2015-ல் நேபாள நாட்டின் புதிய அரசியலமைப்பு சட்டம் அறிவிக்கப்பட்ட தினம்) தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது.

    குறிப்பாக சரக்குகளை கையாளுதல், வர்த்தகம், நேபாளத்துக்கு மேலும் 4 வழித்தடங்களில் விமான போக்குவரத்து, எல்லையில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைத்தல், எரிசக்தி பகிர்வு, டெராய் பகுதியில் 1,000 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைத்தல், உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இந்த குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்வு காணப்படும் என்று இரு நாடுகளின் அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    தனது 2 நாள் நேபாள சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று மாலை மோடி நாடு திரும்பினார்.  #India #Nepal #ModiVisitNepal 
    ×